அன்பு நண்பர்க்கு:
வணக்கம்.
1.ஒரு முறை மகன் மணியத்தின் விளையாட்டுச் சீருடை செட் ஒன்றை எடுத்துக் கொண்டு சென்று எங்கள் ஊரில் சக்குண்ணி டைலர் கடை இருந்த இடத்தில் இருக்கும் ஒரு மனநிலை பிறழ்ந்த ஒரு மனிதருக்கு (அவர் எப்போதும் கரிய ஆடையில் இரு கைகளும் இரு பை மூட்டை தாங்க இங்கிருந்து மேட்டூருக்கும் மேட்டூரில் இருந்து எங்கள் ஊருக்கும் பயணம் செய்து வருபவர்தாம் சாலைகளில் பார்த்திருக்கலாம்...அவர் உள்ளூர்க்காரர்தாம் நாவிதத் தொழிலை மேற்கொண்டிருந்தது அவர் குடும்பம். ஆனால் அவரது சகோதரர்கள் எல்லாம் கெமிகல், மில் ஊழியராக நல்ல நிலையில் வாழ்ந்தவர்கள் .இவரும் பள்ளி இறுதி வரை படித்ததாக இவருடன் கற்றவர் கூறுவர்). அவருக்கு கொடுக்க முனைந்தேன்...உடனே அவர் உடனே என்னை அவமானபடுத்தி, கொடுக்க வந்துட்டா, இவன் கொடுத்தா நான் போடுவனா? என்று வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார்....அதை ஒரு பொது இடத்தில் வைத்து விட்டு வந்து விட்டேன் சற்று ஒதுக்குப் புறமான இடமும் கூட மறு நாள் அதைக் காணவில்லை எவரோ எடுத்துக் கொண்டு சென்று இருப்பர்.
2. டாக்டர் மனோஜ்கிருஷ்ணன் மால்கோ மருத்துவரின் வகுப்புத் தோழி என்ற ஒரு வதந்தியும் உண்டு. ஒரு மன நிலை பிறழ்ந்த பெண் இங்கே சுற்றித்திரிபவர்.அவருக்கு மனோஜ்கிருஷ்ணன் உணவுப் பொட்டலங்கள் கொடுப்ப்தாகவும் செய்தி. நாங்கள் அப்துல் கலாம் இயக்கம் என்ற இயக்கத்தின் வழி சில நல்ல சமூக சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது இவரை சந்தித்து மாற்ற முனைந்தோம்...ஆனால் நாங்கள் கொடுத்த பிஸ்கட் பாக்கெட்களை அவர் பெற்றதோடு சரி...அந்த முயற்சியும் முனை மழுங்கியது.
அவர் ஒரு பலகாரக் கடையில் சென்று நிற்பார். உடனே அந்தப் பெண் இரண்டு வடை எடுத்துக் கொடுப்பார். வாங்கிக் கொண்டு சென்று விடுவதைக் கண் கொண்டு பார்த்திருக்கிறேன்
3. சக்தி தியேட்டர் நிறுத்தத்தில் ரத்தினவேலு என்னும் டீக்கடைக்காரரிடம் ஒரு ஆண் அனேகமாக அவர் பிராமண இனத்தாராக இருக்கலாம் வந்து அங்கே டீக்கடையில் ஒரு டீ இரண்டு வடை வாங்கி இலவசமாகத் தின்று விட்டு, நாங்கள் உங்களை ஒரு ஹோமில் சேர்த்து விடுகிறோம் வருகிறீரா என்றதற்கு எடுத்தார் ஒரு ஓட்டம்...
..இது போன்று நிறைய பேர் நமது ஊருக்கு வரக் காரணம் சேலத்துக்கும் மேட்டூருக்கும் ரயில் தொடர்பு ஏறுபட்டதும்.
5. எங்களது ஊரில் ஒரு பெண் கெட்ட வார்த்தை பேசிக் கொண்டு திரிவார், ஆனால் சாப்பாடு எல்லாம் வாங்கிச் சாப்பிடுவதில் படு கெட்டி. குளிக்காமல் கொள்ளாமல் ஒரே இடத்தில் நாற்றமெடுக்கும் உடலுடன் ஆனால் அங்கங்கே சென்று கொண்டே இருப்பார். நமது பார்வையில் படுவார்.
6. இப்படிப்பட்ட ஒரு பெண்ணை குளிக்க வைத்து படுபாவிப்பயல்கள் வன்புணர்வு செய்ததாகவும் கேள்வி....அதன் பின் அவரை நகமெல்லாம்பிடுங்கி நாக்கெல்லாம் துண்டித்ததாகவும் பேச்சு அடிபட்டது.
7. லோகநாதன் என்னும் சுடர் ஒளி கண்பார்வையற்றோர்க்கும், குழந்தைகளுக்கும் விடுதி நடத்துபவர் ஒரு காலக்கட்டத்தில் எனக்கும் எனது நண்பர் முரளிதரன் என்னும் கெமிகல் கம்பெனி நடத்தியபடி கெமிகல் வாங்கி விற்பனை செய்து கொண்டிருந்த எனது நண்பர் ஒருவர்க்கும் தொடர்பில் இருந்தவர்.Loganathan வைத்தீஸ்வரா பள்ளியில் நுழை வாயிலில் சிறு பெட்டிக்கடை நடத்தி வந்தவர். அவருக்கும் பார்வைக்குறைபாடு கொஞ்சம் அப்போது இருந்தமையாலும் blind school அவர்களின் தொடர்பில் இருந்தமையாலும்...அது போன்ற பணிகளில் ஈடுபட அடிப்படைப் பணிகளில் ஈடுபடும்போது எனது பங்கு பணியும் அதில் உண்டு. ஆரம்ப காலத்தில் அந்த நிறுவனத்திற்கு நான் ஆலோசகர்...பங்களித்ததும் உண்டு. ஆனால் அதில் முழுதும் என்னால் ஈடுபட முடியாது என்று ஆரம்பத்திலேயே சொல்லி அவரை ஈடுபட வைத்ததும் என் நினைவில் இப்போதும்..
அந்த விடுதியில் இருக்கும் பார்வை இழந்தவர் ஒருவர் ஒயர் சேர் பின்னி சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொண்டு இது என்ன கடை, இது என்ன கடை என்று கேட்டு மதுபானக் கடையைத் தேடிக் குடித்துவருவதையும், ரயிலில் சொல்லி வைத்தாற்போல ஒரு கால் துண்டான நபரும், ஒரு குருடரும் பிச்சை எடுக்க தினமும் மேட்டூரிலிருந்து சேலம் வருவதும், சேலத்தில் இருந்து மேட்டூர் போவதுமாக இருந்து வருவதையும் கண்டதுண்டு....
8. பல ஆண்டுகள் நானும் எனது நட்பும் உறவும் வட்டமும் அவ்வப்போது இணைந்தும் பிரிந்ததுமான அவர்களுடன் நான் தொடர்ந்து பல்லாண்டுகள் கிறிஸ்மஸ் நள்ளிரவில் சுமார் 12 மணியளவில் சாலையோரம் படுத்துறங்கும் அனாதைப் பிச்சைக்காரர்களுக்கு போர்வை வழங்கி வந்தேன்.ஒரு முறை 2000 ஆண்டு... எவரும் உடன் வராததால்.தனியாக சென்று போர்வை எல்லாம் கொடுத்து விட்டு திரும்புகையில்தான் கீழே வாகனத்துடன் விழுந்து எனக்கு இடது கை மூட்டு எலும்பு இடம் பெயர்ந்தது இரு சக்கர வாகனத்தில் திரும்பும்போது ஒரு மண்டபப் பணிக்காக ஜல்லிக் கொட்டி அதை சாலை முழுதும் விரவிக் கிடந்ததை கூட்டி குவிக்காததால் அதன் மேல் எனது வண்டி செல்ல... அப்போது மணி இரவு. 2 மணி இருக்கும். அப்போதிருந்து அந்தப் பணியை விட்டு விட்டேன்.
9. கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த ஒரு காலக்கட்டத்தில் பிச்சைக்காரர் மறு வாழ்வு நிதி என்று திரட்டி அவர்களுக்கு விடுதி உணவு வசதி யாவும் செய்து தர முயன்றார். செய்தார். முயற்சி தோற்றது. இப்போதிருக்கும் உழவர் சந்தை, சமத்துவ புரம் அளவு கூட அல்லாமல் அது படு தோல்வி அடைந்தது.
10. பொன்னியின் செல்வன் கல்கி எழுதியது அதில் ஒரு மந்தாகினி என்னும் ஒரு கேரக்டர் வரும் ஊமைச்செவிடு...ஆனால் அவள் நல்லவள்...பொன்னியில் செல்வன் என்னும் இராஜைராஜ சோழன் என்னும் அருள்மொழி வர்மனை காவிரியில் மூழ்க இருந்தபோது குழந்தையாக இருந்தபோது காப்பாற்றுவாள்...அவளைக் காற்று மாதிரி யாரும் பிடிக்கவும் முடியாது கட்டுப்படுத்தவும் முடியாது எங்கு இருக்கிறாள் எங்கூ செல்கிறாள் என்பதை எல்லாம் எவருமே சொல்லவோ கணிக்கவோ முடியாது என்பார்கள்
11. அது போலத்தான் இவர்கள் யாவரும், காற்றைப் போன்றவர்கள்... இவர்களை...ஒரு இடத்தில் பிடித்து வைக்க முடியாது... சில ஹோம்களில் வன்முறையும், அதில் நம்ப முடியாத கதைகள் போன்ற உண்மைகளும் இருக்கின்றன அதில் எல்லாம் நுழைந்து மீண்டு வர அதற்காகவே நம் வாழ்வு சென்றாலும் போதாது.. ...உங்கள் நண்பர்கள் அல்லது நான் ஆரம்பத்தில் செய்தது போல ஒருவர் நினைவு நாள், ஒருவர் பிறந்த நாள் வருகிறது இவர்கள் அந்த ஹோம் செல்கிறோம் அதை செய்தோம், இதை செய்தோம் என்பதெல்லாம் அவரவர்க்கு ஆறுதல் தேடிக்கொண்டு இது போன்ற மனிதர்க்கு நாம் ஏதாவது செய்திருக்கிறோம் என்று பெறும் நிறைவுக்காக...
12. உண்மையில் இதன் அடிப்படைக் கோளாறு குடும்பம் என்ற மாபெரும் புகழ்பெற்ற இந்தியக் கட்டமைவு குலைந்து அதன் அடையாளங்களாக ஆங்காங்கே திரியும் இவர்கள்... அதன் உச்சியில் அரசின் ஆளுமை அற்ற அலட்சியம். எனவே நாம் இந்த குடும்ப அமைப்புக்கு சீர்பட ஏதாவது செய்வதும் அல்லது கோணாத கோல் என்னும் அபிராம பட்டர் சொல்லும் நல்லாட்சி புரிய ஏற்பட ஏதாவது செய்வதுமே இது போன்ற பிரச்சனைகளுக்கு குறைந்த பட்சம் ஒரு தீர்வு ஏற்பட கொஞ்சம் அருகே அல்லது இந்த பணியை ஒரு செ.மீ. அல்லது மி.மீ முன்னெடுத்துச் செல்வதுமாகும்... அது பல்லாயிரம் கி.மீ தள்ளி இருக்கிறது என்பது வேறு...அதில் ஒரு சிறு பொறி பற்றி காட்டுத் தீயானால் பல்லாயிரம் கி.மீ தொலைவு கூட ஒரு நாளில் எட்டி விட முடியும் என்பதெல்லாம் சிதையா நம்பிக்கைகள்...
13. சில நேரங்களில் இதில் ஈடுபடும் நமக்கும் கூட பெரும் தொல்லைகள் கூட உற்பத்தி ஆவதும் உண்டு...
எனவே இதில் எல்லாம் ஈடுபடுமளவு இப்போது காலச் சூழல் இல்லை. wqe need a team to take of these kinds of difficult works.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment