Friday, November 9, 2018

தணிகை'ஸ் டே அவுட் வித் மணியம்: கவிஞர் தணிகை

தணிகை'ஸ் டே அவுட் வித் மணியம்: கவிஞர் தணிகை
Image may contain: one or more people, people standing, sky and outdoor24 மணி நேரத்தில் திருவரங்கம், தஞ்சைப் பெரிய கோயில்,ஆலங்குளம் குரு கோயில் சென்று மீண்ட்து பற்றிய ஒரு பதிவு.

08.11.18 இரவு 2 மணிக்கு அலாரம் வைத்து எங்கள் வீட்டின் மூவரும் எழுந்தோம். அன்று மணியத்தின் நட்சத்திரமான விசாகம் வியாழக்கிழமையில் வருவதுடன் கந்த சஷ்டி விழா ஆரம்ப நாள் அது இது என அன்று எப்படியும் ஆலங்குடி குரு கோயிலுக்கு அவரை அழைத்து செல்ல வேண்டும் என முன்பே திட்டம். கல்லூரியில் அந்த வியாழன் வெள்ளி விடுமுறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மணியமும் கல்லூரி விடுமுறை எனவே தோதாக வாய்ப்பு அமைந்தது. உடல் தாங்குமா அவ்வளவு தூரப் பயணத்துக்கு என்றெல்லாம் யோசிக்கவே இல்லை...
Image may contain: Vignesh, beard, selfie, sunglasses, closeup and outdoor
இரவு 2 மணிக்கு எழுந்து குடிநீரை குடித்தும் உடல் ஒத்துழைக்காமல் மலம் கழிப்பதில் முழுக்கத் திருப்தி இல்லை. உடல் என்பது ஒரு இயல்பான எந்திரத்தில் உடற்கூறுகளின் பழகிப்போன ஆதிக்கத்தின் செயல்பாடுகள்தாமே...

சுமார் 3.15 மணிக்கு முதல் பேருந்தை மேட்டூரில் இருந்து சேலம் செல்ல பிடித்து விடத் திட்டம். ஆனால் 4 மணி அளவில் சண்முகம் சில நொடிகள் தாமதித்திருந்தாலும் ஓடியிருக்கும் அதில் ஓடி ஏறிக் கொண்டோம். ஆனால் குஞ்சாண்டியூரில் அந்த ஓட்டுனர், நடத்துனர்,மற்றும் ஒரு இளைஞர் யாவரும் தேநீர் அருந்த நிறுத்திவிட்டனர். 2 கி.மீ தொலைவு கூட இருக்காது நாம் ஏறிய இடத்திலிருந்து...

Image may contain: one or more people and outdoor

பேருந்து புறப்பட்டது: சிறிது நேரத்தில் மிகவும் காலியாக இருந்த பேருந்தில் ஏகக் கூட்டம் இருக்கையில் இடமின்றி அனைவரும் நின்று பயணம் செய்ய பேருந்து நிரம்பிவிட்டது...காரணம் மேச்சேரி, ஓமலூர் போன்ற இடங்களுக்கும் சேலம் ஐந்துவழிச்சாலையில் கம்மங்கூழ், கேழ்வரகுக்கூழ் விற்பாரின் பாத்திரங்களுடன்...ஆக நாம் எழுமுன்னே ஒரு உலகம் இயங்க ஆரம்பித்து விடுகிறது என்ற பார்வை கிடைத்தது. மேலும் அவர்கள் எத்தனை மணிக்கு விழித்திருந்தால் இதை எல்லாம் செய்து முடித்து வந்திருப்பர் என யோசிக்க வைத்தது. அதே போல இந்த காய்கறி விற்பனையை சில்லறை விற்பனைக்கு வாங்கி வருவாரும்...

Image may contain: Vignesh, motorcycle and outdoor

 பேருந்து நிலையம் தீபாவளிப் பண்டிகைக்காக ஜவகர் மில்லில் பாதி மார்க்கம் மாற்றப்பட்டது இன்னும் ஒன்றுபடுத்தப்படவில்லை என்ற செய்தியும் ஆனால் அதற்குள்ளாகவேஅந்த பேருந்து நிலையத்திலேயே ஒன் டூ ஒன் என ஒரு திருச்சி பேருந்து, நடத்துனர் இல்லா பேருந்துதான்...அவர் ஏறும் இடத்திலேயே தம் வேலையை முடித்துக் கொண்டு கீழ் இறங்கி விட ஓட்டுனர் சுமார் 3 அல்லது மூனறை மணிக்குள்ளாக நம்மை திருச்சிக்கு கொண்டு சென்று விடுவது இப்போதைய பேருந்துப் போக்குவரத்தின் முன்னேற்றம்...ஆனால் கட்டணம் சாதரணமாக ரூ. 95 என்றால் இதில் 135 ரூபாய்.

சுமார் எட்டே முக்கால் மணிக்கே திருச்சியை எட்ட ஆரம்பித்து விட்டது. உடனே ஒரு சிறிய மனக்கணக்கு உள்ளே...நமது இலக்கும் நோக்கமும் ஆலங்குடி செல்வது என்றாலும் ஏன் அருகருகே இருக்கும் திருவரங்கத்தையும், தஞ்சைப் பெரிய கோவிலையும் போகும்போதே அல்லது வரும்போதோ இணைத்துக் கொள்ளக் கூடாது என சலனம். எல்லாம் போகிற வருகிற வழிதானே என்று... எனவே திருவரங்கம் செல்வதற்கான சுங்கச் சாவடி...டோல்கேட் நிறுட்த்தத்தில் திருச்சியில் இறங்கி நகரப் பேருந்தைப் பிடித்து திருவரங்கம் செல்ல புறப்பட்டோம்.

Image may contain: 1 person, sky, motorcycle and outdoor

பள்ளிச் சிறுவன் ஒருவன் இந்த பேருந்து போகும், நிறைய பேருந்துகள் இருக்கின்றன என வழிகாட்ட அந்தப் பேருந்தில் ஏகக் கூட்டம், இருந்தாலும் ஏறிக் கொண்டோம். பள்ளிப் பிள்ளைகளுடன் பள்ளிப் பிள்ளைகளாகவே...அனைவர்க்கும் சரியான சில்லறை கொடுத்த அந்த நடத்துனர் எங்களது மீதச் சில்லறை 6 ரூபாயை மட்டும் கடைசிவரை நாங்கள் கேட்டு வாங்கிக் கொள்ளும் வரை கொடுப்பதை ஒத்திப் போட்டார் என்பது மிகத் தெளிவாகவே தெரிந்தது. அந்நிய அசலூர்க்கார பயணி என்றும், சுற்றுலா பார்க்க வருவார்தாமே இருக்கட்டுமே என விட்டுவிடுவார் என்றுமாகவும் இருக்கக்கூடும். அவரே பள்ளிப் பிள்ளைகளை படிக்கட்டில் நின்று பயணம் செய்வதைத் தடுக்க, எனக்கு சர்க்கரை இரத்த அழுத்தம் ஏற்பட்டு விடக்கூடாதே என்றுதான் பார்க்கிறேன் கத்தி கத்தி அதைக் கொண்டு வந்து விடுவீர்கள் போலிருக்கிறதே என ஜாலியாக உரையாடிக் கொண்டிருந்தார்.

திருவரங்கம் கோவில் உலகின் மாபெரும் கோவில் திருப்பதியை விட மிகவும் பெரியது....ஆனால் உலகின் வெளி நாட்டுப் பயணிகள் எல்லாம் வந்து செல்லும் நிலையிருந்தும் ஓய்வறை அல்லது கழிப்பறைகள் சரியாக இல்லை... இலவசக் கழிப்பறை மிகவும் சிறிதாக சில அறை மட்டும் அதுவும் எல்லா இடங்களிலும் நீர் ஓடிக்கொண்டிருக்க....அன்று கொஞ்சம் மழைவேறு வானம் வேறு பிசு பிசுவெனச் சிறு தூறல் போட்டுக் கொண்டிருக்க கேட்கவே வேண்டாம் சொல்ல முடியவில்லை...அதையே ஏம்பா பேசிக் கொண்டிருக்கிறீர், நினைப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என மகன் தேற்றினார்....

Image may contain: plant, tree and outdoor

இது இங்கு மட்டுமல்ல இனி தொடர்ந்து சொல்லப் போகும் செல்லப்போகும் அத்தனை இடங்களிலும் நிலை கேலிக்குரிய கேவலமான கவலைக்குரியதாகவே இருக்கிறது. இந்த நாட்டில் சுதந்திர நாட்டில் 70 ஆண்டுக்கும் மேலான சுதந்திர நாட்டில் இந்நிலை இப்படி இருக்கிற ஒரே காரணத்துக்காக தமிழக முதல்வரையும், இந்தியப் பிரதமரையும் பதவி இறக்கக் கோரலாம்...யார் இதை எல்லாம் முதலில் ஒழுங்காக சுகாதார முறையில் எந்த துர்நாற்றமும் இல்லா பேருந்து சந்திப்புகளையும் நிறுத்தம் மற்றும் ரயில் சந்திப்புகளையும் கொண்டு வந்து சேர்க்க முனைகிறார்களோ அவர்களையே நம்மை ஆளும் தலைமயாக ஏற்கலாம்...

பைகளை பாதுகாக்க, திருவரங்கத்தில் காசு, ஆனால் இந்த சிறு நீர்க் கொட்டகைக்கும், காலணி வைக்கவும் காசு நீங்களாகப் பார்த்துக் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள். கட்டாயமில்லை. இலவசமே..மேலும் அன்னதானம் வேறு உண்டாம்...அதை எப்படி என நான் பரிசீலிக்கவில்லை.
வெளியே ஒரு தளர்ந்த யானையும் உள்ளே ஒரு வளர்ந்த யானையும்...ஆசி வழங்க பெரும் கூடம்...அந்த திருவரங்கத்தின் எல்லா இடங்களிலும் இரு சக்கர வாகனங்கள் குறுக்கும் நெடுக்கும் சென்று கொண்டிருக்கின்றன. இதை எல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும். பாத சாரிகள் சாரி சாரியாக செல்லும் இடங்களில் எல்லாம் இப்படி வாகனத்தில் திமிராக பூணுலுடன் வெறும் உடலுடன் இந்த மனிதர்களின் ஆதிக்கம்...மேலும் இந்த கோவில் நிலத்தை ஆக்ரமித்த கடை, வீடுகள், வணிகத்தலங்களின் ஆதிக்கம்...மாபெரும் ஆலயமும் அதன் சுற்றுப்  புறமும் மிகவும் மோசமாகவே...பராமரிப்புகளில் உள்ளன.\

50 ரூ 250 ரூ கட்டணம் மற்றும் இலவச தரிசனங்கள்...பள்ளி கொண்ட பெருமானை தரிசிக்க... உடன் இராமானுஜர் ஆலயம், சக்க்ரத்தாழ்வார் ஆலயம் ...இந்த இரண்டைப் பார்த்து கருடாழ்வாரை பார்த்து அதன் பின் மூலவர் தரிசனத்துக்காக‌ நாங்கள் 50 ரூ கட்டண வழியில் செல்ல முயன்றோம்... ஆனால் அதை உடனே திறந்து அனுமதிக்கவில்லை. கூட்டம் சேர்த்து, வரிசையில் வரச் செய்து மவுசு கூட்டுகிறார்களாம்... சுமார் ஒருமணி நேரத்துக்கும் பிறகு பாவலா எல்லாம் செய்து முடித்து திறந்து அனுமதிச் சீட்டை வழங்கினார்கள்..Image may contain: people standing, sky and outdoor

அங்கே ஒரு மணி நேரத்துக்கும் மேல் விரயம்.... உள்ளே நீண்ட வரிசைக்கும் பின் ஒரு இடத்தில் இலவசமாக வந்தோரும் கட்டணம் கட்டிப் பார்க்க வந்தோரும் கலந்து செல்ல வைக்கப்படுகின்றனர்.. மூலவர் இருக்கும் இடத்தில் ஒரு பிராணி என்னை அப்படியும் இப்படியும் பிடித்து ஆட்டி சும்மா வரக்கூடாது, தீபாவளிக்கு அல்வா கொண்டு வரலாமோல்லியோ என தள்ளி தள்ளி பெண்கள் மேல் தள்ளி விட்டு விடும்போலிருக்க... நான் அந்தப் பக்கமெல்லாம் பெண்கள் இருக்கிறார்களே நீங்கள் இப்படி செய்கிறீரே நியாயமா என்று கேட்டு வந்தேன்...மகன் அவனை சும்மாவா விட்டீர்,ஒரு அறை அறைந்திருக்க வேண்டாமா என்றான், இல்லை மகனே அது சரியில்லை நமது பிரதிநிதித்துவத்தை , மறுப்பை வெளியிட முறைகள் உண்டு...அதை வன்முறையாக்கி செய்தியாகி செய்தியாக்கி பலருக்கும் தொந்தரவாகிவிடக்க்கூடாது இல்லையே அதன் பின் அந்த மன நலம் குன்றியோரை மன நலம் குன்றியோர் என்பதற்கு மாறாக நம்மை மனநலம் குன்றியவர் என்று முத்திரை குத்தி விடுவார் ஊடகம் யாவும். எனவே எச்சரிக்கயாக கையாள வேண்டும் எனப் புத்தி கூறினேன். பெரியார் பணி நிறைவடையவே இல்லி போலிருக்கிறதே.. சொன்னால் எனது நண்பர்கள் அங்கே எல்லாம் நீங்கள் எதற்கு சார் போகிறீர் என்பார்கள்...விடுங்கள்...

வெளிவந்து கொண்டு சென்றிருந்த  சப்பாத்தியை உண்ண ஆரம்பித்தோம் ...ஒரு அமரும் மண்டபத்தில்...சற்று நேரத்தில் செவ்வரி ஆடை உடுத்திய ஒரு நபர் வந்து உணவு கேட்டார் அப்போது நாங்கள் தொடாமல் மீதமிருந்த ஒரு சப்பாத்தியை எடுத்து சட்னி கொடுத்து சாப்பிடுங்கள் என்றோம், உடனே அவர் இவ்வளவு தானா வேண்டாம் என்றார், போதாது என்றால் பாருஙக்ள் அங்கே, அன்னதானம் கொடுக்கிறார்கள், தயிர் சாதம், புளி சாதம் எல்லாம் போய் வாங்கிச் சாப்பிடுங்கள் என்றோம், அதுவும் வேண்டாம் காசு கொடுங்கள் என்றார் இல்லை என்று மறுத்து விட்டோம்...

உடனே அங்கிருந்து கிளம்பி சத்திரம் பேருந்து நிலையம் சென்று...அங்கே இங்கே என அலைந்து உடனே தஞ்சை போன்ற வாகனங்கள் சோன மீனா சினிமாத் தியேட்டர் அருகே தற்காலிக பேருந்து நிலையத்தில் உள்ளது என்றார்கள்...தஞ்சைக்கு அங்கிருந்து ரூ. 43. கட்டணம். ஆனால் அந்த ஒன் டூ ஒன் பேருந்தும் அப்படித்தான் நடத்துனர் தம் பணியை அங்கேயே முடித்து கீழ் இறங்கிக் கொள்ள ஓட்டுனர் எங்கும் நிறுத்தாமல் கொண்டு சென்று தஞ்சை புதிய பேருந்து நிறுத்தத்தில் விட்டு விடுகிறார்.

