Monday, July 18, 2016

நான் கபாலீஸ்வரன்டா: கவிஞர் தணிகை

நான் கபாலீஸ்வரன்டா: கவிஞர் தணிகை



நகைச் சுவை: நீ கபாலின்னா நான் கபாலீஸ்வரன்டா என்றான் கனகு.சினிமாவை சினிமாவாப் பாருங்கடா என்றான் செல்வம்.அமெரிக்காவில் 400 தியேட்டர்கள், இந்தியாவில் ஆயிரக்கணக்கான தியேட்டர்கள் என 5000 , 10,000 தியேட்டர்களில் என ஏகப்பட்ட செய்திகள்...டிக்கெட் கிடைக்கவில்லையாம் ஆன் லைன் புக்கிங்கில்.

நீ கபாலின்னா நாந்தான்டா உண்மையான கபாலீஸ்வரன்,ஏன் கபாலீஸ்வரனைக் கோயிலைக் கட்டியவன் என்றான் சுந்தரம்.எது எப்படியோ 22 ஆம் தேதி தமிழகத்தில் மட்டும் 120 ரூபாய் டிக்கட்டாம் மற்ற இடங்களில் 1500 வரை செல்கிறதாம். டிக்கட் கிடைக்கவில்லையாம் முதல் 10 நாட்களுக்கு. அதுக்கு மேல் அதில் என்ன இருக்குன்னு எல்லாருக்கும் தெரிந்து விடப் போகிறதே !

...என்னடா நடக்குது நாட்டில? நகைச் சுவை செய்ய நேரமாடா இது? தங்க விலை 24000 என்றும் எல்கேஜி குழந்தையை சேர்த்த 35000 என்றும் மருத்துவம் படிக்க கோடிகள் என்றும் நன்கொடை கேட்கும் நாட்டில் பயணம் எல்லாம் கடும் சிரமமாகிக் கொண்டிருக்கும் நாட்டில் எங்கு நோக்கினும் நாற்றமும், காலை 7 மணி ஆகும் முன்னே காமரஸம் காதல் பாடும் பாட்டு கேட்கும் பேருந்தில், அந்த பேருந்தில் பரட்டை,அழுக்கு, நாற்றம், குடியின் போதையின் ரேகை செருப்பில்லாமல் ஒரு இந்தியனை பார்த்த பின்னும் ஏது நகைச் சுவை? எப்படி வரும் நகைச் சுவை...சினிமா பார்த்தேதான் குட்டிச் சுவரானது இந்த தமிழ் நாடு இன்னுமா?...

நான் ரெயில்வேக்காரன்டா என்று ஒரு பொது இடத்தில் பீடி குடித்தபடி இருக்கும் போதை நாயகன் சொல்கிறான் பயணிகள் ரயிலில்..என்னை எவனுமே ஒன்றும் செய்ய முடியாது என ஆணவத்தில்...அது போலத்தான் இந்த கபாலியும்...நாட்டு மக்களின் எந்த பிரச்சனையும் தீர்க்க முடியாத திரைக்கபாலி, டிஜிட்டல் கபாலி. வெறும் பொம்மை. வெறும் பிம்பம். உண்மையில் இதற்கு இல்லை ஒரு கட்சிக் கம்பம் கொடி அவ்வளவுதான். விஜய்காந்த் டப்பா கழன்ட மாதிரி இதுவும் ஏதாவது செய்து பார்க்க மனைவி லதா அம்மையார் விட்டிருந்தால் இந்த தியான குரு விலாசமும் அப்படித்தான் போயிருக்கும்...

கிராம முன்னேற்றத்திற்காக 10 ஆண்டு உழைத்து பசிப்பிணியை சம்பாதித்துக் கொண்டவர்க்கு இருக்கும் இடம் தெரியா கூடு, இந்த போலி சினிமா நாயகர்களுக்கு எத்தனை எத்தனை விளம்பர ஏடு, ப்ளக்ஸ் போர்டு.?இதற்காக 160 வலைதளங்களில் இந்தப் படத்தை வெளியிட்டு விடாதவாறு தடுத்து வைத்திருக்கிறார்களாம்.

முத்தூட் பைனான்ஸ் வேறு இந்தப் படம் 22 ஆம் தேதி வெளியாவதை எண்ணி இதன் இரசிகர்களுக்கு பணத்துக்குப் பஞ்சம் என்ற தேதியில்...1000 ரூபாயை கடனாக கொடுத்து தவணைகளாக வட்டி போட்டு வாங்கிக் கொள்ளவும் தயாராம்...



தியேட்டர்கள் அல்லாமல் நட்சத்திர ‍ஹோட்டல்களில் வேறு 1300 ரூபாய்க்கு காண்பிக்கும் எண்ணம் வேறு உள்ளதாம். பலித்தால்....

பை, டப்பா, வெங்காயம் எல்லாவற்றிலும் கபாலிதானாம்.அப்படி ஒரு வியாபாரமாம். எல்லா சினிமா சாதனைகளையும் இது மூழ்கடித்து விட்டதாம். அடுத்து சங்கர் எடுக்கும் 2.0 2017ல் எப்படி வெளியிடுவது என இந்த பழாய்ப்போன பழசான பழி வாங்கல் கதை
இப்போதே சங்கருக்கு கிலி ஏற்படுத்துகிறதாம்.

