Friday, July 22, 2016

கபாலி: திரை விமர்சனம்: கவிஞர் தணிகை

கபாலி: திரை விமர்சனம்: கவிஞர் தணிகை



Kabali pistol back fired....
எப்படி இதை விமர்சனம் செய்வது என்றே விளங்கவில்லை.உங்களுக்காக பார்த்தேன். எனவே பகிர்ந்து கொள்ள கடமைப் பட்டுள்ளேன். ரஜினி இரசிகர்களுக்கு மட்டும். என்று விளம்பரம் செய்ய வேண்டிய படம். மகிழ்ச்சி ரஜினிகாந்துக்கும் நமக்கும் இல்லை கபாலி சொல்வது போல.லிங்காவே பரவாயில்லை என லிங்காவை நல்ல படமாக்கிய படம் இந்தக் கபாலி.

அட்டக் கத்தி, மெட்ராஸ் எல்லாம் எடுத்த இரஞ்சித் என பெருமை பேசும் நபர்கள் எல்லாம் இதைப் பார்த்து விட்டு என்ன செய்வார்கள் என்றே தோன்றவில்லை...

வெறும் ஸ்டில், டீசர், ட்ரெய்லர் சாதனை என்றெல்லாம் சொன்னார்கள் அதை வைத்தே படத்தை ஓட்டி விடலாம் என கனவு கண்டிருந்தால் அது பொய்யாப் போன கனவு. தியேட்டரை விட்டு வெகு விரைவில் இந்தப் படம் ஓட்டி விடுவார் மக்கள் என்று நம்புவோமாக.

இதை எடுத்த இதன் தயாரிப்பில் ஈடுபட்ட அத்தனை நபர்களையும் இந்த படத்தை முழுமையாகப் பார்க்கச் சொல்லலாம்.ரஜினிகாந்த் உட்பட. ரஜினிகாந்துக்கு இனி சங்கரின் 2.0 எப்படி இருக்கும் என்ற கனவை ரஜினியின் இரசிகர்கள் காணலாம். சங்கர் அவ்வளவு ஏமாற்ற மாட்டார் என நம்புவோமாக.

இந்த படத்திற்காக ஒரு மலேய இரசிகர் டிக்கட் கிடைக்கவில்லையே என தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் . என்ன சொல்வதென்றே விளங்கவில்லை. இந்த படத்திற்காக 500, 1000 , 1500 ரூபாய் என டிக்கட் விற்பனையும், ஒரு அலுவலகம் டிக்கட் கொடுத்து விடுமுறை அளித்து பார்க்கச் சொல்வதும், இதை உலகெங்கும் 5000 திரையரங்குகளில் வெளியிட்டு கல்லா கட்ட நினைத்ததும் முத்தூட் நிதி நிறுவனம் கடனுதவி வழங்க பார்க்கச் சொல்ல முயன்றதும் இதை வியாபாரம் என்று நம்பி வாங்கி வெளியிட்ட தியேட்டர்களும்...ஆம் இதெல்லாம் இல்லை எனில் இந்தப் படத்தை எவருமே பார்க்க விரும்ப மாட்டார்கள்.

ஒரு நல்ல படத்தை விரும்பி அனைவருமே பார்ப்பார்கள்.அதற்காக இத்தனை ஆரவாரம் தேவையில்லை.ஆனால் இனி இந்தப் படத்தை ரூபாய் 1500 கொடுத்து பார்க்கச் சொன்னால் கூட முடியும் வரை பார்ப்பது இயலாத காரியமே.

வெறும் ஒரு சூப்பர் ஸ்டார் இமேஜ் வைத்துக் கொண்டிருந்தால் மட்டுமே போதுமா? ஒரு சினிமாவை பார்க்க முடியுமா ஒன்றுமே சொல்லத் தகுதி இல்லாமல்....

சொல்ல ஒன்றுமே இல்லை. சொன்னால் ரஜினி ரசிகர்கள் கோபித்துக் கொள்வார்கள். அவர் உருவம் திரையில் தோன்றினாலே போதும் இரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரப் படுத்தி விடுகிறார்கள். மற்றபடி இந்தப் படம் அவர்களுக்கு மட்டுமே.

