Tuesday, July 19, 2016

தேவை இத்தருணம் ப்யூஸ் மனுஸ் விடுதலை கபாலி பட டிக்கட் அல்ல: கவிஞர் தணிகை.





தேவை இத்தருணம் ப்யூஸ் மனுஸ் விடுதலை கபாலி பட டிக்கட் அல்ல: கவிஞர் தணிகை.

இந்தி தேசிய மொழி என்கிற நாட்டில் ஏன் இந்தியில் பேசக் கூடாது ஒரு கணவனும் மனைவியும் என்கிற கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறது இந்த நாடு? உண்மையிலேயே இவர் பற்றி இன்றுதான் அறிந்தேன் ப்யூஸ் மனுஸ் என்கிற பேர் வித்தியாசமாக இருக்க இவர் உண்மையிலேயே மனுசர்களுக்கு ப்யூஸ் போட்டு எரியவிடுபவர்தாம் ஆனால் இவர் பேர் ப்யூஸ் மனோஜ் என்றும் தெரிகிறது.

ராஜஸ்தான் மாநிலத்துக் குடும்பம் தமிழ் நாட்டில் சேலத்தில் தங்கி குடும்பம் நடத்தும் காலத்தில் சேலம் சிட்டிஜன் பார்மை நடத்த ஆரம்பித்து நீர் வளம், நிலவளம், காட்டு வளம் எல்லாம் செய்ய ஆசைப்பட்டு எரிசக்தியை எளிமையாக கையாளலாம் எனத் துடித்த ஒரு இதயம் தமது குடும்பத்துக்காக அழுகிறது. தம்மை அழித்து விடுவார்களே என்று பயந்து கொண்டிருக்கிறது.

காரணம்: மக்கள் சார்ந்த நலத்துக்காக குரல் கொடுத்தது.ரெயில்வே முள்ளுவாடி கேட் கட்டுவதற்கு முறைப்படி நில அளவை எல்லாம் செய்து செய்யக் கூடாதா என இன்னும் சிலரோடு சென்று பிரதிநிதித்துவம் செய்ததுதான்...

இவர் மனைவியே சொல்லி இருக்கிறார் ஏன் இந்த நல்ல மனிதரை பூமியின் மைந்தனை இப்படி காவல்துறை அல்லது சிறைத்துறை அல்லது இந்த அரசு சித்திரவதை செய்கிறது? ஏன் எனில் இவர் ஒரு தலைவர் ஆகி இருக்கிறார். உண்மையிலேயே ஒரு தலைவர் ஆகி விடுவார் மக்கள் செல்வாக்கை பெற்றுவிடுவார் அதை முளையிலேயே கருவறுக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
( இந்த சினிமா அடிமைகளும், மதுக் குடியர்களும் இந்த சம்பவத்துக்காக அனுதாபம் கொள்வார்களா? எனக்கே இன்றுதான் தெரிந்திருக்கிறது. எப்படி இத்தனை நாள் இந்த மேகம் என் கண்ணில் படாமல் மறைந்திருந்தது என்றுதான் எனக்கே தெரியவில்லை...)


மேலும் இந்த பூமிக்கும் மனிதர்களுக்கு நல்லது செய்தததும்...மேலும் வினுப்ரியா என்ற பெண் அதாங்க மார்பிங் செய்த தன்னுடைய‌ படம் வெளியானதால் அவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காவல் துறை சார்ந்த உயரதிகாரி ஒருவரை அந்த பெண்ணின் பெற்றோர் சார்ந்த ஊரடங்கிய கூட்டத்தில் ஏற்கெனவே புகார் அளித்தும் நாங்கள் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறியது தவறுதான் என மன்னிப்பு கேட்க வைத்ததுதான்..என அவர் சொல்வது...ஆனால் இவர் உண்மையான விதையாக இருக்கிறார் விருட்சமாக மாறிவிடுவார் எனவே இவரை இவரது வீரியத்தைக் கிள்ளி விட வேண்டும் என ஆளும் வர்க்கம் கருதுவதை இன்று நான் காண முடிகிறது.

இப்பேர்ப் பட்ட ஒரு மனிதரை இன்றுதான் நான் அறிய முடிந்திருக்கிறது ஒரு அரிய மனிதரும் நண்பரும் விழி திறந்து காட்டி இருக்கிறார். அவரை துன்புறுத்துவது எந்த அரசுக்கும் நாட்டுக்கும் சிறப்பு சேர்ப்பதாக இல்லை. 

இவர் போன்றவர் நாட்டுக்கே சி.என்.என்/ஐ.பி.என் வழியாக எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த இந்தியராக விருது வழங்கப்பட்டிருக்கிறார். இவருக்கு ஏன் இந்த கதி? இந்த நாட்டில் சுதந்திரம் இல்லை என்பதற்கு இந்த கைது ஒரு அடையாளம்.

வெறும் சுதந்திரம் தினம் விழா என்று கொண்டாடி என்ன பயன்?
சட்டபூர்வமாகவும் நீதிபூர்வமாகவுமே அரசு அதன் முடியாமையை இவருக்கு விளக்கலாமே, இப்படி ஒரு கொலைகாரனை, குற்றவாளியை தாக்குவது போல தாக்குவது எந்த நீதிப் புத்தகத்தில் உள்ளது?\

உண்மையிலேயே குற்றவாளியே ஆனாலும் நீதி சொல்வதை செய்ய வேண்டியே காவல்துறை சிறைத்துறை உள்ளது ...என சட்டம் சொல்வதை அரசின் ஆணையை நிறைவேற்றுவதாக சொல்லி, மக்களை அடிமைப்படுத்தும் இந்த அரசும் அதன் துறைகளும் இந்த நல்ல மனிதரை வாழ விட வேண்டும்.இல்லாவிட்டால் எந்த குற்றமும் செய்யாத இந்த மனிதரை துன்புறுத்தும் அவலம் இந்த அரசுக்கு பெரும் அவப் பேராக முடியும்...

இது இந்த நேரத்தில் அந்த அரிய குடும்பத்துக்கு எமது ஒத்துழைப்புக் குரலான பதிவாகும்.போதும் அரசுகளே செய்த பாவம் எல்லாம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



2 comments:

  1. தேவை இத்தருணம் ப்யூஸ் மனுஸ் விடுதலை கபாலி பட டிக்கட் அல்ல: கவிஞர் தணிகை. = அரசுக்கும், மனிதர்களுக்கும் மனச்சாட்சி வேண்டும். எனது பக்கத்தில் பகிர்கிறேன். தொடர்ந்து செய்தித் தாள்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். வேதனையாக் இருக்கிறது. நன்றி திரு கவிஞர் தணிகை

    ReplyDelete
  2. always thanks sir . vanakkam.for your sharing,and comment this post.

    ReplyDelete