Wednesday, November 7, 2018

சர்கார்: கவிஞர் தணிகை

சர்கார்: கவிஞர் தணிகை

Image result for sarkar wiki

எனது தந்தையின் காலத் தலைமுறையில் அல்லது ஆங்கிலேய ஆட்சி நடைபெற்று வரும்போதும் அதன் தாக்கம் இருந்த போதும் இந்த சர்கார் என்ற வார்த்தை அரசாங்கம், ஆட்சி என்பவற்றிற்கு அதிகம் பயன்படுத்தப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்திப் படங்களிலும் அதிகம் புழக்கத்தில் உண்டு. ஹொசூர் அல்லது சர்கார் என்று எஜமானர்களையும் அழைப்பதுண்டு.

படம் பேசுகிறது. எனவே அதைப்பற்றிப் பேசத்தான் வேண்டும். சிகர் வாயில் பெண்கள் புடை சூழ ஆரம்பத்தில் கார்ப்ரேட் கிரிமினல் என்ற பேருடன் சுந்தர் ராமசாமி தனது வாக்கை செலுத்த வருகிறார். அவருடைய வாக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாக்கு கள்ள வாக்களிக்கப்பட்டிருப்பதைப் போல முன் கூட்டியே அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே அது முதல் கதை ஆரம்ப‌ம் என்று சொல்ல‌லாம்.

எனக்கும் ஒரு புளிய மரத்தின் கதை மற்றும் ஜெ.ஜெ. சில குறிப்புகள் எழுதிய சுந்தர ராமசாமிக்கும் (மறைந்த) கடிதத் தொடர்பு இருந்தது. ஆனால் இந்த சுந்தர் ராமசாமி வேறு. ஜெயமோகன் வசனம் எழுதி முருகதாஸ் கதை திரைக்கதை எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தில் அனைவரும் கூகுள் தலைவர் சுந்தர் பிச்சையைக் குறிப்பிட்டுள்ளதாக கதையில் சொல்கிறார்க்ள்...ஆனால் அப்படி எல்லாம் இல்லை.

கமல், ரஜினி, விஜய்,அஜித், இப்படி யார் நடித்திருந்தாலும் ஒரு நல்ல கதை வலுவாக கருப்பொருளாக  அமைந்திருந்தால் மட்டுமே அது நல்ல சினிமாவாக உருப்பெற அமையும் நம்மாலும் சலிக்காமல் பார்க்க முடியும். ஏன் எனில் சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேல் ஒரு இடத்தில் அமர்ந்து பார்க்க ருசியாக இல்லை எனில் நேர விரயம் என்றே கருதப்படும்.

முருகதாஸ் வருண் ராஜேந்திரன் என்பவர் எழுதிய செங்கோல் என்ற கதையை ஒட்டியே எழுதப்பட்டுள்ளது என்று ஏற்றுக் கொண்டு டைட்டில் கார்டிலும் பேர் போடுவதாகவும், நீதிமன்றத்திற்கு வெளியே முடித்துக் கொண்டு வெளியிட்ட படம் தேறிவிடும் போல் தான் இருக்கிறது.

முதலில் 49 ஒ பற்றி 49 பி பற்றி எல்லாம் சொல்கிறார்கள், நல்ல தடத்தில் கதை செல்ல, பழ கருப்பையாவும் இராதாரவியும் கொஞ்சம் காய் நகர்த்திவிட வரலட்சுமி சரத்குமார்(காஞ்சனா) வந்த பிறகு வழக்கமான சினிமாக் கதையில் செல்ல ஆரம்பித்து விடுகிறது அரசியல் நாடகத்தனமாக.

கீர்த்தி சுரேஷ் நாயகி என்ற பேர் அதிகம் வேலையில்லை. லிவிங்ஸ்டன் அவர் இவர் என்று நடிகர்கள் பட்டாளம், ஏகக் கூட்டம் ....எதிரியின் மாநாடு நடக்கும் இடத்துக்கு பைக்கில் கூட்டம் செல்வது, போன்ற காட்சிகள் ஒட்டவில்லை. இராதாரவி விஜய் டிவி பேட்டிக் காட்சிகள் முதல்வன் படக் காட்சிகளை ரகுவரன் வெர்ஸஸ் அர்ஜின் போல நினைக்கத் தோன்றுகிறது.

ஆரம்பத்தில் யோசனை செய்ய முடியா அளவு கதை நகர்ந்த போதும் சிறிது நேரத்தில் வழக்கமான சினிமா பாணிக்கு விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் முகமாக பாட்டு, சண்டை, என மாறி விடுகிறது. பழ கருப்பையாவை அவர் மகள் வரலட்சுமி சரத்குமார் மாத்திரை கொடுத்து கொல்வதும் அவரும் அந்த சாவை இன்முகத்துடன் ஏற்பதும் சற்று வேறுபாடான காட்சி அமைப்பு. அரசியலில் எதுவும் நடக்கும்யா என்பது போல..

அரசியல் ஜோடனையில் எதிரியை வீழ்த்த எத்தனை பொய்களை வேண்டுமனாலும் ஜோடித்து வீசலாம் என் வரலட்சுமி செய்கிறார். அதிலிருந்து சுந்தர் எப்படி மீள்கிறார் என்பதும்

ஃப்யூஸ் மானுஸ், இன்ன பிற சேவையாளர்கள் ஒரு காட்சி அமைப்புக்கு சேர்க்கப்பட்டிருப்பதும், வேறு பெயரில் சகாயம் ஐ.ஏ.எஸ் நினைவு கூரப்படுவதும் சில எண்ணத் தெறிப்புகள்

ஆனால் இவர் போல பெரிய வழக்கறிஞர்கள் வைத்து வாதாட முடியுமா வாக்களிக்க முடியாதார், மேலும் தேர்தல் ஆணையம்  நீதிமன்றங்கள் இப்படி வழக்குகளை நேர்மையாக எதிர்கொண்டு பதவியேற்பை நிறுத்துமா, தேர்தலை வாக்கு எண்ணிக்கையை தள்ளிப் போடுமா என்பதெல்லாம் கேட்கக் கூடாது.

கன்டெய்னர் லாரியில் கரன்ஸி, ஸ்டிக்கர் கலாச்சாரம் போன்றவை கடந்த ஜெ ஆட்சியை நினைவுபடுத்துகின்றன...ஒரே நாளில் தனி மனிதர் சரித்திரமாகமுடியும், சாதனை புரியுமளவு பெரும் மக்கள் கூட்டத்தை அணி திரட்ட முடியும் என்றெல்லாம் நம்பிக்கை கனவுகள் விதைக்கப்படுகின்றன. தலைவர் பிராண்டை சிதைத்துக் காட்டுகிறேன் என்ற சவாலுக்கு சரியான உத்தி சேர்க்கப்படவில்லை. சமூக தளங்கள் பெரிதும் தேர்தலை பாதிக்கும் என்ற சொல்லப்படுகிறது.

கதைதானே, சினிமாதானே என்று விட்டு விடக் கூடாது என அவர்கள் இரசிகர்கள் தங்களது நாயகனையும் ஒரு கட்சி ஆரம்பிக்க அழைப்பது வெளியில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் மூலம் நன்கு தெரிகிறது.

சர்கார் விலக்க முடியாத படம். ஒரு முறை பார்க்கலாம் .முன் பாதி விறுவிறுப்பு. பின் பாதி யூகித்தறிய முடியுமளவு....கதை நகர்தல்கள்...

நிறைய கூட்டமாக நடிகர்கள் ஆனால் சுந்தர் ராமசாமி மட்டுமே நிற்கிறார். மேலும் வரலட்சுமி வில்லியாக சண்டைக்கோழிக்கும் பிறகு இதிலும்...பார்க்க முடிகிறது...

சன்பிக்ஸர்ஸ் கலநிதி மாறன் குரூப்புக்கு பணம் பண்ணத் தெரிந்திருக்கிறது 120 கோடி முதலீட்டில் எடுக்கப்பட்ட படம் முதல் நாளிலேயே வசூல் 70 கோடி ஈட்டி விட்டதாக செய்திகள்.

ஏ.ஆர். ரஹ்மான் இசை அப்படி ஒன்றும் புயலை எல்லாம் கிளப்ப முடியவில்லை

முற்பாதி அமர்க்களம் பிற்பாதி சராசரி..இரசிகர்க்கு விருந்து. நூற்றுக்கு 45 கொடுக்கலாம் சமுதாய தாக்கம் அரசியல் என்று பேசுவதற்காக..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



No comments:

Post a Comment