Sunday, July 17, 2016

பகல் 12 மணிக்கு கடைத் திறப்பதால் டாஸ்மாக்கில் வியாபாரம் குறைந்து விட வில்லை: கவிஞர் தணிகை

பகல் 12 மணிக்கு கடைத் திறப்பதால் டாஸ்மாக்கில் வியாபாரம் குறைந்து விட வில்லை: கவிஞர் தணிகை



உண்மை வெறும் வார்த்தையில்லை. தொடர்புடைய நண்பர் ஒருவருடன் பேசித் தெரிந்து கொண்டதிலிருந்து:சேலம் மாவட்டத்தில் ஒரு கடைகூட எண்ணிக்கையில் குறைக்கப்படவில்லை,இடம் மாறுதல் செய்யப்படவில்லை. எடுக்கப்படவில்லை.காந்தி ஜெயந்தி அன்றும் கூட கடை அரை நாள் இருக்கிறது என்கிற செய்தி காந்தியவாதிகளுக்கு ஒரு கெட்ட செய்தி போதை வாதிகளுக்கு ஒரு நற்செய்தி.

பட்டதாரிகள் எப்போது இதற்காக பயன்படுத்தப் பட்டார்களோ, அந்த வேலையாவது வேண்டும் என அதற்குள் சென்று சேர்ந்தார்களோ அந்த பட்டதாரிகள் இனி எப்போதும் வேறு வேலைக்கு செல்லாதவாறு பிடித்துப் போய் விட்டதாம். ஒரு நாட்டிற்கு இதைவிட பெரிய கேடு என்னவாக இருக்க முடியும்? படித்தவர் நாட்டை வழி நடைப்படுத்துவார்கள் என்பதற்கு மாறாக டாஸ்மாக்கை மதுவிற்பனை செய்து கொண்டு இருக்க...நாட்டின் முக்கிய வருவாய்த் துறை அலுவலர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் இதற்கு ஊழியம் செய்ய...இதெல்லாம் எங்கோ சென்று முடியப் போகிறதோ?

ஏன் எனில் இவர்களுக்கு அலுவலக ரீதியாக கிடைக்கும் அரசு மாத ஊதியம் சுமார் 8,500ரூபாய் ஆனாலும் ஒரு நாளுக்கு சராசரி கணக்கில் இல்லாமல் வரும் கிம்பளம் குறைந்த பட்சம் 500ரூபாயாம். ஒரு நபருக்கு ஆசிரியர் பணி டி.ஆர்.பியில் கிடைத்தும் கூட போக மறுக்கிறாராம் காரணம் அவ்வளவு ஈர்ப்பு.கவர்ச்சி.பணியில் ஒரு நெளிவு சுளிவு. இந்தப் பணியில் இருப்பார் எவருமே வேறு பணிக்கு கிடைத்தாலும் செல்ல மாட்டார்களாம். காரணம் அவ்வளவு பேருக்குமே இது பிடித்துப் போன வேலையாக மாறி விட்டதாம்.

இப்படி அலுவலக ரீதியாக வரும் வருவாயை விட வேறு வழியில் வரும் வருவாய் அதிகம் இருப்பதாலும், மேலும் மிச்சம் மீதி என ஒரே கோலகலமாய் சரக்கெல்லாம் கிடைக்குமாம். எந்த நண்பர் வேண்டுமானாலும் வாருங்கள் இலவசமாகவே தாக சாந்தி செய்து கொள்க என்ற அழைப்பு படு ஆர்வத்துடன்....ஆனால் எம்மிடம் பேசிய நபர் மதுக்குடிப் பழக்கம் இல்லாதாராக இருப்பது கவனிக்கத் தக்கது



