Saturday, May 7, 2016

மம்மியிடம் மண்டியிடுமா தமிழகம்: கவிஞர் தணிகை.

மம்மியிடம் மண்டியிடுமா தமிழகம்: கவிஞர் தணிகை.
கடைசி வாய்ப்பு, கடைசி காலக் கட்டம், தேர்தலுக்கும் முன் இன்னும் ஒரே வாரம். எங்கு நோக்கினும் அம்மா மம்மியின் இலவசம் என்பதே பேச்சு வெயிலில் போன உயிர் மூச்சுகள் பற்றி எல்லாம் போச்சு.

பதவியில் ஏறிவிட்டால் என்னவேண்டுமானாலும் செய்யலாம், என்னால் இதை எல்லாம் செய்ய முடியாது என்றும் சொல்லி விட்டு செல்லலாம். அருகே யாரும் நெருங்கவே முடியாது.

எனவே மம்மி அதாங்க மம்மி என்றால் அம்மாதானே? வாரி வாரி இலவசம் என்று தேர்தல் அறிக்கையில் விட்டு விட்டார்கள். இப்போது யார் ஆட்சி நடந்தது ? யார் மின் கட்டணம் உயர்த்தியது? யார் பால் விலை உயர்த்தியது? யார் போக்குவரத்துக் கட்டணத்தை சொல்லியும் சொல்லாமல் கொள்ளாமலும் உயர்த்தியது?

யார் ஆட்சி செய்யாமலே அமமா வரட்டும் எனவே காத்திருந்தது? எந்த வித திட்டங்களும் நிறைவேற்றாமலே? யார் ஓட்டை பஸ்ஸில் இருந்து விழுந்தால் என்ன? எந்த பஸ்ஸின் கூரை பறந்து மழையில் எவர் பஸ்ஸில் இருந்து கொண்டே நனைந்தால் என்ன நாங்கள் அம்மா வரும் வரை புது பேருந்துகளை வழித்தடத்தில் இறக்கவே மாட்டோம் என்றது?

யார் டான்ஸி வழக்கு, கொடை நாடு எஸ்டேட், சிறு தாவூர் பங்களா, யார் பீனிக்ஸ் பார்க் மால், யார் போயஸ் கார்டனில் இருந்தபடியே எவரையும் பார்க்க முடியாமல் இருந்தது?அப்துல் கலாம் போன்ற மாமேதையின் இறுதி ஊர்வலத்துக்கு கலந்து கொள்ளாமல் இருந்தது

யார் சென்னை வெள்ளத்தின் போது கால் பதிக்காமல் கிடந்தது? யார்
அண்ணா பூங்காவை அரசின் நீதிமன்றங்கள் தடுத்தும் அதை மருத்துவமனையாக மாற்ற முயன்றது?

யார் புதிதாக கட்டப்பட்ட சட்டசபை வளாகத்தில் அமர மறுத்து பழைய கட்டடத்திலேயே 5 ஆண்டுகள் கடத்தியது? யார் உழவர் சந்தைகளை எல்லாம் தனி மனித துவேசத்துக்காக வழித்தெடுத்து துடைத்து ஒன்றுமில்லாமல் செய்தது?

யார் கிராமங்களை எல்லாம் இணைத்துக் கொண்டிருந்த சிறு பேருந்துகளை எல்லாம் இல்லாமல் செய்தது?

யார் தம் பேரே வேண்டும் என அம்மா உணவகம், குடிநீர், மருந்தகம் என  எல்லா இடங்களீலும் தம் பேரே விளங்க வேண்டும் என முயன்றது?

யார் சென்னை வெள்ளத்தின் போது கூட அம்மா ஸ்டிக்கர் ஒட்டிய பொட்டலங்களே சென்று சேர வேண்டும் என தின்கிற பிச்சை சோற்றில் கூட மண் அள்ளிப் போட்டது? கிடைத்த பிச்சைப் பொருள்களில் கூட திருடி தம் கட்சி செய்தது என தம்பட்டம் அடிக்க முனைந்து டமாரம் கிழிந்து கிடந்தது?

யார் சசி பெருமாள் சாகும் வரை ஒரு வார்த்தையுமே மதுவிலக்கு ஆதரவாக சொல்லாமல் இன்று கூட மக்கள் அதிகார அமைப்பு மதுவுக்கு எதிராக போராடும்போது இளைஞர்களை இளம் யுவதிகளை அடித்து இழுத்து துன்புறுத்தியது? துன்புறுத்துவது?

எப்படி இவர்கள் பதவிக்கு மறுபடியும் வந்ததும் மதுவிலக்கு படிப்படியாக செய்வார்கள் என எதிர்பார்ப்பது?

யார் ஒரு தெருமுனைப்பாடகரான கோவனை இரவுக்கு இரவாக கைது செய்தது? பாடாக படுத்தியது?

யார் செய்தி ஊடகங்களை திசை திருப்பி விஜய்காந்த், இளையராஜா, பீப்சிம்பு என செய்திகளை ஒன்றுமில்லாமல் செய்து ச்சென்னை வெள்ளத்தில் மக்களுக்கு நடந்த கொடுமையை அரசின் கையாலாமையை மறைத்து மறைக்க ச் செய்தது?

யார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவுக்கு எதிராக தம் கட்சிக்காரர்களை தூண்டி விட்டு கடைசியில் விட்டு விடுங்கள் என்றது?

யார் குன்ஹா நீதிக்கு எதிராக கர்நாடகா குமாரசாமியை கரும்புள்ளி நீதிபதியை விலைக்கு வாங்கியது உச்ச நீதிமன்றத்தையும் என்ன சேதி என கேட்டுக் கொண்டிருப்பது?

இப்படிப்பட்ட இன்னும் சொல்ல எவ்வளவோ உள்ள டான்ஸி பேர ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு தமது கை எழுத்தே அது இல்லை என்றது , சேஷன், ராம், மணி சங்கர அய்யர், சந்திர லேஹா , இன்னும் நடராஜன் வைத்திருந்த சிறு வயது பெண் என ஒரு பெண்ணுக்கு தீங்கிழைக்க முயன்றது? சிவாஜி கணேசன் சிலையை அகற்ற முயன்றது, கண்ணகி சிலையை அகற்றியது..

இப்படி சொல்ல சொல்ல விடியாத எத்தனையோ மழை மறைவுப் பிரதேசங்களில் மறைந்துகொண்டும் இன்னும் ஒரு கட்சிக்கு தலைவியாக‌ யாரும் தொடமுடியாத உயரத்தில் இருந்து கொண்டிருக்கும் மம்மி இப்போது எதற்கிந்த இவ்வளவு இலவசங்களை வாரி வழங்குவதாக தேர்தலறிக்கை தந்திருக்கிறார்? பதவி இன்னும் முடிந்து விடக் கூடாதே என்பதற்காகத்தானே?

இவர் ஏற்கெனவே கொடுத்த இலவசங்கள் எல்லாமே எவருக்காவது பயன்பட்டதா? இனியும் விழித்துக் கொள்ளாவிட்டால் தமிழகத்திற்கு கேடுதான்.

முதல்வரை யாராவது சென்று பார்க்க முடியுமா? வெயிலில் வெந்து சாகவேண்டுமானாலும் முடியும்? இரவோடுஇரவாக குடும்பத்துக்கு 5000 நபருக்கு ஆயிரம் என தருவதாக எல்லாம் செய்திகள்...இவர் கட்சி வேட்பாளர் சரத்குமார் தமது திருச்செந்தூர் தொகுதிக்கு மாநிலமெங்கும் வாக்கு சேகரிப்பதாகவும், வாகனத்தில் 9 லட்சம் வைத்திருந்ததாகவும் மற்றொரு இவரதுகட்சிக்காரர் வீட்டில் கோடிகளில் பணம் தேர்தல் ஆணையத்தால் பிடிபட்டதாகவும் செய்திகள்..

ஆனாலும் இந்தக் கட்சி மேல் எந்த நடவடிக்கையும் இல்லை. இது போல் நிகழும்போது அந்தக் கட்சியானது தேர்தலில் இருந்து விலக்கப் படவேண்டும்.

அல்லது உண்மையான மக்களாக இருந்து நீங்கள் அவர்களை ஆட்சியிலிருந்து பதவியிலிருந்து விலக்குங்கள்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

4 comments:

 1. அருமையான விளக்கம் சகோ.. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் ...

  ReplyDelete
  Replies
  1. thanks thanks for your feedback Kalainidhi. vanakkam.pl.keep contact

   Delete
 2. அருமையான விளக்கம் சகோ.. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் ...

  ReplyDelete
 3. thanks for your feedback Kalainidhi on this post . vanakkam. please keep contact.

  ReplyDelete