சரஸ்வதியின் சிரிப்பும் இலட்சுமியின் துடிப்பும் பார்வதியின் வெடிப்பும்: கவிஞர் தணிகை
கல்வியா செல்வமா வீரமா அன்னையா தந்தையா தெய்வமா ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா? டி.எம்.எஸ்.பின்னணி பாடிய பாடல் சிவாஜி வாயசைப்பில் நடிப்பில் சரஸ்வதியின் சபதத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் நன்றாக இருக்கும். என்றும் கேட்கலாம்.
ஆனால் இன்று செல்வத்தைப் பெற்றிருந்தால் மட்டுமே கல்வி என்ற நிலை நாடெங்கும் ஏற்பட்டு விட்டது. பள்ளிக் கல்வி வரை அரசின் ஆதிக்கம் நிலவ மேல் பட்டப் படிப்பு, தொழி முறைக் கல்வி யாவும் தனியார் குறு நில மன்னர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது.
பள்ளிக் கல்வி எல்லாம் கூட நகர்புறம் சார்ந்த தனியார் ஆதிக்கம் இப்போது கிராமப் புறங்கள் எல்லாம்கூட கோலோச்சத் தொடங்கி ஆண்டுகள் பல ஆகியும் அரசு இதைப் பற்றி ஏதும் கண்டு கொள்வதாகவே இல்லை.
ஆயிரக்கணக்கான நூற்றுக்கணக்கான பிள்ளைகள் பயிலும் பள்ளிகளில் அதற்கு ஏற்புடைய கட்டமைவுகள் இல்லை. ஏன் சொல்லப் போனால் கழிப்பறை வசதிகளும், அதை தூய்மைப்படுத்தும் மனித சக்தியும் வளங்களும் காணப்படவில்லை. கட்டமைவும் ஆசிரியர்களும் உள்ள பள்ளியில் சில மாணவர்களே உள்ளனர். அரசு செலவு செய்யுமளவிற்கு மாணவர் சேர்க்கைகளே இல்லை.
கல்வி வேண்டுமானால் இலட்சக்கணக்கில் , கோடிக்கணக்கில் செலவு செய்யும் தகுதி வேண்டும். அந்த அளவு பணத்தைப் பெற எல்லா வழிமுறைகளும் தெரிந்த வாழ்வு வாழத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் கல்வி, செல்வம், வீரம் எல்லாம் இருக்கும்
செல்வம் என்றால் 16 செல்வமல்ல, வீடு, நிலம், கார், கரன்ஸி, வங்கிக் கணக்கில் உள்ள இருப்பு,இவைதான்.
இங்கு வீரம் என்பது அடியாள், வேலையாட்களை கையாளும் முறை எனப் பொருள் படும்.
வீரம் என்றால் ஒரு பெண்ணை ரெயில் நிலையத்தில் வெட்டுவதும் அடிப்பதும் என்று ஆகி விட்ட இளைஞர்களை என்னதான் சொல்வது? எப்படித்தான் இளைஞர் என்பது? கல்வி என்றால் பெண் தலையை வெட்டி அசிங்கமாகப் பிரபலப் படுத்தி ஊடகங்களில் அலைய விட்டு அவர்கள் அறிவியல் மேதமையை தொழில் நுட்பம் வழியாக காட்டிக் கொண்டு அந்தப் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவு அழிவு சக்திக்கு தமது ஆக்க சக்தியை ஆற்றலை பயன்படுத்தும் இளைஞரை எப்படி இளைஞர் என்பது? இளைஞர் என்று ஏற்றுக் கொள்ள முடியும்? இப்படி பயன்படுத்தப் பட்ட சக்தி அடுத்து சிறையில் பல்லாண்டு முடங்கி விடப் போகிறது அல்லது மரணம் என்று முடிவு எய்தப் போகிறது...
இந்தியாவில் இது போன்று ஆக்க பூர்வமான சக்திகள், ஆற்றல் பேராற்றல் இந்த நாட்டுக்கும் வீட்டுக்கும் பயன்படாமலே விரயமாகிப் போகிறது... இவர்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் என்ற ஆற்றுமைப் படுத்த நல்ல தலைமை இல்லை. நல்ல தலைமைகளை எவரும் ஏற்பதுமில்லை.
இன்னும் தரிசாகி வரும் இந்திய விவசாய நிலங்கள் பற்றி சொல்லவே வேண்டாம். அது போலவே நமது இளைய தலைமுறையும்.
இதையெல்லாம் கண்டும் காணாமல் ஊக்கப்படுத்தி மது, புகை , போதை போன்றவற்றால் இவர்களை எல்லாம் நாசப்படுத்தி வரும் அரசை அரசுகளை , சட்டம் நீதி நிர்வாகத்தை நாம் எப்படி நல்ல நிர்வாகம் நல்லரசு என்று ஏற்றுக் கொள்ள முடியும்?
பொது இடங்களில் புகை பிடிப்பதையும், பொது இடங்களில் மது புட்டிகள் கிடப்பதையும் மதுப் புட்டிகள் போல மனிதர்கள் குடித்து விட்டு கிடப்பதையும் எப்படி ஒரு அரசு அனுமதிக்க முடிகிறது?
இது போன்ற விஷயங்களில் ஏதாவது செய்தால் ஒவ்வொரு மனிதருக்கும் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு வரும், அவன் எவ்வளவு பெரியவன் சிறியவன் ஆனாலும் பொது இடங்களில் எச்சில் துப்ப மாட்டான், சிறு நீரும் மலமும் கழிக்க மாட்டான். இங்குதான் சாக்கடை எங்கும் பிளாஸ்டிக் பைகளாக நிரம்பிக் கிடக்கிறதே அதை எந்த அரசு எப்படி சரி செய்யப் போகிறது? என்று சரி செய்யப் போகிறது? அதற்கெல்லாம் நேரம் இல்லை. எனவே பொது இடங்களில் குத்து வெட்டு கொலை, கொள்ளை, திருட்டு யாவும் இயல்பாக ஆகிவிட்டது.
அரசின் வேலையா தனி மனிதர் பணியா இவை எல்லாம் என்ற பட்டி மண்டபஙகள் நடத்த வேண்டிய தேவயே இல்லை. இரண்டுமே . என பட்டி மண்டப பொது முடிவு போலவே இதற்கும் . ஒவ்வொரு மனிதருக்கும் அந்த உணர்வு வேண்டும், அதை ஏற்படுத்தும், கட்டுப்படுத்தும், ஊக்கப்படுத்தும் செயல்களை அரசு மேற்கொள்ள வேண்டும் . இல்லையேல் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன அழிவு மிக அருகாமையில் வந்த வண்ணமே இருக்கிறது. அதற்கான சான்றுகளே நாம் இன்று காணும் சமூக காட்சிகள் யாவும்.
கல்வி, செல்வம், வீரம் என்பதன் பொருள் யாவும் பால் திரிந்து போனது போல விரயமாகி விட்டது.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Really sad the way things are going. Parents must educate their kids.
ReplyDeletethanks for your feedback on this post jagannathan rangan.vanakkam. please keep contact sir.
ReplyDelete