அண்ணன் அமெரிக்காவில்...இங்கு இரசிகர்கள் அடி தடி தகராறில்...டிக்கட்டுக்கு.

அரை வேக்காடுகளுக்கு ஒரு அரிய செய்தி: மாத்திரை வாங்க 5 ரூபா பத்தாம எத்தனை தாய்மார்கள் இருக்காங்க தெரியுமாடா? ஒரு ரூபா காசுக்காக பிச்சை எடுக்கும் எத்தனை கொடுமைகள்...அவர்களுக்கு எல்லாம் அன்போடு கருணையோடு எப்போதாவது நீ தர்மம் செய்திருப்பாயா? நினைத்து பார் இரசிகா ஓ ரசிகா...இவன் காலை எடுத்து வைத்தா நெருப்பு, பூகம்பம் எல்லாம் இருக்கும் சினிமாவில் ...ஆனால் உண்மையில் நாட்டுக்கு என்ன செய்தார் என்று கேட்டுப் பாருங்கள் அதன் பின் இவருக்கு பத்ம விபூசன், கடன் நிலுவை வழக்குகள் எல்லாம் தள்ளுபடி ஆன கதை எல்லாம் மோடிக் கதைகளாகத் தெரியலாம்.

ஆளும் கட்சிக்கார இந்த கதா நாயகனை மலேசிய மந்திரிகள் வந்து பூங்கொத்து கொடுத்து படம் எடுக்கும்போது வந்து பார்த்த கதை எல்லாம் உண்மை....தமிழ், தெலுங்கு, மலாய் மொழிகளில் ஒரு வெறும் பிரமையை உருவாக்கி காட்சி பிம்பமாக்கி இருப்பார்கள் அதனால்தான் இது எங்கே இணையத்தில் வெளியாகி விட்டால் படம் லிங்கா கணக்கில் மார்க்கும் வசூலும் அள்ளி விடும் என ஏகக் கெடுபிடி.

முந்தா நேத்து வந்த முட்டாப்பயல்களுக்கு எல்லாம் சினிமாவில் வந்து விட்டால் கட் அவுட் பிளக்ஸ், மாலை மரியாதை கோடி கோடியாக வருவாய்...

மது மக்கள் மான்மியம் இவர்கள் பின்னே சென்று கொண்டே இருக்கிறது ...ஆக்கபூர்வமான கருத்துகளுக்கும் நாட்டை செப்பனிடத் துடிக்கும் உயிர்களுக்கும் என்னடா செய்திருக்கிறீர். எல்லாவற்றையும் மீறித்தானே கலாமும், தெரஸாவும் காந்தியும் பகத்தும் தோன்றினார்கள்...

கல்லூரியில் படிக்கிறோம் என இந்த பொய்களின் பின் இன்னும் எத்தனை காலம் தான் ஓடும் இந்த தமிழகம்? பிள்ளைகளை நெறிப்படுத்தாமல், நேரிய வழி செலுத்தாமல் இன்னும் எத்தனைக் காலம் பெற்றோர் சென்றபடி இருப்பர்...? நாட்டுக்கு எது தேவை என இன்னும் எத்தனை காலம்தான் சொல்லாமல் ஆசிரியர் குழாம் இந்த வேஷக்கார்கள் பின்னே பிள்ளையை அலைய வைக்கும்? வெட்கம்...



டேய் நான் கபாலீஸ்வரன் கோவிலைக் கட்டியவன்டா, அதனுள் இருக்கும் கபாலீஸ்வரனையும் தெரியும் இந்த கபாலியையும் தெரியுன்டா...எல்லாம் பொய், பொய்களின் மேல் எந்த கட்டடத்தையும் எழுப்ப முயலாதீர்...உண்மையை உரக்கச் சொல்வோம் உலகத்துக்கு அது கசப்பு மருந்தாகும்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பி.கு: இந்த படத்தை செலவு செய்யாமல் பெரும் செலவு செய்யாமல் பார்க்க முயல்வோருக்கு எல்லாம் என் வணக்கமும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

அல்லது பார்க்காமல் இருப்போர்க்கு அதை விட உத்தமமான வணக்கங்கள்.

எல்லாம் 10 நாள் விட்டுப் பிடியுங்க கபாலி எல்லாம் கால் தூசு, உங்க காசு மிச்சமாச்சு. வெளியே தெரியாமலே விற்று விட நினைக்கிறார்கள். ஒர் ப்யூஸ் போன பல்பை எரிய வைப்பதாக வேடிக்கை காட்டி. கவர்ச்சி சினிமா நுரையில் மூழ்கிடச் செய்து... போதையின் பின் போகும் இளையவர்கள் இந்த சினிமா போதையின் பின்னே அலைய வேண்டாம் எனச் சொல்வது எமது கடமை. போதி மரத்து புத்தரின் போதனையைக் கூட கேட்க வேண்டும் எனச் சொல்லவில்லை உங்க பெற்றவர்களுக்கு மனம் குளிர ஒரு ஆடை, ஒரு வேளை சோறு, உங்கள் சொந்த சகோதர சகோதரிகளுக்கு உபயோகமாக ஒரு செருப்பு, ஒரு முழம் பூ வாங்கிக் கொடுங்கள் அதன் பின் கபாலிடா, நெருப்புடா நெருங்குடா எல்லாம் பார்க்கலாம்.



No comments:

Post a Comment