Wednesday, July 27, 2016

அப்துல் கலாமின் இழப்பு இந்த நாட்டுக்கு கேடு,மாணவ மாணவியர்க்கு ஒர் பேரிழப்பு: கவிஞர் தணிகை

அப்துல் கலாமின் இழப்பு இந்த நாட்டுக்கு கேடு,மாணவ மாணவியர்க்கு ஒர் பேரிழப்பு: கவிஞர் தணிகை




மனிதர் பம்பரமாய் சுழன்று திரிந்து உடலை வருத்திக் கொண்டார்.இவரின் மரணம் கடந்த ஆண்டு இதே நாளில் நிகழ்ந்தபோது உலகமே வியப்பெய்தியது இந்தியா ஒரு மாபெரும் தலைவனை இழந்தது.

என்னை நேசிப்பவராய் இருந்தால் எப்போதையும் விட இன்னும் அதிகமாக உழையுங்கள் என்றார்....தமது இழப்பை இறப்பை எப்படி சம்பவ சரித்திரமாக்க வேண்டும் என்று தெரிந்த மனிதர்... நன்கு தெளிந்த மனிதர்.

ஒரு நாட்டின் குடியரசுத் தலைவராய் இருந்தவர் அம்பாசிடர் காரில் கோவையிலிருந்து ஈரோடு புத்தகக் கலைவிழாவிற்கு இதே போன்ற ஆகஸ்ட் நாளில் இரண்டாண்டுக்கும் முன்பு வருகை புரிந்திருந்தார். இந்த நாட்டில் எப்படி எல்லாமோ வாழ்கிறவர்கள் தனி விமானத்தையும் ‍ஹெலிகாப்டரையும் பயன்படுத்தி வரும்போது...

மிகவும் நாணயமான குடும்பத்தைச் சார்ந்தவர்... பொருளாதார விஷய‌த்தில் பண விஷயத்தில் மிகவும் சரியாக நடந்து கொண்டவர். குடியரசுத் தலைவராக இருந்தபோதும்...

எனக்கு ஒரு ஆசை இருந்தது அது அவரால் கற்பனைக்கும் எட்டாது இருந்தபோதும் : அது இந்த நாட்டின் முப்படைத் தலைவராய் இருந்தபோது இந்திய நாட்டின் கட்சீ அரசியலுக்கு ஓரம் கட்டி தாமே ஆட்சியை கையில் எடுத்துக் கொண்டு நதி நீரை இணைத்து இந்த நாட்டுக்கு ஒரு மாவோ, லெனின், ‍ஹோசிமின், பிடல் போன்று ஒரு என்றும் அழியா மாபெரும் தலைவராக ஆகி எல்லாத் தலைவர்களையும் ஓரம் கட்டி விட வேண்டும் என்று...
Former President APJ Abdul Kalam's Statue Unveiled In Rameswaram


எவ்வளவோ ஆசைகள் நிறைவேறாமலே...அதில் இதுவும் ஒன்று...

அன்னாரது ஆன்மா இந்த நாட்டுக்கு நல் ஒளி காட்டி, நல் வழி காட்ட..என்றும் பிரார்த்திக்கிறேன்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment