Sunday, November 11, 2018

ஆரோக்யப் பட்டை: ஹெல்த் பேண்ட்: கவிஞர் தணிகை

ஆரோக்யப் பட்டை: ஹெல்த் பேண்ட்: கவிஞர் தணிகை

Image result for lenovo health band

நேரம், நாள், நிமிடம், காட்டி கடிகாரமாக, இதயத் துடிப்பைக் காட்டுகிறது நிமிடத்திற்கு இத்தனை என இதயத்துடிப்பு அளவு காட்டியாக, எத்தனை காலடி எடுத்து வைத்துள்ளோம் என எண்ணிகை காட்டுகிறது, எவ்வளவு தூரம் நடந்திருக்கிறோம் என தொலைவைக் குறித்துக் காட்டுகிறது, எத்தனை கலோரிகள் நாம் உண்ட உணவு இந்த இயக்கத்தால் செலவளிக்கப்பட்டிருக்கிறது என்று காட்டுகிறது...எவருடைய அழைப்பு நமக்கு வருகிறது, வந்திருக்கிறது என செல்பேசியை எடுத்துப் பார்க்காமலே அந்த எண்ணை நமது கைக்கட்டிய இந்த ஹெல்த் பேண்டே காட்டிக் கொடுக்கிறது, இவற்றையும் விட நமது உறக்கம் ஆழ்ந்த உறக்கமா அல்லவா எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதையும், தேவைப்பட்டால் அதற்கான செயலியை இணைத்துக் கொண்டால் நமது செல்பேசியை இந்த வார்ப்பட்டையுடன் இணைத்து அமைத்துக் கொண்டால் சர்க்கரை அளவு கூடப் பார்க்கலாம் என்கிறார்கள்...ஆனால் இந்த கடைசியில் சொன்னது தவிர மீதமுள்ளது அனைத்தையும் நான் பயன்படுத்தி வருகிறேன் இந்த ஹெல்த் பேண்ட்  (கை வளையம் ) மூலம்.

இதை விளம்பரத்துக்காக நான் பதிவாக இடவில்லை. இதன் பயன்பாடு அனைத்து வயதினர்க்கும் தரப்பினர்க்கும் அவசியத் தேவை என்றே
சொல்கிறேன்.

எனக்கு எனது தங்கை மகள் குடும்பத்தார் எனது நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி ஹெல்த் கான்சியஸ் பார்த்து மகிழ்ந்து அவர்கள் டென்மார்க்கில் இரண்டாண்டு இருந்தமையின் நினைவாக அங்கிருந்து வாங்க ஆர்டர் செய்து இங்கு வந்து வாங்கிக் கொடுத்தார்கள். அது முதல் இன்னும் அதிகமான ஆர்வத்துடன் எனதூ நடைப்பயிற்சியை மேற்கொண்டு எவை எவை எந்த அளவில் இருக்கிறது என்று பார்த்துக் கொள்ள ஆரம்பித்து விட்டேன்.

எனக்கு கிடைத்தது லெனோவா, இதை ஆரம்பத்தில் பட்டையைக் கழற்றி மின்னூட்டம் சார்ஜ் செய்ய சற்று சிரமப்பட்டேன் ஆனால் இப்போது பழகிவிட்டது ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு வாரத்துக்குப் போதுமானதாக இருக்கிறது. எம்.ஐ. கம்பெனியில் அப்படியே அந்த வார்ப்பட்டையிலிருந்து வாட்ச் போன்ற அந்த செட்டை சுலபமாகக் கழட்டி எளிமையாக சார்ஜ் செய்து கொள்ளும் வசதியுடனும் இருக்கிறது.

இதன் ஆற்றலையும் மனித ஆற்றலையும் கண்டு வியக்கிறேன். நல்லவற்றிற்கு பயன்படுத்தும்போதுதான் அறிவியல் இன்னும் பொலிவைப் பெறுகிறது..

நன்றி
அறிவியல் ஆக்கபூர்வமான பொருட்களுக்கும் அதை வடிவமைத்தார்க்கும் எனது தங்கை மகள் மற்றும் அவரின் கணவர்க்கும் இந்த பொருளை பயன்படுத்தும் வாய்ப்பை எனக்கு நல்கியமைக்கு.
இதை சரியாக செட்டிங் செய்து கொடுத்த டாக்டர் சஜித் அவர்களுக்கும்



இவண்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment