16 மே முதல் 28 ஜூன் வரை கோடைக்கால உச்ச நீதி மன்றம்
விடுமுறை என்பதால் அம்மா வழக்கு தேர்தலில்
எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தப்
போவதில்லை.
. உடல்
என்னும் எந்திரம்: கவிஞர் தணிகை
தேர்தல்
முழக்கங்கள் ஆங்காங்கே.. எஸ்.ஆர். பார்த்திபன்
எம்.எல்.ஏ வீடு
வந்து வாக்கு சேகரித்து சென்றதாக
வீட்டில் செய்தி.
கலைஞர்
கருணாநிதி தமக்கு ஏதாவது நேர்ந்தால்
ஸ்டாலின் தான் முதல்வர் என
சொல்லிய சேதி நேற்று முதல்
பிரபலம்.இதை எல்லாம் விட
உடல் ஒத்துழைத்தல், ஒத்துழையாமை பற்றி சொல்ல விழைகிறேன்.
கல்வி பற்றி சொல்ல கவிஞர்கள்:
கல்வி கரையில கற்பவர் நாள்
சில, மெல்ல நினைக்கின் பிணி
பல...என்பார். நீங்கள் படித்தாலும் படிக்காவிட்டாலும்
உடல் ஒரு குறிப்பிட்ட அளவு
வளர்ந்து அதன் பின் தளர்ந்து
மடிந்து போகத் தயாராகி விடுகிறது.
அதற்கு
ஆயிரத்து எட்டு காரணங்கள் சொல்லலாம்.
உணவு காரணமென்பார் , பழக்க வழக்கங்கள் காரணமென்பார்,
எண்ணம் , சொல், செயல் காரணங்கள்
என்பார். ஆனால் எந்த காரணங்கள்
இருந்தாலும் இல்லாவிட்டாலும் உயிருள்ளவை அனைத்துமே உடல் நீக்கியே ஆக
வேண்டும்.
அது நானாக இருந்தாலும், நீங்களாக
இருந்தாலும்...
இதில் கலைஞர் என்ன, ஸ்டாலின்
என்ன, ஜெ.ஜெயலலிதா என்ன
எல்லாம் இந்த ஒரு விதியில்
அடக்கம்.
உடல் என்னும் எந்திரம் தேய்மானம்
அடைந்து,துருப்பிடித்து வியாதியுற்று செயல் இழக்க நேரிடுகிறது.
இதையே சித்தர்கள் சீக்கிரம் சீக்கிரம் ஏதாவது செய்து முடிப்பீர்
எனச் சொல்வார்கள். இல்லையென்றால் இந்தப் பை , இந்தப்
பாண்டம், இந்தத் தோண்டி எதற்கும்
உதவாமல் போய்விடுமென்பார்.
உடல் என்னும் எந்திரத்துக்கு மறுபடியும்
நல்ல சுமை அழுத்தம் கொடுத்து
வருகிறேன். உண்மையான சேவையாளர்கள் கடைசியில் உடலையும் உயிரையும் கூட ஏதாவது ஒரு
பயன்பாட்டுக்கு கொடுத்துச் செல்கிறார்கள்.
உடல் என்னும் கருவி, எந்திரம்
நாம் சொன்னபடி 40க்கும் மேல் கேட்பதில்லை
சிலர் 100ஐயும் மீறி பேறு
பெறுகிறார்கள். ஆனால் செய்வது செய்தது
பற்றியே பெருமை. எவ்வளவு இந்த
உடல் இழுபடுகிறது என்பதில் அல்ல.
மறுபடியும்
பூக்கும்வரை
கவிஞர்
தணிகை
பி.கு: என்.டி.டி.வி,பிபிசி போன்ற புகழ் பெற்ற கட்சி சாரா செய்தி ஊடகங்கள் அ.இ.அ.தி.மு.கவே அதிக இடங்களில் வெற்றி பெறும் எனச் செய்தி வெளியிட்டுள்ளதாக நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். உள்ள படியே இது வருத்தத்திற்குரியது. அவ்வாறு நேராது. நேரக் கூடாது என நம்புவோமாக.எமது தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் திரு செம்மலை அவர்கள் புதிய தலைமுறைத் தொலைக்காட்சியின் மக்கள் சந்திப்புக்கு வர இயலாதவர் கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் மேட்டூர் பிளான்ட். எண் 2 ஆலைக்கு இதுவரை
2 முறை வந்து சென்றிருக்கிறார். பணப்பெட்டி சூட்கேஸ்கள் கை மாறி இருக்கலாம் என பார்த்த தொழிலாளர்கள் பேசிக் கொள்கின்றனர்.
No comments:
Post a Comment