Sunday, July 31, 2016

தணி கை தூவிடும் வாடா பா இதழ்கள் தெய்வா(னை) தாய்க்கு.




சேர்க்கை
_________

நீங்கள் யார்

என்று கேட்காத அடைக்கலம்

பறவைக்கு


தேவைப்படும் எல்லாமே

ஓர் நாள்

தேவைப்படாது

மனிதர்க்கு


சண்டையிட்டால் மட்டுமே

உணவு

வன விலங்குக்கு


மழை

இயற்கை


மகசூல்

செயற்கை


இதில்

நீ, நான், அவன், அவள் , அது

குடும்பம், பகை

நட்பு , உறவு

எல்லாம் வேடிக்கை.


‍‍‍___ கவிஞர் சு. தணிகை.



பொற்காலத்துக்கு
____________________



எல்லாமே

ஒரு நாள் குப்பை


எந்த வாழ்வுக்குமே

ஒரு நாள் குட்பை



மிருகம் பறவைகளை விட‌

மனிதர்க்கு அறிவதிகமே!

எனினும்

ஆயுளும் அமைதியும்

குறைவே.



கற்க வேண்டியது

இயற்கையே!

பேராசைப் பயணம் போதும்


திரும்பச் செல்வோம்

புறப்பட்ட இடம்


கற்காலத்துக்கல்ல.

____ கவிஞர் சு. தணிகை



நீ மட்டுமென்ன அதிசயமா?

___________________________

நீ மட்டுமென்ன அதிசயமா?

என்று

 காலம்

உன் கையை ஒடிக்கும்


நீ மட்டுமென்ன அதிசயமா?

என்று

காலம்

உன் பொருள்களை

இழக்கச் செய்யும்


நீ மட்டுமென்ன அதிசயமா?

என்று கேள்வி கேட்கும் காலம்

உன் உறவுகளைப் பிரிக்கும்


நீ மட்டுமென்ன அதிசயமா?

என்று

காலம்

உனையும்

உள் வாங்கிக் கொள்ளும்.



நீ மட்டுமென்ன அதிசயமா?

என்று கேள்வி கேட்கும்

காலத்தின் முன்

விதி விலக்கின்றி

நாம் அனைவரும்.



 அவ்வப்போதைய‌

உண்மைகளை

உணர முடியாமலே

போய் விடுவதுதான்


வாழ்க்கை.

வாழ்

கை.

 ___ கவிஞர் சு.தணிகை.


மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை



ஆகஸ்ட்.9 .2016 என் தாய் தெய்வா(னை)10 ஆம் ஆண்டு நினைவு நாளுக்கு: போகிற போக்கில் என்ற கவிதைத் தொகுதியிலிருந்து.


1 comment:

  1. thanks for your feedback and comment on this post sir vanakkam.plese keep contact. Always I pray for your welfare.

    ReplyDelete