கதை என கஷ்டப் பட்டுத் தேடிச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு கேங்க்ஸ்டர் . மனைவி, இறந்ததாக நினைப்பவர்க்கு மனைவியும் மகளும் கிடைக்கிறார்கள். கேங்க்ஸ்டர் நடவடிக்கையால் பாதிக்கப் பட்ட குடும்பத்தின் குழந்தைகளுக்கு பள்ளி நடத்துகிறார். மலேயாவில் ஆரம்பித்து தமிழகம் வந்து மனைவியைத் தேட வருகிறார் இடையில் பாண்டிச்சேரி, பிரான்ஸ், அமெரிக்கா என்றெல்லாம் சொல்கிறார்கள்....

இது போன்ற படத்தை பார்ப்பது முழுதாக பார்ப்பது மிகவும் கடினம். மேலும் அது நேர விரயமும் கூட. மேலும் சொல்ல வேண்டுமெனில் இந்தப் படத்தை பார்ப்பதற்கு மாறாக யாம் முன்பே சொன்னபடி ஆயிரம் முறை அப்பா படத்தை பார்த்து விடலாம்.

என்ன செய்வது இது தான் தமிழ் பட உலகின் அவலத் திணிப்பாக இருக்கிறது. இதை எல்லாம் பேசப்போனால் எனது மதிப்பு மிகுந்த நண்பர் யானை இருக்கும் காட்டில்தான் எறும்பும் இருக்கிறது என்கிறார். எறும்புக் கூடினால் யானை கதி அதோகதிதான்...

ஆனால் இங்கு எறும்புகள் கூடுவதென்பது துர்லபமாக இருப்பதால் இதை எல்லாம் சகித்துக் கொண்டே போகவேண்டியதிருக்கிறது. நான் சொல்வதை சொல்லி விட்டேன் இனி பார்ப்பதும் பார்க்காமல் விடுவதும் உங்கள் விருப்பம். இரஜினியும் ரஜினி இரசிகர்களும் மன்னிப்பார்களாக. இப்படி இரஜினி படம் கொடுப்பதற்கு ஓய்வெடுக்கலாம். அது அவருக்கும் நமக்கும் தமிழகத்துக்கும் நல்லது. இந்த மகாராஸ்ட்ராவில் பிறந்த சிவாஜி கெய்க்வாட் தமிழர் முன்னேற்றம், கோட் அணிவது பற்றி எல்லாம் பேசி  தமிழ் பேசத் தெரியாத ஒரு ஜப்பான்கார/மலேயாக்கார வில்லன் நடிகரிடம் டையலாக் எல்லாம் டெலிவரி செய்து தமிழ் படத்தை ஓட வைக்க முயன்றுள்ளார்.

ஒரு நாள் வசூல் கூட இவர்களுக்கு போதும் என்பதால் போட்ட முதலை எடுத்துக் கொள்வார்கள். படம் வெற்றி என்றும் சொல்வார்கள். நம்பிப் போய் விடாதீர்கள். வெம்பிப் போய்விடாதீர்கள். பார்த்து விட்டு வெதும்பி விடாதீர்.

நன்றி
வணக்கம்.

பி.கு: ரஜினிகாந்துக்கு பரம  எதிரி  நானல்ல. உள்ளது உள்ளபடி சொல்லியே பழக்கம் எந்த எதிர்ப்பு வரினும் என்பதால் ரஜினியும் ரஜினி இரசிகரும் மன்னிப்பார்களாக.

3 comments:

  1. வாசித்தேன்.... லாபத்தை சம்பாதிக்க ரஜினியை பயண்படுத்தி இருக்கிறார்கள்.

    ReplyDelete
  2. வாசித்தேன்.... லாபத்தை சம்பாதிக்க ரஜினியை பயண்படுத்தி இருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. thanks Raja sekaran for your feedback on this post. vanakkam.please keep contact.

    ReplyDelete