Tuesday, July 26, 2016

"மூச்சுக் காற்று" - கவிஞர் தணிகை...

21 ஆம் நூற்றாண்டில்
_______________________

வணிக வளாகங்களாக‌

தொழுகைக் கூடங்கள்

கல்விச் சாலைகள்

மருத்துவ மனைகள்

அரசு அலுவலகங்கள்

கட்சிகள்

சட்ட மன்றங்கள்

நீதி மன்றங்கள்

பாராளுமன்றம்

மக்கள்?...

மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி

குடி எவ்வழி படை அவ்வழி
படை எவ்வழி குடி அவ்வழி...

==== கவிஞர் தணிகை.




உன்னைக் காண:
________________

திருப்பதி சென்றேன்
திருவண்ணாமலை சென்றேன்
திருவரங்கம் சென்றேன்
பழநீ சென்றேன்
சமயபுரம் சென்றேன்

சிருங்கேரி சென்றேன்
மூகாம்பிகை சென்றேன்
தர்மஸ்தலம் சென்றேன்
சுப்ரமண்யா சென்றேன்
காசி இராமேஸ்வரம் சென்றேன்

அமிர்தசரஸ் சென்றேன்
ஜெரூசலேம் சென்றேன்
பெத்லகேம் சென்றேன்
வாடிகன் சென்றேன்.




மெக்கா, மதீனா சென்றேன்
___________________________,,

________________________________,,

_____________________________,,,,,

நீ
இங்கிருப்பது அறியாமலே
எங்குமிருப்பது புரியாமலே!





 ____ கவிஞர் தணிகையின்

"மூச்சுக் காற்று" கவிதைத் தொகுதியிலிருந்து.....


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை...

No comments:

Post a Comment