Saturday, November 5, 2016

உயரம் தாண்டி, சிகரம் எட்டி...கவிஞர் தணிகை

உயரம் தாண்டி, சிகரம் எட்டி...கவிஞர் தணிகை



இது உங்களுக்கு பழைய செய்திதான் ஆனால் எமது கல்லூரி சார்ந்த உடற்கல்வி இயக்குனர் மற்றும் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து சென்று மாரிமுத்து தங்கவேலுவை நாச்சியாம்பட்டி வீட்டில் சந்தித்து வந்தது புதியது. உடன் கபாடிப் போட்டி உலக சாம்பியன்சிப்பை 8 வது முறை வென்ற வீரர்களுக்கு ஆளுக்கு தலா 10 இலட்சம் பரிசு...இவை பற்றி...

கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் செந்தில் குமார், கிரன், சௌந்தர்ராஜன், ஜான் பால் ஆகியோர் மாரியப்பன் தங்கவேலு வீட்டிற்கு சென்று பாராட்டி வந்தனர். தாய் சரோஜாவுடன் மாரியப்பன் தங்கவேலு இவர்களிடம் நல்ல முறையில் கலந்தளாவி இருக்கிறார்.

தமிழக முதல்வர் நோய்வாய்ப் பட்டு மருத்துவ மனையில் இருப்பதால் தமிழக அரசு கொடுப்பதாக சொன்ன 2 கோடி ரூபாய் இன்னும் வந்து சேரவில்லை

இவர்கள் இருந்த பெரிய வடகம்பட்டியில் இருந்து காடையாம்பட்டி அருகில் இவர்கள் குடி பெயர்ந்து தற்போது நாச்சியாம்பட்டி என்னும் கிராமத்திற்கு வந்து சற்று வசதியான வீட்டை வாடகைக்கு குடியமர்த்தி வருவோர் போவோரை சந்தித்து மகிழ்ந்து வருகின்றனர்.

ஏற்கெனவே இருந்த சொந்த ஊரில் இவர்களிடம் பல வாறான நன்கொடை கேட்டு வந்ததாகவும் இவர்கள் தரும் நிலையில் இல்லை என்பதையும் குடும்ப உறவுகளே இவர்களை துன்பப்படுத்தி எப்படி உதாசீனப்படுத்தினர் என்றும், கொட்டாங்குச்சியில் இவர்களுக்கு தேநீர் அளிக்கப்பட்ட வேதனைக் கதையையும் இவரின் தாய் பகிர்ந்து கொண்டிருக்கிறார். மாரியப்பனுக்கு இன்னும் 2 சகோதரர்கள் இருக்கின்றனர். படித்து வருகின்றனர்.

விபத்தில் பறிபோன கால் ஊனத்துடன் மிக உயரம் தாண்டி சிகரம் தொட்ட இந்த வயதில் சிறிய மாமனிதம் இன்னும் தாம் எட்டிய உயரம் பற்றியோ சிகரத்தில் இருப்பது பற்றியோ போதை தலைக்கேறாமல் இருப்பது பெரும் சிறப்பு.

பள்ளி, கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்களும், பெங்களூரின் இவருடைய பயிற்சியாளரும் இவரை இந்த அளவு உயரம் செல்ல உறுதுணையாகி ஊக்கம் அளித்திருக்கின்றனர்.



இவர் தற்போது நிறைய நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார் ஓய்வு இன்றி. வாழ்க மேலும் மேலும் வளர்க.

அடுத்து நமது கபடி அணி நமது தமிழகத்தின் சேரலாதன் உட்பட இந்திய வீரர்களின் அபாரமான திறமையால் எட்டாவது உலகக் கோப்பையை பெற்று ஆளுக்கு 10 இலட்சம் அரசு தரும் ஊக்கப் பணத்தைப் பெற்றிருப்பதாக செய்திகள். ஒரு கோடியாவது கொடுக்க வேண்டுமல்லவா? ஆக பேட்மிண்டன், உயரம் தாண்டல், கபடி இன்னும் இது போன்ற நிறைய விளையாட்டுகள் இன்னும் இந்தியாவில் இருப்பதை கிரிக்கெட் என்ற விளையாட்டு மேகம் மறைக்காதிருப்பதை இந்த அண்மைக்கால விளையாட்டு சாதனைகள் நமக்கு உணர்த்துகின்றன.
Image result for indian kabaddi team


கையால் எவ்வளவு நேரம்தான் சூரியனை மறைத்து விட முடியும்?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. yes very much true
    the central state govts should take ernest efforts to pick up talented village youths to train in all games...
    the present acting C.M should disburse the sanctioned amount to this GLORIOUS BOY mariappan...without delay..

    ReplyDelete
  2. thanks for your feedback on this post Nat "Chander.please keep contact. vanakkam.

    ReplyDelete