காட்சிப் பிழைகள்: கவிஞர் தணிகை
நல்லா தெரிஞ்சவங்கள ஒக்கார வைச்சிருக்கணும், என்றது அந்த ஜி.ஹெச்சில் பார்மஸி ஜன்னலுக்கு வெளியிலிருந்த கூட்டத்தில் இரு குரல்...கணினி முன் சுகன் அமர்ந்திருந்தார். அவர் தம்மை இன்னும் அவன் என்றே சொல்லிக் கொண்டிருந்தார் ஆனால் அவரது வயது அம்பதுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் அவரை அவர் என்றுதான் மற்றவர்கள் அழைக்கலானார்கள்.
பார்மசியில் கம்பவுண்டர் ராஜேந்திரன் சற்று காது மந்தமனாவர்... மேலும் அவரால் ஒரேயடியாக வரும் கூட்டத்தை சமாளிக்கவும் முடியாது. திணறுவார். மேலும் அவர் கணினியைக் கையாளும் முறையைப் பார்த்தால் நொறுக்கித் தள்ளுவார் விசைப்பலகையின் எழுத்துகள் என்ன பாவம் செய்ததோ என்றே தோன்றும்...ஆனால் சுகன் மென்மையாகவே கையாள்வார். எனவே கணினி அதைப் புரிந்து கொண்டு சில நேரம் ஒத்துழைக்காது அந்த ஆள்மாறாட்டத்தை ஏற்க முடியாமல்...எண்களின் பக்கம் இருக்கும் ஜீரோவை மென்மையாக அழுத்தினால் எழுத்துப் பதியாது...அந்தளவு ராஜேந்திரன் அந்த எழுத்தை நொக்கி இருந்தார். இப்போதும் அதை அப்படித்தான் ஓங்கி ஓங்கி அடிப்பார்.
அந்த ஜீரோவை அதிகமாக அழுத்த பிடிக்காமல் விசைப்பலகையின் எழுத்து வரிசையில் உள்ள ஜீரோவை பயன்படுத்துவார் சுகன்...இதெல்லாம் அந்த கணினிக்கு அத்துபடி எனவே அந்த அரசு மருத்துவமனையின் கணினி அவ்வப்போது நொண்டியடித்து படுத்துக் கொள்ளும். ரெவரஷ் செய்ய் வேண்டியதிருக்கும் அல்லது பாஸ்வேர்ட்,ஐ.டி எல்லாம் கேட்கும். ராஜேந்திரன் கம்பவுண்டர் ட்ரிபுள் ஜீரோ என்பதை மூனு ஜீரோ என்பார் உடனே சுகன் அதை எண் 3 என நினைத்துக் கொண்டு 3 அடித்து அதன் பின் ஜீரோ சேர்ப்பார் அது மேலும் தவறைக் காண்பிக்க, அதன் பின் தாம் ராஜேந்திரன் சொன்னது ஜீரோ ஜீரோ ஜீரோ என்ற மூன்று ஜீரோக்கள் என்பதே அவருக்கும் புரிந்தது...
இப்படி சிக்கல் நேரும்போது வெளியிருக்கும் கூட்டத்தில் சில பேர் பேசிய பேச்சுதான் முன் சொன்னவை...
ஆனால் அடுத்த நாளே அதை எல்லாம் புரிந்து கொண்டு ராஜேந்திரன் கம்பவுண்டருக்கு மிக அதிகமான கூட்டம் குவியும்போதெல்லாம் சுகன் உதவியை மறுக்காமல் மறைக்காமல் செய்தார். கணினி கைக்கு வந்தது பிரிண்டரும் ஒத்துழைத்தது.