பொதுவாகவே எந்த பேருந்துமே எந்த மாவட்டத்திலுமே, அது சேலம் திருச்சி தஞ்சை எங்குமே பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்தாமல் சுலபமாக மறு பேருந்தைப் பிடித்து ஏறுவதற்கான வசதியுடன் சென்று கடைசி இடத்தில் நிறுத்தப்படுவதில்லை.. அது மட்டுமல்ல அதனால் பயணிகளுக்கு ஏற்படும் கூடுதல் கட்டண இழப்பை பற்றியும் அரசு சிறு துளியும் அக்கறை எடுத்துக் கொள்வதாக இல்லை. அன்று வெள்ளை, இன்று கொள்ளையோ கொள்ளை...கேட்டால் பெட்ரோ, டீசல் விலை அதிகம் போக்குவரத்து, வங்கி, பி.எஸ்.என்.எல்,ஆசிரியர் எல்லாருமே மாத ஊதியம் கோரிக்கை நிறைவேறாமல் போராடுகிறார்கள் என சாக்கு...இந்த போக்குவரத்து, பெட்ரோல் டீசல் விலை போன்ற மிக அதிக பட்ச பாராமுகத்துக்காகவே இந்த அரசுகள் தம்மால் மேலாண்மை செய்ய இலாயக்கு இல்லை என பதவி விலகலாம்... ஏன் எனில் அந்த பழைய பேருந்து நிலையம், புதுப் பேருந்து நிலையம் என மாறி மாறிச் செல்வதற்கே குறைந்த பட்சம் ரூ.. 5 முதல் 12 வரை கூட கட்டணமாகக் கொடுக்க வேண்டி இருக்கிறது இது சாதாரண கட்டணத்திற்கும் கூடுதலாக அரசு ஏற்படுத்தி உள்ள சுமை...
அதில் வேறு நல்ல வசூல்,
Image may contain: one or more people, people standing, sky and outdoor


தஞ்சை புதிய பேருந்து நிறுத்தத்தில் கொஞ்சம் சுடு நிலக்கடலை வாங்கிக் கொண்டு எப்படி இராஜ இராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் ஆலைய்த்துக்கு செல்வது என விசாரித்தோம். ஒரு நடத்துனர் கும்ப்கோணம் வண்டியில் நடத்துனரைக் கேட்டு ஏறிக் கொள்ளுங்கள் கடைசியில் ஏறிக் கொள்ளச் சொல்வார் என்றார். ஆனால் அவர் எமது வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவே இல்லை...

அவ்வளவு பெரிய சரித்திரப் புகழ் வாய்ந்த தலத்துக்கு பேருந்து வசதி சரியாக செய்து தரப்படவில்லை. பழைய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து இடம் கேட்டு நடந்து செல்ல வேண்டி இருக்கிறது. எந்த பேருந்திலுமே அதன் பேர் எழுதப்படவில்லை...என்னய்யா தமிழ் வாழும் எங்கே சரித்திரப் பேர் விளங்கும்?

அங்கே சென்றால் வெளி நாட்டு சில சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டி விளக்கிக் கொண்டிருந்தார் சுமார் ஒரு மணி இருக்கும்...ஈரம் எங்கும்...வழிநடையில் போட்டிருந்த காலடிப் பாய் நச நச வென கால் வைக்க முடியமல் இருந்தது...காலணி, பைகள் வாங்கி வைப்போர் கவனமாக காசு சம்பாதிப்பதில் குறியாக இருந்தனரே தவிர வழியில் சகதியாக வெறும் காலில் அந்த நீரை மிதித்து செல்லும் பயணிகளுக்கு என்ன நேர்ந்தால் தமக்கென்ன என வாழாவிருந்தார்கள். காலணிகளையும் பைகளையும் கொடுத்து 15 ரூ கட்டணம் கொடுத்து விட்டு...ஏராளமான ஸ்பேஸ் கொடுத்து கட்டப்பட்டிருந்த அந்த பெரிய கோவிலின் பரப்பை நுகர்ந்தோம்.விஸ்தீரணம் அளந்தோம். பெரு முயற்சியைப் பாராட்ட அளவே வேண்டாம். ஏன் எனில் இராஜ இராஜன் தம்மை இளமையில் பட்டம் கட்டி முடி சூட்டிக் கொள்ள அழைத்தபோது,,,கரிகாலன் போல,விஜயாலயன் போல என தமது பாரம்பரியத்தில் பரம்பரையில் ஆண்ட முன்னவர்கள் செய்த சாதனையில் நான் சிறிதும் செய்யாதபோது அந்த முடி எனக்கு எப்படி உரியதாகும் அது போல சாதிப்பேன் அதன் பின் முடி ஏற்பேன் என சொல்லியதாக மிக நீண்ட உரை செய்ததாக சரித்திரக் குறிப்புகள் உண்டு. அது போல கரிகாலனின் கல்லணைக்குப் பிறகு சோழர்களின் பேர் சொல்ல மாபெரும் அடையாளச் சின்னத்தை உருவாக்கி மறையாமல் விளங்கி இருக்கிறார். உள் பிரகாரத்தில் உள்ள ஒவ்வொரு தூணும், நந்தியும், மேல் விமானக் கல்லும் அந்த சோழர் கால சிற்பக்கலையின் பேருதராணங்களாக விளங்குகின்றன.

அங்கும் நாங்கள் அறிந்த வரை எங்குமே ஓய்வறைகள் எனப்படும் கழிவறைகள் காணப்படவே இல்லை. இதை எல்லாம் என்றுதான் எவர் அரசுதான் எந்த தமிழக அரசுதான் கண்டு கொண்டு பிரச்சனையை தீர்க்குமோ தெரியவில்லை...

நேரம் ஒரு மணி என்பதால் எல்லா சிவாலயங்களுமே பனிரெண்டுக்கு மூலவரின் சன்னதிகள் மூடப்பட்டால் நாலுமணிக்குத்தான் திறக்கப்படுகின்றன...அதன் பின் இரவு எட்டு, எட்டரை ஏன் ஆலங்குடி அபாயசகாயேஸ்வரர் சன்னதி குரு கோயில் ஒன்பது மணி வரை திறந்தே இருக்கிறது என்பதெல்லாம் செய்திகள்...

மூல விக்கிரகத்தை பார்க்காமல் வரக்கூடாது பார்க்காமல் வந்து விட்டால் சரியில்லை என்ற நம்பிக்கைகள் பக்தரிடம் உண்டு...அப்படி பார்க்காத மூலவரை மறுபடியும் சென்று பார்த்தே ஆகவேண்டும் என்ற நம்பிக்கையை வித்தை விதைத்துவிட்டனர். எனவே 4 மணி வரை என்ன செய்வது என உடனே பையை காலணிகளை பெற்றுக் கொண்டு... ஆலங்குடி செல்வது பற்றி விசாரித்தோம்.

கும்பகோணம் ஏன் செல்கிறீர் வேண்டாம், மாறாக தஞ்சையிலிருந்து நீடாமங்கலம் செல்லுங்கள் அங்கு  கும்பகோணம் செல்ல போகும் பேருந்து அதன் வழியாகவே செல்லும் அதில் ஏறி நீடாமங்கலத்திலிருந்து ஆலங்குளம்  செல்வது தொலைவு, நேரம் எல்லாம் குறைவு என்ற செய்தி நன்றாகவே இருந்தது...

Image may contain: one or more people and closeup

பழைய பேருந்து நிலையம் தஞ்சையில் இருந்து நீடாமங்கலம் செல்ல விசாரித்தால் அட இப்போதுதான் ஒரு வண்டி சென்றது, ஒன்னும் கவலை வேண்டாம், நீங்கள் சாந்தப்பிள்ளைக் கடை என்று ஒரு நிறுத்தம் உள்ளது அங்கு சென்று அதன் வழியே திருவாரூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் போன்ற எந்த வண்டி வந்தாலும் ஏறிக் கொள்க் நீடாமங்கலம் செல்லலாமெ என்றார்கள்...சுமார் ஒன்னரை மணி நேரம் காத்திருந்தது விரயம். விசாரித்தால் அரசுப் பேருந்துகள் பல நிறுத்தப்பட்டிருக்கும்...தனியார் பேருந்துதான் தீபாவளி முடிந்ததும் வழக்கப்படி இயங்கும் என்றார்கள்...

மிகவும் சோதனை...ஆட்டோ ,இல்லை என்றால் ஓலா வாடகைக்கார் பார்க்கலாமா என்றெல்லாம் எண்ண அலைகள்...நாங்கள் நெடு நேரம் பேருந்துக்கு அந்த நிறுத்தத்தில் இருந்ததைப் பார்த்த ஒரு அம்மன் சீருடையில் மாடர்ன் ட்ரஸ் அணிந்த  பெண் ஒருவர் நெம்பர் தருகிறேன் ஒரு போன் பண்ணித் தருகிறீர்களா பேசவேண்டும் என்றார்...நாங்கள் இசைவளிக்கவில்லை...