சில வேலைகளில்(சூபர்வைசர் அதாவது மேற்பார்வையாளர் போன்றவை) வேலைக்குப் போனாலும் போகவில்லை என்றாலும் மாதா மாதம் சம்பளமும் பங்கு பாக பிரிவினைகளும் மிகச் சரியாக வந்து சேர்ந்து விடுமாம். எனவே அட்டண்டன்ஸ், பயோமெட்ரிக், இந்த பாட்சா எல்லாம் அங்கே பலிக்காதாம். யார் புகார் அடிப்படையில் வந்து ஆய்வு நடத்தினாலும் அவருக்கு இலட்சம் அல்ல இலட்சங்கள் சரியாக சென்று விடுகிறதாம் பார்த்து நடந்து கொள்க எனச் சொல்லி விட்டு , அதென்ன புதுசா இருக்கு அதை எடு ம்...அந்த மேல இருக்கே அந்த பிராண்டையும் 2 எடு என வங்கிச் சென்று விடுவதால் எந்த தொல்லையுமே இல்லையாம்...



மேலிருந்து கீழ் வரை எல்லாமே ஒரு அட்ஜஸ்ட்மென்ட் இருப்பதால் ஒன்றும் யாரும் யாரையும் செய்ய முடியாது, செய்து விடுவதில்லையாம். அரசுக்கும் எல்லா விவரமும் தெரியும் என்றாலும் அவ்வளவு வருவாய் இந்த டாஸ்மாக் சுரங்கத்திலிருந்து கிடைப்பதால் எந்த நடவடிக்கையும் எதிராக இல்லையாம்...மேலும்  ஊழியர்களுக்கு சம்பளம் எல்லாம் ஏற்றமாட்டார்களாம். ஏனெனில் அவர்களுக்கு கிம்பளம் எவ்வளவு வரும் என்று தெரியுமாம். சங்கம் எல்லாம் கேட்டுக் கொண்டே இருப்பது ஊழியத்தை நிரந்தரம் செய்ய வேண்டி அரசுப் பணியாக மாற்ற வேண்டிதானாம்.

நாலைந்து கடையிலிருந்து மட்டும் வங்கியில் ஒரு கோடிக்கும் மேல் இருபதாயிரம் வரை மாதா மாதம் வசூல் வந்து கொட்டுமாம்...வங்கியில் இந்தப் பணத்தை எல்லாம் எண்ணி அத்தாட்சி செய்யவே வெகு நேரம் பிடிக்குமாம். கட்டி விட்டு வந்து விட வேண்டியதுதானாம் அதன் பிறகு வங்கியிலிருந்தே கூப்பிட்டு எண்ணி முடித்து ஒப்புகை ரசீது தந்து விடுவார்களாம். எப்படிதான் கிடைக்கிறதோ இந்த இவ்வளவு பணமும் நமது குடிமக்களுக்கு என வியப்படைய வேண்டியதிருக்கிறது. நடக்கும் கொலை,கொள்ளை, நகை பறிப்பு, திருட்டு யாவும் இதன் அடிப்படையில் தானே நடக்கிறது அது மட்டுமின்றி கல்யாணம், கருமாதி, குடும்ப நிகழ்வு, கேளிக்கை யாவும் பள்ளி மாணவர்கள் வரை இதல்லாமல் இல்லையே...

தமிழனின் மானம் எல்லாம் போதையில் போய்விட்டதாம். இனி இவனையும் அதையும் பிரிக்கவே முடியாதாம்.அதன் எதிரொலிதான் தேர்தல் முடிவுகள் இவை அனைவரும் அறிவர்.



பணம் எண்ண முடியாத அளவு சென்று அங்கே கொட்டுகிறது...இனி அந்தத் துறையை தமிழகத்தின் அரசுத் துறைகளிலிருந்து நீக்கவே முடியாது...

இதனால் பாதிக்கப்பட்ட, விபத்தில் சிக்கிய , சீரழிந்த குடும்பங்கள் பற்றி எல்லாம் பேசினால் எழுதினால் எவருக்கும் பிடிக்காது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment