30 ஆண்டுகளுக்குப் பிறகு பாலமலையில்: கவிஞர் தணிகை.
வாழ்வில் எப்போதுமே நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களும் நடந்தேறிவிடுகின்றன.நடந்த பின் தான் இப்படி எல்லாம் நடக்குமா என்ற வியப்பு மேலிடுகிறது, நெருங்கியவரின் இறப்பு,நடக்காது என்று நினைத்த விஷயம் நடப்பது இதையே நடக்கும் என்பார் நடக்காது நடக்காது என்பார் நடந்து விடும் என்பார்.
30 ஆண்டுகளுக்கும் பிறகு அதே பாலமலையில் கால் வைப்பேன் என்று எப்போதாவது யாராவது சொல்லி இருந்தாலும் நம்பி இருக்க மாட்டேன். ஆனால் நேற்று மறுபடியும் பாலமலைக்கு சென்றேன் ஆம் 30 ஆண்டுகளுக்கும் பிறகு. அதே போன்ற ஆடி மாதத்தில்.
ஆடி மாதத்தில் காலடி வைத்தால் அடியோடு கெடும் என்பார் எம் தாய். அவர் இறந்த நாளும் இந்த ஆடி மாதத்தில்தான் ஆகஸ்ட் 9 அன்று வருகிறது. வேலைக்குத்தானே என மலைமேலே சமைத்து சாப்பிட்டபடி அரிய பல பணி செய்தேன் அதை எப்போதாவது தேவை ஏற்பட்டால் மறுபடியும் சொல்லலம். ஆனால் 3 மாதம் மட்டுமே அங்கு பணி புரிய முடிந்து, பிணி ஒரு பக்கம், கொல்லும் சதி ஒரு பக்கம் எனவே அங்கிருந்து வந்தவன் மறுபடியும் திரும்பவில்லை. இப்போது 30 ஆண்டு கழித்து அங்கே பணி பொருட்டு செல்ல நேரிட்டது என்னை வாழ்வில் ஏதோ சில புள்ளிகள் நாமறியாமலே நம்மை இட்டுச் செல்வதை மட்டும் உணர முடிந்தது.
ஆனால் முன்பு தனிமனிதனாய் சென்று சாதிக்க நினைத்து பின் வாங்கியவன் இன்று மருத்துவம் செய்யும் 2 பல் மருத்துவர்களுடன் பயணம் மேற்கொண்டேன்.
மருத்துவர் இருவரும் சேலத்தில் இருந்து வந்த அதே பேருந்தில் நான் எமது பிறந்த ஊர், இருக்கும் ஊரிலிருந்து ஏறி மேட்டூர் சென்றோம். அங்கு ஒரு நண்பர் நாங்கள் கண்ணாமூச்சி சென்று அதன் பிறகு ஜீப்பில் ஏறி பாலமலை செல்லலாம் என அறிவுறுத்தினார்.
ஜீப் வெகு நேரம் கண்ணாமூச்சியில் எங்களை காத்திருக்க வைத்தது. அதை ஓட்டும் ஒரு இளைஞர் அந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணிடம் கொஞ்சம் நேரம் செலவு செய்து விட்டார் அதற்கு ஜீப்பில் இருந்த ஒரு பெண் கமெண்ட்...அந்தப் பிள்ளை பஸ் ஏறும் வரை இவன் வந்து வண்டி எடுக்கப் போவதில்லை என்றார்.
அதன் பின் அந்த ஓட்டுனர் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு வருவதாக சொன்னார். அதன் பின் சிறிது நேரம் கழித்து வந்தவர் இன்னொரு பஸ் பார்த்து விட்டு செல்லலாமே என்றார். ஜீப்பில் இடம் இன்னொருவருக்கு இல்லாத படி 16 பேர் அமர்ந்திருக்க நெருக்கியடித்தபடி நிறைந்திருந்தது.
ஒரு வழியாக ஜீப்பை எடுத்தவர், உடனே உப்பு(உரம்) வாங்க வேண்டும் என ஒரு மலைவாழ் முதியவள் குரல் கொடுக்க, அவரிடம் இருந்து பணத்தை பெற்று ஜீப்பை வளைத்து ஓட்டு ஒரு உரக்கடை முன் நிறுத்தி உரத்தை வாங்கி ஜீப்பில் போட்டார் ஒரு மருத்துவர் சரியாக கால் வைக்க முடியாதபடி. மூட்டை மேல் கால் வைத்துக் கொள்க என்றார். ஆனால் வலைத்து காலை வைக்க முடியவில்லை
உரத்துக்கு போனது போக மீதம் இருந்த பணத்தை அந்த முதியவள் உரம் வாங்கச் சொன்னவளுக்கு உடனே தராமல் வண்டி டேஷ்போர்ட் முன் போட்டுக் கொண்டு வண்டியை கிளப்ப...காதடைக்கும் பாடல் சத்தம், காது செவிடாகிறது ஒலி அளவை குறை என குரல் கொடுத்தேன்,
சுமார் 40 நிமிட பயணம். வெறும் மண் சாலைதான் எல்லா சாலை வழியுமே மகாத்மா காந்தி 100 நாள் பணி மூலம் செய்யப்பட்டது. மழை வரும்போது அரித்து செல்லாதிருக்க ஆங்காங்கே நிறைய வேகத்தடைகள்...மழை நீர் சாலையை அரிக்காமல் ஓரம் செல்ல குழி வெட்டப்பட்டுமிருந்தது.
