Wednesday, July 20, 2016

கபாலியில் ரஜினிகாந்த் ரோலே இல்லையாமே? கவிஞர் தணிகை

கபாலியில் ரஜினிகாந்த் ரோலே இல்லையாமே? கவிஞர் தணிகை



ஐ மீன் கபாலி ரிலீஸ், தமிழகத்தில் அந்த படத்தின்  விற்பனை தியேட்டரில் வெளியீடு ஆகியவற்றில் படம் எடுத்த தாணு, நடித்த ரஜினிகாந்த், இயக்கிய ரஞ்சித் ஆகிய அனைவரின் உழைப்பும் மூட்டை கட்டி விலைக்கு வாங்கப்பட்டு ஜாஸ் நிறுவனம் விழுங்கி விட்டதாக செய்திகள் அடிபடுகின்றன.

இது எந்த அளவு உண்மை என்பதை தேடிப் பாருங்கள் . எனது தேடலுக்கு அது சரியான தகவல் என்றே தெரிய முடிந்திருக்கிறது.தாணுவுக்கு ஒரு இரட்டிப்புத் தொகை வழங்கப்பட்டு, தமிழ் நாடு தவிர வேறு எங்கும் எப்படியும் செய்து கொள்ளுங்கள் இங்கு நாங்கள்தான் என தமிழகத்தின் ஒரு மாபெரும் சக்தியின் கைக்குள் சென்று படம் அடங்கி விட்டதாமே...

இருக்கும் இருக்கும் இல்லையென்றால் எதற்கிந்த வரலாறு காணாத ஆர்ப்பாட்டங்கள், வேடிக்கைகள், எப்போதும் இல்லாதவாறு...அது சினிமாய்யா சினிமா, எல்லா இடங்களிலும் சினிமாவை சினிமாவாகப் பார்க்கும்போது இங்கே வாழ்க்கையாக பார்க்க ஆரம்பித்ததும் அந்த தலைவன் வருவான் வாழ்வை மலரவைப்பான் என ஏங்குவதும் கனவு காண்பதும் எவ்வளவு அபத்தம்.



அந்த கனவு பொய் பிம்ப நாயகர்கள் தங்கள் தொழிலை, தங்கள் குடும்பத்தை, தங்கள உடமைகளை காப்பாற்றிக் கொள்ளவே அரசுகளை மத்தியில் மாநிலத்தில் ஆள்வோரை அடி வருடிக் கொண்டு  அந்த அவார்ட் இந்த வெங்காயம் என ஓடி நாடிக் கொண்டிருக்கும்போது பொது மக்களை எப்படி எந்த சினிமா, எந்த நாயகன் காப்பாற்ற வருவான்?


சுதந்திர நாடு....மதுவின் கேடு, நல்லது செய்ய நினைப்பவர்க்கு சிறை அடி உதை கேட்பாரற்ற அவலம், அதில் வேறு இந்த சினிமா ஓலம்...

இதில் எனது ஒரு அரிய நண்பர் சொல்கிறார். ரஜினி சினிமா வெளியிடும் போது தியேட்டர்கள் எல்லாம் புதுப்பிக்கப்படும் ஏராளமான ஏழை பாலைகளுக்கு வேலை/தொழில் கிடைக்கும் அது தவறா? என்றார் என்னால் அவரிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அறிவில் மிக்கார் அவர். சினிமாவை விட ஒரு நல்ல தொழில் ஏற்படுத்த முனைவதை ஒர் நல்ல அரசு செய்யாததால்தானே ஒரு நல்லரசு நமது மக்களுக்கு நல்ல வாழ்க்கை தரத்தை கொடுக்க முடியாததால் தானே இந்த கனவில் வாழும் வாழ்க்கையும், தவறான பாதையில் செல்லும் வாழ்க்கை எல்லாம் உயர்ந்த வாழ்க்கை என்றும் கற்பித்து வழி மாற்றிச் செல்லப் படுகிறான்..