நேரம் மூனறைக்கும் மேல் ஆக திட்டத்தை மறுபரிசில்னை செய்து மறுபடியும் தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து மறுபடியும் தஞ்சைப் பெரிய கோவில் செல்ல பை, காலணிகளை மறுபடியும் ஒரு 15 ரூபாய் செலுத்தி விட்டு, மூலவர் சன்னதி நடை திறக்க சென்று கூட்டத்தில் சேர்ந்து வரிசையாக சென்று நாலுமணி சுமாருக்கு மூலவர் அறை திரைச்சீலை விலக்கப்பட பார்த்துவிட்டு...அதே ஓட்டத்தில் சுமார் 5 மணி சுமாருக்கு பழைய பேருந்தில் நீடாமங்கலம் நகரப் பேருந்து ஓன்றை தேடிக் கண்டு கொண்டு, அதில் நபருக்கு 19 ரூ. கட்டணம். பேருந்து செல்கிறது சென்று கொண்டே இருக்கிறது சுமார் 6 மணிக்குள் நீடாமங்கலம் அண்ணா பிரிவு சாலையில் கொண்டு இறக்கி விட்டனர். அதன் பின் அங்கிருந்து கும்ப கோணம் வண்டிக்கு சில நிமிடங்கள் காத்திருப்பு...அதுவே எமக்கு பெரிய வலி...ஏன் எனில் சரியான நேரத்துக்கு போய்ச் சேர்வோமா, சினிமாவில் கிளைமாக்ஸ் போல நெக் அன்ட் நெக் ஆக கடைசி நேரத்திலாவது சென்று அந்த ஆலங்குள குரு கோவிலுக்கு செல்ல முடியுமா என்றெல்லாம் பதை பதைப்பு. பதற்றம்.

அங்கு 7 ரூ கட்டணம் நபருக்கு. ஒன்பது மணி வரை கோவில் உண்டு என்ற செய்தி...கை கால் கழுவிக் கொண்டு இரண்டு நெய் டப்பா வாங்கிச் சென்று விளக்கில் விட்டு விட்டு, குரு மற்றும் அபாய சகாயேஸ்வரரை வணங்கிவிட்டு வெளிவரும்போது சுமார் 7 மணிதான் இருக்கும்...இலக்கும் நோக்கமும் நிறைவேறிவிட்டது... மகன் ஒரு மண் சிம்னி அகல் விளக்கை நினைவாக வாங்கிக் கொண்டான் அவனது சேமிப்பிலிருந்து. என்னிடம் கொடுத்த காசை வாங்க மறுத்து...
Image may contain: Vignesh, outdoor
அதன் பின் பேருந்து நிறுத்தம் சென்று ஓடி அங்கு அப்போதுதான் வந்த பேருந்து ஒன்றில் நீடாமங்களம் வரை என ஏறிக் கொண்டோம்...அந்த தனியார் பேருந்தில் நான் அமர்ந்த இருக்கைக்கு முன் இருக்கையில் கடைசியில் ஒரு  ஒட்டியிருந்த தகரம் ஆணிட் விழுந்து  தகரம் வெளி நீட்டியபடி பயணிகள் கையை காலை கிழிக்கும் நிலையில் இருக்க் என்னுடன் அமர்ந்திருந்த இரு பயணிகளும்,,,அது 3 பேரு அமரும் பக்கம் பேருந்தில்...அது பற்றி பேசிக் கொண்டனர். நான் இறங்கும்போது அந்த பார்வைக்கு ஏழமையாகத் தெரிந்த அந்த நடத்துனர் உதவியாளரிடம் அந்த தகரத்தைப் பற்றிக் காண்பித்து ஒரு ஆணி வைத்து அடித்து விடுங்கள், வரும் பயணிகளுக்கு இடையூறாய் அமைந்து காயம் ஏற்ப்டுத்தி விடக்கூடும் என எச்சரித்து விட்டு,...மனம் உவந்து எனக்குச் சேரவேண்டிய ஒரு ரூபாயை அந்த நபர் நேர்மையாக உங்களுக்குத் தர வேண்டும் என்று சொன்னதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என மனதுள்ளேயே ஆமோதித்துவிட்டு கீழே இறங்கி...தஞ்சைப் பேருந்து நிலையம் நோக்கி செல்லக் காத்திருந்தேன்...
Image may contain: outdoor
அங்கிருந்த ஒரு நபர் எர்ணாகுளம் கோவை வண்டி கூட போகும் அட விட்டு விட்டீரே என்றார் அந்த வண்டி சென்றுவிட்டது நாங்கள் அது போகுமா என அறியும் முன்னே...அவர் இங்கு தெர்மல் நிலையத்தில் எங்கள் ஊரில் பெரு சரக்கு ஊர்தி ஓட்டியதாகவும், சாம்பல் லோடு என்றும், காவிரியில் பாலத்தருகே வாகனம் நிறுத்தி விட்டு குளித்ததையும், அதன் பிறகு பால் வண்டி ஓட்டியதையும் அதன் பிறகு சொந்த ஊருக்கே வந்து செட்டில் ஆகியிருப்பதாகவும் உபயோகமாக தகவல் தந்தார்...ரயில்வே கேட் போடப்பட்டதால் கொஞ்ச நேரம் வாகனம் ஏதும் வரவில்லை...

சாப்பிடலாமா என்றால் அதற்கும் முடிவு செய்ய முடியாத நிலை. அதன் பின் தஞ்சை புதிய பேருந்து நிலையத்துக்கு ஒரு தனியார் பேருந்து வந்து எம்மை ஏற்றிக் கொண்டது...தஞ்சை புதிய பேருந்து நிலையம் செல்லும்போது சுமார் இரவு 9 மணி... வசந்த பவனம் பேருந்து நிலைய உணவகத்தில் ஒரு தோசையும் வெங்கயாய ஊத்தப்பம் ஆகியவை உண்டு உண்ணா நோன்பை முடித்து விட்டு...மறுபடியும் வாகனம் தேடினோம்...ஒரு படுத்துறங்கிச் செல்லும் பேருந்துஅதில் டிக்கட் இல்லை. முழுதும் நிரம்பியதாக சொல்ல, மறுபடியும் திருச்சி நோக்கி பயணம்...அதன் பின் அங்கிருந்து சேலம் வரும்போது 2.20 இருக்கும் அதன் பின் மேட்டூர் வந்தோம் விடியல் 4 மணிக்குள்.
Image may contain: people standing, sky and outdoor


ஆக 8.11.18 அதிகாலை 4 மணிக்கு பயணம் ஆரம்பித்து ( எழுந்தது 2 மணி ஆனாலும்) 9.11.18 அதிகாலைக்கு எமது பயணம் முடிந்தது... மறுபடியும் மேட்டூர் உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட் வந்து காய்கறி வாங்க என திரும்பும் பேருந்திலும் பெண்கள் அந்நேரத்தில் ஏறி வர ஆரம்பித்திருந்தனர். நமது உலகம் வேறு..ஆனால் அவர்கள் உலகம் அன்றாடம் அப்படித்தான் நடந்து வருகிறது...திருவரங்கம், தஞ்சைப் பெரிய கோவில், ஆலங்குடி குரு ஆலயம் என சென்று வந்து விட்டோம் சுமார் 24 மணிக்குள்...தயாரிப்புக்கென 2 மணி எனவே...26 மணிநேரம்...இப்படித்தான் சென்றது...அமருமிடத்தில் குந்துபுறத்துக்கு நிறைய தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டும், மூல வியாதி குதத்தை தாக்காத வண்ணமும் நிறைய நீர் குடித்தும் ஓய்வு எடுத்தும் சாதாரண வேலை நாளுக்குத் திரும்ப வேண்டும்..

Image may contain: 1 person, sunglasses, sky and outdoor


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


2 comments:

  1. எங்கள் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் திரு மணியம் - அருமையான, விரிவான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு கவிஞர் தணிகை

    ReplyDelete
  2. thanks for your feedback and sharing on this post sir. vanakkam. please keep contact

    ReplyDelete