மிகவும் கடினமான சாலை...லாவகமாக நிறுத்தி, வளைத்து, பின் புறம் செலுத்தி பிறகு முன் எடுத்து வளைத்து இப்படியாக எல்லா வித்தைகளும் செய்து மட்டுமே வாகனம் ஓட்ட முடியும். நாலைந்து ஜீப்கள் இருக்கின்றன. மாறி மாறி மேலிருந்து கீழும் கீழிருந்து மலைக்கும் சண்டிங்க்.
கீழிருந்து மேல் செல்ல மிகவும் கடினம். கரணம் தப்பினால் மரணம் என்பது போல எங்கள் உயிரை ஓட்டுனர் கையில் கொடுத்து விட்டோம். மலை 3924 அடி கடல் மட்டத்திலிருந்து உயரம். 23 கிராமங்கள் உள்ளது. திம்மம் பொதி முதல் பாத்திர மடுவு, கெம்மம்பட்டி, இராமன் பட்டி இப்படி நிறைய கிராமங்கள்.
நாங்கள் சென்றது புல்லம்பட்டி. இதற்கு நியாயமாக 30 ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டார் எங்களுக்கு தெரியாததால் நாங்கள் முன் வண்டியில் ஒருவரை விசாரித்தபடி தலைக்கு 40 ரூபாய் கேட்டிருந்தாலும் எடுத்துக் கொண்டிருந்தாலும் எங்களால் ஒன்றும் செய்திருக்க வழி இல்லை.
ஆனால் அந்த இளைஞர்களிடம் அவ்வளவு பேராபத்தை சமாளித்து வாகனம் ஓட்டும்போதும் ஒரு நேர்மை.
கீழ் இறங்குவது ஏறுவதை விட சுலபம். வாகனம் 20 நிமிடத்தில் கூட இறங்கி விடும்.
நாங்கள் போன அப்போது மின்சாரம் இல்லை பி.எஸ்.என்.எல் லேன்ட் லைன் ஏதும் வேலை செய்யவில்லை. மின்சாரம் இருந்தால் மட்டும் போனும் வேலை செய்யுமாம். செல்பேசிக்கு டவர் ஏதும் கிடைக்கவில்லை.
எங்களை அந்த அங்கிருந்து சேவையாற்றும் கிறித்தவ தம்பதிகள் இரு நேரம் உணவளித்து தங்கள் திருப்தியை மகிழ்வை வெளிப்படுத்தினார்கள்/ அவர் தம் சிறு குழந்தைகளுக்கு எமது அன்பின் வெளிப்பாடாக மாம்ஸ் மேஜிக் பிஸ்கட் பாக்கெட் ஒன்றை அன்பின் பரிசாக அளித்தேன். அந்த பிஸ்கட் நன்றாக இருக்கிறது.
எப்படியோ நேற்று மாலை முதல் ஒலிபெருக்கியில் சொல்லி இருந்தோம் என்றார்கள். சொன்னது உண்மைதான் ஆனால் அத்தனை வரவேற்பில்லை மனிதம் அதன் ஆரோக்கியம் முக்கியம், மதமல்ல என்பது அங்கே இன்னும் தெளிவு படுத்தப் படவில்லை. பேட்டரி மின் விளக்கின் உதவியுடன் பணி புரிந்தோம்.
11 பேருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது 4 பெரியவர்கள், 7 சிறுமிகள். ஆனால் அனைவருக்கும் பல் முக்கியத்துவம், பாதுகாப்பு, ஆலோசனை பற் பராமரிப்பு பற்றி ஒவ்வொருவராக தனித் தனியாக சிறப்பாக சேவை யாற்றி கவனித்தோம்.
இயற்கை அன்னை இன்னும் கூட கொஞ்சம் காயப்படுத்தப் பட்ட போதும் கொலுவிருக்கிறாள். நல்ல காற்று இருக்கிறது. நல்ல குடி நீர் இருக்கிறதா எனப் பார்க்க வில்லை. நாங்களே குடி நீர் கொண்டு சென்றுவிட்டதால். சுற்றிப் பார்க்க வில்லை. ஆனால் சூழலை தெரிந்து கொண்டோம். மலை மலைதான். பேருந்தில் ஏறும்போது கவனித்தோம் சில இளைஞர்கள் ரூ.15க்கு ஒரு சிறிய பலாப்பழத்தை வாங்கி இருந்ததை. பலாப் பழ சீசன் முடிந்து விட்டது என்றும் முடியவில்லை என்றும் இரு வேறு கருத்துகள்...மலை, பலா முள், பயணம் எல்லாவற்றிலும் ஒரு தொடர்பு இருக்கிறது...இருப்பது போலப் படுகிறது.. வாழ்வோட்டத்திலும் கூட...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

என்னை வாழ்வில் ஏதோ சில புள்ளிகள் நாமறியாமலே நம்மை இட்டுச் செல்வதை மட்டும் உணர முடிந்தது.
ReplyDelete= நிஜம். உடல் நலனில் கவனமாக இருங்கள். வாழ்த்துகள்.
thanks for your feedback on this post sir. vanakkam.yes your advice is right. last two days cold, head and body ache with fever. taken first aid and Nila vembu kutineer. and turmeric treatments
ReplyDeletethanks for your feedback on this post sir. vanakkam.yes your advice is right. last two days cold, head and body ache with fever. taken first aid and Nila vembu kutineer. and turmeric treatments
ReplyDelete