அது மட்டுமல்ல ஓ.பியில் அதிகம் மக்கள் வந்து காத்துக் கிடந்து இருப்பதைப் பார்த்தால் இவருக்கு வருத்தமாகவும் அனுதாபமாய் இருக்க
அங்கேயும் சென்று அவர்களுக்கும் அனுமதிச் சீட்டு ஓ.பி மற்றும் பின் நெம்பர் போட்டு அடித்துக் கொடுப்பார், மேலும் இன் பேஷண்ட் சீட்டும் கூட போட்டுக் கொடுப்பார். இப்படி அவரால் அந்த மருத்துவமனையில் என்ன என்ன முடிகிறதோ அதை எல்லாம் செய்வார்... எனவே அவரது சேவை மனப்பாங்கைப்பார்க்கும் அங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் இப்படி அனைவர்க்கும் அவரைப் பிடிக்கும் அவர் வரும் செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் அவரது வருகை அந்த அரசு மருத்துவமனையில் அவரது செயல்பாடுகள் களை கட்டும்.
கொஞ்சமும் கூச்சப்படாமல் அறிவிப்புப் பலகைகள் இருந்தபோதும் அங்குள்ள மக்களுக்கு அறிவிப்பு செய்வார் பல் மருத்துவ சிறப்பு மருத்துவர்கள் வந்திருக்கிறார்கள் சென்று பார்த்துக் கொள்ளவும் என கூட்டத்தில் அறிவிப்பார் அவருக்குத் தோன்றும் தமது சிறிய வயதில் : ஈயம் பித்தாளை பேரிச்சம்பழகேரிகை என ஒருவன் பழைய பொருட்களுக்கு பேரிச்சம் பழம் கொடுத்து விட்டு சைக்கிளில் சென்று கொண்டே கத்திக் கொண்டே பொவது போல் இந்தப் பல் வாய், ஈறு தொடர்பாக ஸ்பெசலிஸ்ட் வந்திருக்கின்றனர் எனவே பார்த்துக் கொள்க என்பார்...பெரும்பாலும் நிறைய நாட்களில் பெரும்பாலான நோயாளிகள் சட்டையே செய்ய மாட்டார்கள்
ஆனால் தேவையானவர் வந்து அவரால் பெரும்பலனடைவார்கள். பல் எடுத்துக் கொள்வது முதல் அந்தக் கல்லூரிக்குச் சென்றால் இந்த மருத்துவமனை வாயிலாக வந்து கல்லூரிக்கு வருவார்க்கு நிறைய தொகை குறைப்பும், முழு இலவசமும் இருக்கின்றன என்பதை அவர் சொல்லக் கேட்டு பயன்படுத்துவாரும் உண்டு.
கல்லூரியில் அவரது பணி குறிப்பிடத்தக்க பணி. அது மட்டுமல்ல வழக்கமான முகாம்கள் இந்த அரசு மருத்துவமனையில் வாரத்தில் இரண்டு நாட்கள், அன்பு மருத்துவமனை என்ற மனவளர்ச்சி குன்றிய ஹோமில் ஒர் நாள் என்றும் மாதத்தில் ஒரு நாள் ஞாயிறு பாலமலையில் முகாம் அதல்லாமல் சிறப்பு பள்ளி, கல்லூரி மற்றும் சமூக நிறுவனங்களின் முகாம்கள் என்ற சேவை முகாம் நிறைய செய்து வருவதுடன் கல்லூரியில் மக்கள் குறைதீர்ப்பது, பொதுமக்கள் தொடர்பு அலுவலராக இருப்பது, வரவேற்பில் இருந்து வருவாரைக் கவனிப்பது இப்படி பல பணிகள் அவருக்கு
அது போலத்தான் அந்த அரசு மருத்துவ மனைக்கு வருவதும், அங்குள்ள மருத்துவர்கள் தலைமை மருத்துவர் நவீன், குழந்தைகள் நல மருத்துவர் சீனிவாசன், கண் மருத்துவர் ராஜன் என்னும் ராஜேந்திரன், லதா என்னும் மகப்பேறு மருத்த்துவர், சித்த மருத்துவர் வெற்றி வேந்தன், அவரது உதவியாளர் வேங்கட்டம்மாள், நர்ஸ் திருநிறை, பொற்கொடி மற்றும் உள்ள நர்ஸ்கள், பார்மஸிஸ்ட் சீனிவாசன், அலுவலக உதவியாளர்: வடிவேல், பிற நோய் கண்டறியும் கவுன்சிலர் பழனிசாமி அவர் உதவியாளர், உதவியாளர் தாஸ், அம்பிகாபதி இப்படி அனைவருமே அவருக்கு பிடித்தமானவராக அவர்களுக்கும் அவர் பிடித்தமானவராக சேவை அவர்களை எல்லாம் ஒன்றிணைத்தது. சேலம் போன்ற இடங்களில் இருந்து கூட அந்த வேம்படிதாளம் அரசு மருத்துவமனைக்கு மக்கள் வந்தனர் சிகிச்சை நல்ல முறையிலும் மருந்துகள் விரைவாகவும் கிடைக்கிறது என..
தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா 1968 லும் மரகதம் சந்திரசேகர் 1953 லும் இந்த மருத்துவமனைக்கு வருகை புரிந்து கட்டடங்களை திறந்து வைத்துள்ளனர் அதன் கல்வெட்டுகளும் புகைப்படங்களும் இன்னும் உள்ளன
இந்த மருத்துவ மனைக்குத்தான் முதலில் மருத்துவ மற்றும் சுகாதார இயக்குனர்கள், இணை, துணை இயக்குனர்கள் எல்லாம் முதலில் வருவார்கள்...மேலும் இந்த மருத்துவ மனை மாவட்ட அளவில் இரண்டு நல்ல தலையாய பரிசைப் பெற்றிருக்கிறது சிறந்த சேவைக்காகவும் இதன் தலைமை மருத்துவரின் செயல்பாட்டுக்காகவும்...
இதை ஆரம்பத்தில் வேம்படிதாளத்தில் பிரதானமாக இருக்கும் செட்டியார்கள் சமூகம் சார்ந்த நிறைய பேர் பெரிதும் பங்கெடுத்துக் கட்டி இதை அரசுக்கு ஒப்படைத்துள்ளனர்.
இந்த மருத்துவ மனையில்தாம் சுகன் சேவை செய்ய வரும்போது அது அவரது பணி அல்ல என்னும் போதும் மக்களுக்கு தம்மால ஆன அத்தனை பணிகளையும் செய்த போதும் மக்கள் அவரைப் பற்றித் தெரியாமல் அப்படி பேசியது அவை...
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு...
வள்ளுவன் வாக்கு பொய்யாவதில்லை என்பதற்கேற்ப...அதற்காக எல்லாம் சுகன் இப்போது எவரிடமும் சண்டைக்கு போவதில்லை...அவரவர் எண்ணம் அவரவருடன்...அவர்களாகவே புரிந்து கொள்ளும்போதுதான் நன்றாக இருக்கும். அடுத்தவர் சொல்லி எல்லாம் புரிய வைக்கவே முடியாதபடி சமூக அமைப்பு மாறிவிட்டது..
குடிகாரர்கள் தேவைப்பட்டால் மிரட்டிப் பிச்சைக் கேட்டு வருகின்றனர். குடிகாரர் கை ஏந்தும்போது கூட பாவம் என்று பிச்சையிடும் ஒரு புரியாத கூட்டம் இன்னும் இருக்கிறது...
பிச்சை எடுத்தாவது படி...
படித்து வேலைக்கு வந்த பின் பிச்சை எடுக்காதே
என்று சகாயம் ஐ.ஏ.எஸ். இலஞ்சம் வாங்குவதைப் பற்றி எழுதி வைத்திருப்பது இன்று கண்ணில் பட்ட நல்ல வாசகம்...இன்னும் இலஞ்சம் வாங்கி நிறைய பேர் பிடிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்...அவர்களுக்கு பணி நீக்கம் செய்வதுதான் சரியான பாடமாக இருக்கும் அதை அரசு செய்யுமா?
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment