மே தினம் உழைப்பவர் சீதனமா? கவிஞர் தணிகை
அட மே தினம் ஞாயிற்றுக் கிழமையில் வந்து விட்டதே, ஒரு நாள் விடுமுறைப் போச்சே,
அட, டாஸ்மாக் கடை எல்லாம் லீவா?
நேற்றே ஸ்டாக் எல்லாம் வாங்கி வைச்சாச்சே!
மே தினம் ஞாயிற்றுக் கிழமை வந்ததால்
ஒரு லீவு போச்சே ஆனாலும்
டாஸ்மாக் கடை எல்லாம் லீவாச்சே...
இப்படி அவரவர் பார்வையில் பார்த்துக் கொண்டிருக்க மே தினத்துக்கு வருடா வருடம் அனைவரும் சேர்ந்து ஆடு வெட்டி கெடா விருந்து வைப்பார்களாம் சில நண்பர்கள் கூட்டம்
8 மணி நேர வேலையும் வேலைக்கேற்ற கூலி, சம்பளம், வருமானம் இதன் பேர் இப்படி எப்படி இருந்தாலும் சிகாகோ நகரில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்று கூடி வரும் காலத்தில் தொழிலாள இனத்துக்கு நீதி செய்த தினம், அந்த நினவை போற்றும் தினம்
இப்போது இந்தியாவில் தமிழகத்தில் வெறும் விடுமுறைகான நாளாக ஒரு டாஸ்மாக் விடுமுறை நாளாக கேலிக் கூத்தாக..
ஒரு மதிப்பிற்குரிய நண்பர் என்னிடம் வந்து மேதின வாழ்த்து சொன்னார் நான் எதிர்பார்க்காமல். எனக்கு வியப்பு வந்தது. பொறுக்காமல் இயல்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டேன் அவர் வேறு ஏதாவது நினைத்துக் கொண்டால் என்ன செய்வது என ஏங்க ஏதாவது தப்பா சொல்லி விட்டேனா எனக் கேட்டதற்கு...சாரி சார், சரி சரி சார் உண்மைதான் சார்,நாளைக்கு சொல்வதற்கு இது அட்வான்ஸ் வாழ்த்துதான் சார் என்றெல்லாம் சொல்லி சமாளித்தேன்...
ஒரு சில வர்க்கம், கட்டடப் பணியாளர்கள், மரவேலை செய்வோர் பிலம்பர் என்னும் நீர்க்குழாய் சீர்செய்யும் பணியாளர்கள் மின் பணியாளர்கள் எல்லாம் கூட பரவாயில்லை ஒரளவு தமது வேலைக்கான கூலியைப் பெற்றுக் கொள்கிறார்கள்.அவசியமாக அந்தப் பணி தேவை ஆக இருப்பதால். ஆனால் அதுவும் மதுக்கடை, பீடிப் புகை,பான் பராக், புகையிலை என்று போய் விட..
இந்தியாவில், தமிழகத்தில் தொழிற்சங்கங்களின் தாக்கம் மிகையாகப் போய் நிறைய நிறுவனங்கள் விலாசம் தெரியாமல் அழிந்து விட்டன.எனவே உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்னும் கோஷம் வெற்று கோஷமாகிவிட்டது. கேரளத் தொழில் நலிந்து போனதற்கு இது போன்ற கம்யூனிச சித்தாந்த தொழிற்சங்கங்கள் ஒரு காரணம் என்பர்.
எனவே இந்தியாவின் தொழில் நிறுவனங்களில் எல்லாம் தொழிலாளர் கூட்டுறவு யாவும் கலைந்து விட்டன கட்சி, சாதி. பிரிவினை எனப் பிரிந்து போய்...
இப்போது ஒரு பொறியியல் பட்டப் படிப்பு படித்த இளைஞர்க்கு சேலம் போன்ற இடங்களில் மாத ஊதியம் ரூபாய் 2500 என்றெல்லாம் வழங்கப் படுகிறது. அது அவருக்கு எப்படி போதும்?அவர் அலுவலகம் வந்து செல்லும் போக்குவரத்துச் செலவுக்காவது அது போதுமா?
இப்படி இந்தியாவில் தொழிலும் தொழிலாளர் நிலையும் மிகவும் கேலிக்குள்ளான நிலையில் மேதினம் கொண்டாட்டம் எல்லாம் மிகவும் தூரம் விலகிச் சென்று விட்டன. மாறக அதற்கு மாற்றாக செயல்கள் நடக்கவும் வழி இல்லை அவை முளையிலேயே கிள்ளி எறியப்படும் நிலைகள்.வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது.
பசி,பஞ்சம், பிணி, வறுமை, அத்தியாவசியத் தேவைகளுக்கும் யாசகம் பிச்சை கேட்கும் நிலை. குடிநீர், மருத்துவம், வீடு, உடை, உணவு யாவுக்கும் கை ஏந்தும் நிலை.... இந்தியா ஒரு புறம் விஜய்மல்லையாக்களாக, லலித் மோடிகளாக ஏமாற்றி ஊதிப் புடைத்து வேறு இடம் சென்றாலும் வேறு நாடு சென்றாலும் கொழுத்தபடி வாழ்ந்து கொண்டிருக்க...ஆனால் படித்த இளைஞர்கள்....
இன்றைய இளைஞர்கள் மேலை நாடுகள் நோக்கி படை எடுக்கிறார்கள் பணி வேண்டி,. எண்ணெய் வள நாடுகளும், ஐரோப்பிய , ஆஸ்திரேலிய, இங்கிலாந்து, அமெரிக்க, சிங்கப்பூர் மற்றும் கிழக்கிந்திய நாடுகள் நோக்கி பிழைக்க சென்று விடுகிறார்கள்.
இந்நிலையில் மே தின நாளும் ஒரு சடங்கு நாளாகவே விடுமுறைக்கான நாளகவே ஆகிவிட்டது.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment