Wednesday, November 23, 2016

ஜெயமோகனால் வங்கி முன் நின்று இறந்த ஒரு உயிரையாவது மீட்டுத் தர இயலுமா? : கவிஞர் தணிகை

ஜெயமோகனால் வங்கி முன் நின்று இறந்த ஒரு உயிரையாவது மீட்டுத் தர இயலுமா? : கவிஞர் தணிகை

Image result for Economic crisis of india 2016

பைபிளில் சொல்வார் மனிதரால் ஒரு மயிரை வெளுக்க வைக்கவோ கறுக்க வைக்கவோ முடியாது என்று...அதே போல நான் கேட்கிறேன் 500 ,1000 ரூபாய் பழைய நோட்டு செல்லாது என்ற அலையில் இழந்து போன ஒரு உயிரையாவது ஜெயமோகனால் மீட்டுத் தர முடியுமா? என்பதுதான்.

நல்ல எழுத்தாளர்தான் அவர் இந்தக் காலக் கட்டம் எழுதிய ஒரு எழுத்தாக்கத்தை படிக்க நேர்ந்தது. இவர் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொண்டாலும் ஒவ்வொரு தனி மனிதனும் தமது உரிமையை உடமையை நாட்டின் வங்கி முந்தானையில் முடிந்து விட்டு அவிழ்க்க முடியவைல்லையே என க்யூவில் நின்று இரத்தம் கொதிப்படைந்து அதில் பல உயிர்கள் போயிருக்கின்றனவே, எத்தனையோ பேருக்கு உடல் நலம் குன்றிவிட்டதே அதை எல்லாம் இந்த எழுத்தாளரால் மீட்டுத் தர முடியுமா? என்பதுதான்.

அதனால் எல்லாம் சாகவில்லை, அவர்கள் உடல் நலம் அவ்வளவுதான், உரிய மருத்துவ சிகிச்சை செய்து கொள்ளாதது உரிய மருத்துவ சிகிச்சையை அவர்களுக்கு பெற்றுத் தராத குடும்பத்தின் தவறு என்கிறார்.ஒரு நாட்டில் தமது உடமையை எல்லாம் இழந்து விட்ட மனிதர்க்கு அந்த நாடுதானே உரிய மருத்துவமும் அளித்திட வேண்டும். எனவே இதுபோன்ற அரசின் செயல்பாடுதானே இதற்கு அடிப்படை...பிறகு ஏன் மனிதர்கள் அரசை கேட்க மாட்டார்கள், வசை பாட மாட்டார்கள்?

Image result for Economic crisis of india 2016

பெரும்பணக்காரர்கள் பெற்ற வங்கிக் கடனை திரும்பச் செலுத்தாதற்கு வக்காலத்து வாங்குகிறார். பெரிய வியாபாரத்தில் இதெல்லாம் நடக்கும், இப்படி பிசகுகள் ஏற்படுவது இயல்புதான், அவர்கள் வேண்டும் எனச் செய்யவில்லை என்கிறார். யார் வீட்டுப் பணத்தில் இவர்கள் வியாபார சரியா தவறா விளையாட்டு விளையாடு செல்வத்தை இழந்து கட்டாமல் இருக்கிறார்கள்? அவர்கள் அப்பன் வீட்டுப் பணத்தில்தானா? பொதுமக்கள் சேர்த்து வைத்திருக்கும் வங்கிக் கணக்கிலிருந்துதானே? மூன்று இலட்சம் பெறுமான நகையை வைத்துக் கொண்டு ஒன்னரை இலட்சம் கொடுத்து விட்டு வருடம் வருமுன்னே வாய்தா வந்து விட்டது என வாடிக்கையாளரை நெருக்கும் நெருக்குதலுக்கு அளவில்லை கீழ் மட்டத்தில் ஆனால் பல இலட்சம் கோடியை ஸ்வாகா செய்தும் அப்படியே சொகுசு வாழ்க்கை வாழ்வாரிடை எந்த மாற்றமும் இல்லையே....2018 -2019 வாக்கில் இருந்து ஆரம்பிக்கும் கணக்குகளுக்கு விவரம் தருமாம் ஸ்விஸ் வங்கி....அதற்குள் என்ன இருக்கப் போகிறது?

