Tuesday, November 13, 2018

வட சென்னை: கவிஞர் தணிகை

வட சென்னை: கவிஞர் தணிகை

Image result for Vada Chennai

தனுஷ் தயாரித்து வெற்றி மாறன் இயக்கிய வட சென்னை அமீர், சமுத்திரக்கனி,கிஷோர் , ஆண்ட்ரியா கூட்டணியுடன் வெற்றி பெற்றுவிட்டது.
இது போன்று உண்மையில் நடந்து வருகிறது. ஊருக்கு எதிராக பணத்துக்காக விலை போகும்  தலைமைக்கு அடுத்து இருக்கும் துணைத்தலைமைகள் நாட்டை கூறு போட்டு எப்படி விற்று விடுகின்றன. எப்படி விற்று வருகின்றன என்பதை அடி வேராக  இந்த நாட்டின் வேர்க்கரையான்களாக இருப்பதை படம் பிடித்துக் காட்டி இருக்கிறார்கள்.

தலைமை நல்லவராக இருந்தால் அவரை எப்படி தமது சொந்த நலனுக்காக அப்புறப்படுத்தி அந்த நிலையை இரண்டாம் நிலையில் இருந்து கொண்டு அவரது காலை சுற்றுகிறவர்களே அவர்கள் காலை வாரி அந்த நிலையை அடைகிறார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது எந்த நல்லதையும் ஒரு துரோகம் தானே வீழ்த்துகிறது அது ஜூலியஸ் சீசரின் யூ டூ புரூடஸ் சேக்ஸ்பியரின் நாடகமானாலும் ...இந்தப் படத்தில் தலைவனாக இருக்கும் இராஜனை அவனுக்கு அடுத்த நிலையில் இருந்து வந்த குணா சமுத்திரக் கனி, செந்தில் என்னும் கிசோர்,டேனியல் பாலாஜியும் உடன் இருக்கிறார் இருந்தும் அதை தடுக்க முடியாத கையாலாகத ஆனால் செய்வது தவறு என்ற உணர்தலுடன்...அந்தக் காட்சி அந்தப் படத்தில் ஒரு வலுவான அறைதலாக நிகழ்கிறது. மற்றபடி தனுஷ் வழக்கப்படி ஐஸ்வர்யா ராஜேஷ் என்னும் நடிகையை காதலிக்கிறார், முத்தம் கொடுக்கிறார், கல்யாணமும் செய்து கொள்கிறார். ஜெயிலுக்குப் போகிறார் செந்தில் என்னும் கிஷோரைக் குத்துகிறார் இப்படி வன்முறையுடன், பேட்டை ரவுடி சாம்ராஜ்யத்தில் கேரம் பிளேயராக...
ஆடுகளம் படத்தில் ஒரு தேசிய விருதை தனுஷ் பெற இதே கூட்டணி காரணமாக இருந்தது.
Image result for Vada Chennai
படம் இயல்பாக மீனவக் குப்பம், சேரிப் பகுதிகளில் நாம் நடைபெறும் வாழ்வை கண் கூடாக பார்ப்பது போல படமாக்கப்பட்டு கதையாக சொல்லப்பட்டிருக்கிறது.

எங்கள் ஊர் எங்கள் வீட்டுப் புழக்கடையில் ஓடிக் கொண்டிருக்கும் கெம்ப்ளாஸ்ட் கழிவு நீர் கூட குழாய்களில் பூமிக்குள் பதித்து செல்ல வேண்டியதை எப்படி அப்படியே நன்னீர் ஓடையில் விட்டு ஊரை மண்ணை நிலத்தடி நீரைக் கெடுத்தார்களோ தலைமையும் முன்னணியினரும். அதே போல அந்த ஊருக்கும் காலி செய்யச் சொல்லி பணக்கார நபர்களின் அச்சுறுத்தல் அதை எதிர்க்கும் ராஜன் என்பவராக‌ அமீர்

அவரது வாரிசாக அன்பு என்ற நபராக தனுஷ். இடையில் கிசோர், சமுத்திரக்கனி, துரோகிகளாக...தம்பியாக டேனியல் பாலாஜி நல்லவராக வழக்கத்துக்கு மாறாக.. வழக்கம் போல இராதாரவி அரசியல் வாதியாக.

ஆன்ட்ரியா தமிழில் ஒரு மறுக்க முடியாத நடிகையாக உருவாகி வருகிறார். எந்த வேடம் கொடுத்தாலும் அத்துடன் தன்னை பிணைத்துக் கொள்கிறார் அது விஸ்வரூபம் இரண்டின் சண்டை செய்யும் வேடமாக இருந்தாலும் சரி, பச்சைக்கிளி முத்துச் சர மனைவியானாலும் சரி இதில் கணவன் ராஜனுக்காக பழி வாங்கும் வேடத்தில் சமுத்திரக்கனி என்னும் குணாவை மணந்து கொண்டு சந்தர்ப்பத்துக்காக காத்திருப்பவராக...ஐஸ்வர்யா ராஜேஸ் மிகவும் இயல்பாக காதல் செய்வதும், திருமணம் செய்து கொள்வதுமாக தமக்குக் கிடைத்த ரோலை சரியாகச் செய்திருக்கிறார்

அன்பின் எழுச்சி வட சென்னை இரண்டாம் பாகமாக தொடரும் என்று சொல்கிறார்கள்
Image result for Vada Chennai
முடிந்தால் ஒரு முறை பார்த்து விடுங்கள்...

வார்த்தைகள் வசனங்கள் யாவும் அப்படியே புழங்க வைக்கப்பட்டுள்ளன...மேட்டுக் குடிகளுக்கு அவை பிடிக்காது...கெட்ட வார்த்தை என்பவை கேட்ட வார்த்தைதானே...அதாவது சிறுவர் சிறுமியாக இருப்போர் அவரைச் சுற்றி எவர் பேசினாலும் கேட்டு அதை பயன்படுத்துவதுதானே கெட்ட வார்த்தையாக...அதையே சொன்னேன் கேட்ட வார்த்தைதானே கெட்ட வார்த்தை என வருகிறது என்று...
Image result for Vada Chennai
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. வடசென்னையைப் பற்றிய தவறாதப் புரிதலை இப்படம் ஏற்படுத்தி இருப்பதாகப் பலர் எழுதிவருகிறார்கள்

    ReplyDelete
  2. thanks for your feedback on this post sir .

    ReplyDelete