இது எப்படி இருக்கு? என்று கெட்டவராகவும் சிகரெட்டை தூக்கி வாயில் போட்டும் தானே இந்த கபாலி சினிமா வாழ்வை உருவாக்கிக் கொண்டார். அது தவறு என சொல்வோர் எல்லாம் விதி விலக்காக போய் விட்டதால் தானே இந்த உலகில் நல்லவற்றின் குரல் எடுபடாமல் போய்விடுகிறது.



சங்கரின் எந்திரன் பற்றி எழுதும்போதே யார்ரா இந்த ரஜினி என முழங்கினோம்....குறுகிய நேரத்தில் 2600 பேருக்கும் மேல் படித்த அந்த பதிவே இன்றும் எனது பதிவுகளில் அதிகம் படித்த பதிவாக காணப்படுகிறது.மேலும் இந்த 2600 பேரும் நமது நாட்டை மட்டுமே சார்ந்தார் அல்ல உலகெங்கும் இவர்கள் 5000 பிரிண்ட் போடுவது போல போட்டது.

இது போல அடம் பிடித்து எமது விவரம் தெரியா மக்களின் தலையில் கட்டப் படும் படம் எதுவுமே நன்றாக ஓடக்கூடாது, வசூலும்  இருக்கக் கூடாது . ஒரு நல்லரசுக்கு மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை முடக்கும் ஆற்றல் வேண்டும். இல்லையேல் மக்களுக்காவது வேண்டும் இங்கு இரண்டும் இல்லை.
சமுத்திரக் கனியின் அப்பாவை ஆயிரம் முறை பார்க்கவும். இந்த கபாலியை ஒரு முறை பார்ப்பதற்கு மாறாக.அல்லது சூடு ஆறிய பின் பார்த்துக் கொள்க. இவர்களுக்கு நம் உழைப்பில் இருந்து ஒரு பைசா கூட போய்ச் சேரக்கூடாது.

இதே ரஜினி காந்த் முன்பெல்லாம் இவர் நடித்த படத்தின் பல மாவட்ட உரிமைகளை எல்லாம் தமது சம்பளத்தின் ஒரு பகுதியாக பெற்றுக் கொண்டதும்,சில நேரம் படம் சரியாக ஓட வில்லை எனில் நஸ்டத்தை ஈடுகட்ட சர்ச்சைக்கிடையிலும் ஓரளவு நஷ்ட ஈடு கொடுத்தையும் நாம் மறக்கக் கூடாது...ஆனால் இப்போது இந்த மனிதருக்கு இந்த ரிஸ்க், சவால் எல்லாம் இல்லை.



அடுத்து சங்கரின் 2.0 பற்றி மட்டுமே இவரது கவலையாய் இருக்கும். ஆனால் ரஜினிகாந்த் படம் எப்போதும் மிகப் பெரும் மனிதராய் இருந்தவர் கேவலமாக சிறுத்துப் போன மனிதமாக மாறி அதன் பழி வாங்குவாரை பழி வாங்கு வாங்கு என்று வாங்கி உயரமாக ஏறுவார் என்ற ஒரே வரிக் கதை தான் எல்லாப் படங்களிலும் பெரும்பாலும் சொல்லப் பட்டிருக்கும். நல்ல பாடல், நல்ல இசை, தத்துவம், நிலையாமை, பிரும்மாண்டமான பொருட் செலவு பின்னணி, மிகுந்த பொருள் செலவு செட் அல்லது வெளி நாட்டுப் பயணம், அத்துடன் அதிகமான செலவை ஊதியத்தை பெறும் தொழில் நுட்பக் கலைஞர்கள்...இவை யன்றி எதற்காக இந்த மனிதருக்கு பத்ம விபூஷன் விருது என்றால் இவர் பாரதீய ஜனதா கட்சிக்கும் பிரதமர் மோடிக்கும் வேண்டப்பட்டவர்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



No comments:

Post a Comment