எங்குமே உரிய ரசீதுகள் வழங்கப் படுவதில்லை. எவரும் கேட்பதில்லை. அப்படியே ஒளித்து வைத்திருந்து வெள்ளையாக்கிக் கொள்கிறார் தமது கள்ளப்பணத்த எல்லாம் என்கிறார். உண்மைதான் பெரும்பாலும் இவர் சொல்வது எல்லாம் உண்மைதான். ஆனால் அதற்காக‌ இந்த அளவு பொருளாதார சீரழிவு நடக்கும் வண்ணம், சோற்றுக்கும், துணிக்கும், பயணத்துக்கும் காசு கிடைக்காமல் மனிதரை தமது பணத்தை நாட்டுக்கு முடிஞ்சி கொடுத்து விட்டு பிச்சை எடுக்க விட வேண்டுமா?

மகனும் இவரும் சென்றார்களாம், சுலபமாகவே  குறைந்த பட்ச நேரத்திலேயே கிடைத்து விட்டதாம். எனக்கும்கூட நிற்காமல் ஒரு பத்தாயிரம் கிடைத்துவிட்டதுதான் கையிலிருந்து சிறு தொகையை வங்கியில் கட்டி விட்டோம்தான்...ஆனால் நமது தனிப்பட்ட செல்வாக்கான ஒரு அனுபவத்தை மட்டுமே வைத்து பொதுக்கருத்தை எட்டுவது சரியான எழுத்தாளர்க்கு அழகல்லவே. நான் தினமும் பயணம் செய்கிறேன், செல்லும் இடம் எல்லாம் மேம்போக்காகப் பார்த்தாலும் வங்கி இருக்கும் இடத்தை பார்த்தாலே இங்கு வங்கி இருக்கிறது என டாஸ்மாக் அடையாளம் போல புரிந்து கொள்ள முடியுமளவு கூட்டம் நிறைய இருப்பதைக் காணமுடிவதை எப்படி இல்லை என மறுக்க முடியும்?

அல்லது எந்த ஏடிஎம்மிலும் பணம் இல்லை, வங்கியிலும் இல்லை, அல்லது  2000 மட்டும் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கொடுத்த கதை எல்லாம் இல்லையா? வங்கிக் கணக்கையே முடித்துக் கொள்கிறோம் என்று சொன்ன ஒரு வாடிக்கையாளர்க்கு அப்படி முடித்தாலுமே உங்கள் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக் பிற்காலத்தில்தான் கொடுக்க முடியும் எனச் சொன்ன சேதிகள் எல்லாம் இல்லையா?

Image result for Economic crisis of india 2016
ஒரு வீட்டின் எஜமானி சொல்கிறார்....ஒரு கெட்ட வார்த்தையை மொழிந்து விட்டு குடும்பம் என்று ஒன்று இருந்தால் தானே தெரியும்? என...காய் கறி கூட காலையில் சென்று வாங்க முடியவில்லையாம், மாலையில் சென்றால் கொஞ்சம் உயிர் வாழ முடியும் என்று தோன்றுகிறது என்கிறார்....விலைவாசி அப்படியாம்...சாப்பிடலையா பேருந்தில் எவருமே கூட்டமாகக் காணோம் என்கிறார் ஒரு நடத்துனர், பெங்களூர் பேருந்தில் ஒருவர் மட்டுமே இருக்க அத்தனை இருக்கையுமே காலியாக இருக்க பேருந்து செல்வதை நானே 5 ரோட்டு சாலையில் சேலத்தில் பார்க்க நேர்ந்தது.

இப்படி மக்களை முடக்கிப் போட்டிருக்கிறது. அடுத்து சில மாதங்களில் உணவு, தானியம், காய்கறி கூட கிடைக்குமோ என்னவோ...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

8 comments:

  1. // பைபிளில் சொல்வார் மனிதரால் ஒரு மயிரை வெளுக்க வைக்கவோ கறுக்க வைக்கவோ முடியாது என்று..//

    இப்படி ஒரு வாசகம் விவிலியத்தில் கிடையாது ஐயா....! தவறை திருத்தி கொள்ளவும்....

    ReplyDelete
    Replies
    1. I read it.I have many bibles. You thoroughly read it and come to me...நான் படித்திருக்கிறேன், உங்களுக்கு அது எட்ட வில்லை போலும். என்னிடம் பல வகையான சிறிய பெரிய பைபிள்கள் உண்டு. யோவான் சொல்லிய வார்த்தை கடவுளாக இருந்தார் என்னும் சொற்களை மேல் பதித்துள்ள லெதர் வாலட்டில் உள்ள பெரிய பைபிளை ஜனவரி 1 ஆம் தேதியிட்டு 2003ல் வங்கி மேலாளாராக இருந்த எமது நண்பர் ஜார்ஜ் மனோகரன் அவர்கள் வழங்கினார். நன்றாக பாருங்கள் . பறவைகள் விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை போன்ற வரிகளுக்கு அருகாமையில் இருக்கலாம்...என்னால் இப்போது அதை எத்தனையாவது வரி, எத்தனையாவது அதிகாரம் என நினைவுபடுத்தி அறுதியிட்டு உறுதியாக சொல்ல இயலவில்லை.

      எனது வாழ்க்கை இப்போது மிக அவசர கதியில் இயங்கி சேவையாற்றி வருகிறது. மறுபடியும் உங்களுக்காக ஒரு நாள் ஒதுக்கி ஓய்வு நேரத்தில் பைபிளை புரட்டி சரியான விடை தருவேன் அதுவரை உங்களுக்கு பொறுமை இருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை.

      எமக்கு பல வகையான கிறித்தவ நண்பர்கள் பால்யத்திலிருந்தே உண்டு. இன்று கூட சேலத்தில் ஒரு கிறித்தவ அமைப்பான‌ அன்பு இல்ல‍ க்ளூனி நிறுவன விழாவில் காலை 8.55லிருந்து மதியம் 12.00 வரை இருந்தேன்

      எல்லாவற்றையும் விட யேசு கிறிஸ்துவின் பிறந்த நாளில் பல ஆண்டுகளாக சாலையோரம் குளிரில் நடுங்கியபடி படுத்துக் கிடக்கும் அனாதைப் பிச்சைக்காரர்களுக்கு சொந்த செலவில் போர்வை வழங்கி அப்படி அதற்காக செல்கையில் நள்ளிரவில் இடது முழங்கை மூட்டு விலகிய இடர்பாடுகளை எல்லாம் சந்தித்த வாழ்க்கை அனுபவம் உண்டு.

      எனவே மறுபடியும் சொல்கிறேன்.: நன்றாக தேடிப் பாருங்கள் கிடைக்கும்.
      தேடுங்கள் அந்த வரிகள் அகப்படும்.

      மறுபடியும் பூக்கும் வரை\
      கவிஞர் தணிகை

      Delete
    2. மத்தேயு : அதிகாரம் :5
      36 ஆம் வரி வசனத்தைப் பார்க்கவும் படிக்கவும் இருதயம் அவர்களே.வணக்கம். நன்றி.

      Delete
    3. நீங்கள் அடுத்தவரிடம் தவறை திருத்திக் கொள்ளவும் என சொல்லத் தகுதி உடையவர்தானா என முதலில் பார்த்துக் கொள்ள வேண்டும் இருதயம் அவர்களே: மத்தேயு : அதிகாரம் 5 : ஆணையிடுதல்: 33.மேலும் பொய்யாணை இடாதீர் ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்கு செலுத்துவீர், என்று முற்காலத்தவர்க்கு கூறப்படிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 34.ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம்.விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை. 34. மண்ணுலகின் மேலும் வேண்டாம் ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்;ஏனெனில் அது பேரரசரின் நகரம். 36. உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது..37..ஆகவே நீங்கள் பேசும்போது ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை என்றால் இல்லை எனவும் சொல்லுங்கள், இதை விட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது. ஹலோ மிஸ்டர் இருதயம் இது போதுமா?

      இருதயம் எனப் பேர் வைத்துக் கொண்டு பைபிளை சரியாகப் படிக்காமல் எனக்கு திருத்திக் கொள்ள அறிவுரை வேறு...நீர் திருத்திக் கொண்டு முதலில் ஒழுங்காக பைபிளைப் படித்து புரிந்து கொள்ளவும் அதன் பிறகு அடுத்தவருக்கு சொல்ல வாரும்...பை.

      Delete
    4. நன்றி நண்பரே... ஒழுங்காக விவிலியத்தை படிக்காதது என் தப்பு தான்...ஏற்று கொள்ளுகிறேன்...

      Delete
    5. superb.humble acceptance makes honesty and progress towards wisdom.thanks. vanakkam.please keep contact

      Delete
  2. முடியவே முடியாது என்று எல்லாரும் சொல்வதால் இது வெற்றியாகும்.

    ReplyDelete
    Replies
    1. thanks for your feedback on this post Natarajan Narayanaswamy vanakkam.Please keep contact. What you are telling I don't know ,which you meant success? I could not able to understand your words.please explain to understand it again.

      Delete