இராட்சசன்: சினிமா விமர்சனம்: கவிஞர் தணிகை
இந்தப் படத்தை ஆங்கிலத்தில் எடுக்கலாம் இந்தப் படம் தமிழில் வந்திருக்க வேண்டாம். குடும்பத்துடன் பார்க்க முடியாத படம். ஏன் எனில் ஒரு ஆசிரியர் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார் பள்ளி மாணவிகளிடம் என்பதை மிகவும் நாசூக்காக ஆனால் கொடூரமாக வக்ரமாக வெளிப்படுத்தியதிலிருந்தே இந்தப் படம் எனது அன்றைய தூக்கத்தைக் கெடுக்கும் படமாக அமையப்போகிறது என நான் நினைக்காத போதும் ஆனால் அப்படித்தான் அது தான் நடந்தது.
அதன் பின் கொலையாளியைத் தேடி விஷ்ணு விசால் செல்லச் செல்ல நாமும் செல்ல வேண்டி நேரிடுகிறது விஷ்ணுவிசாலின் அண்ணன் மகள் பற்றி நம்மால் முன் கூட்டியே இவர் பலியாவார் என்பதையும், அவள் பியோனோ வாசிக்கும் மேஜிக் செய்யும் கொலைகாரியாக இருக்க முடியாது என்றும் முன் கூட்டியே தீர்மானத்துக்கு வர முடிகிறது.
விஷ்ணு விசாலைப் பாராட்டத்தான் வேண்டும். வெண்ணிலாக் கபாடிக் குழுவின் ஆரம்பத்தில் இருந்து தன்னுடைய இடத்தை தேர்வு செய்து தக்க வைத்து வருகிறார்.
ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை ஒரு காதல் குற்றப் பின்ணனி உள்ள படம். அந்தக் காலத்தில் அது சக்கைப் போடு போட்டது ஒரு பேய்க்கதையோ என்று பார்க்குமளவு...மறு ஜென்ம நினைவுகளுடன்.
அதன் பின் பாரதிராஜா செக்ஸ் பின்ணணியுடன் சிவப்பு ரோஜாக்கள் போன்ற குற்றப் பின்ணனி படங்களைத் தர அதன் பின் அவரது உதவியாளராக வசன கர்த்தாவான மணிவண்ணன் நூறாவது நாள் போன்ற படங்கள் தந்தார்.
ஆனால் இதனிடையே ஊமை விழிகள் என்ற குற்றப் பின்ணினிப் படத்தை ஆதாரங்களுடன் அரிய பாடல்களுடன் ஆபாவாணன் தந்தார்...மேலும் பேய்க்கதை நாய்க்கதை குரங்குக் கதை, பாம்புக் கதை என எல்லா மிருகக் கதைகளையும் தேவரும், இராமநாராயணன் போன்றோரும் தந்தனர். ஏன் விட்டலாச்சாரியார் ஜெயமோகினிப் படங்களையும் தந்தார்.
இந்தப் படம் இதன் இயக்குனர் ராம் குமார், விஷ்ணு விசால், அமலா பால், சரவணன் , இராதாரவி போன்ற அனைவர்க்குமே ஏன் ராமதாஸ் மிகவும் நன்றாக செய்திருக்கிறார்....இவர்கள் அனைவர்க்குமே ஒரு குறிப்பிட்ட படமாக அமைந்துள்ளது
ராட்சசனை வீழ்த்தும் விஷ்ணுவிஷாலுக்கே இந்தப் படம் ஒரு நல்ல இடத்தைத் தந்துள்ளது. நான் பெண்களை , குடும்பத்தாரை, குழந்தைகளை இந்தப் படத்தை பார்க்க அனுமதிக்கக் கூடாது என்னும் முறையில் மிகவும் கொடூரமாக படம் விளங்குகிறது...அவ்வளவு இயல்பாக தத்ரூபமாக உண்மையாக நடந்த கதையாகவே இல்லை நடந்த நடப்பாகவே படம் நமக்கு தரப்பட்டுள்ளது... எனவே இது படத்துக்கு வெற்றி, படம் வெற்றி...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletethanks for your wishes sir. vanakkam.
Delete