Wednesday, May 25, 2016

கோயில் கட்டியதை விட பவர் பழனி 10 ஆம் வகுப்பு பாஸ் செய்ய கொஞ்சம் கற்பித்ததில் அதிக மகிழ்வு: கவிஞர் தணிகை.

கோயில் கட்டியதை விட பவர் பழனி 10 ஆம் வகுப்பு பாஸ் செய்ய கொஞ்சம் கற்பித்ததில் அதிக மகிழ்வு: கவிஞர் தணிகை.
\


அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னர் உள்ள தர்மங்கள் யாவும்
பெயர் விளங்க ஒளிர நிறுத்தால்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் ‍ பாரதி மகாக் கவி பாரதி.பவர் பழனி உங்களுக்குப் பரிச்சயமானவர்தான். எல்லாருக்கும் வேண்டியவர். கல்யாணம், வீட்டு நிகழ்வு, விழாக்கள் யாவற்றிலும் இவரது பாத்திரம், பண்டங்கள் வாடகைக்கு கிடைக்கும், சாமியானா பந்தல் போடுவார், இப்போது கூட பள்ளி ரிசல்ட் 10 வது பாடத்தில் விட்டுப் போன சரித்திர பூகோளத்தில் 62 மதிப்பெண் பெற்று பாஸ் செய்து விட்ட சேதியை உடனடியாக என் காதில் போட்டு விட்டு சாமியானா போடும் நிகழ்வில் இருக்கிறார்.பவர் ஆட்டோ வேறு உரிமயாளராக இருந்து வாடகைக்கு விடும் தொழிலும் செய்கிறார். ஒரு ஓட்டுனருக்கு சம்பளம் அளிக்கும் முதலாளியும் கூட.

அரிசி வியாபாரமும் செய்வார். இவர் நண்பர்கள் 10 பேர் சேர்ந்து நிதி நிறுவனமும் கடந்த ஒராண்டாக நடத்தி வருகிறார்கள். நல்ல இளைஞர் பாட்டாளி மக்கள் கட்சியின் மேல் பற்று கொண்டவர். எல்லாரிடத்தும் நல் மதிப்பு மரியாதையுடன் பழகுவார். புகைக்கும் பழக்கம் விட்டு விடுவேன் என எனக்கு உறுதி அளித்தவர் ஆனாலும் இன்னும் விட்டு விட வில்லை என நம்புகிறேன்.
தந்தையொடு கல்வி போம் என்பார்கள். இவர் தம் சிறு வயதிலேயே தம் தந்தையை இழந்தவர். இப்போது 35 வயது இன்று மணமாகி தாய் மனைவியுடன் குடும்பமாக இருப்பவர். தனது 10 ஆம் வகுப்பில் ஒரு பாடத்தில் அதாவது சரித்திர பூகோளத்தில் 25 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தவர்.

1996 ல் கோட்டை விட்டவர்,20 ஆண்டு கழித்து தேர்வு எழுதி 2016ல் தேர்வுக் கோட்டை தொட்டு இன்று வெற்றி அடைய அடியேனும் ஒரு தூண்டு கோலாய் இருந்து  படி படி எனத் தொந்தரவு செய்து, அவரும் தமது பல்வேறு பணிகள் நேரமின்மை ஆகியவற்றைக் காரணம் காட்டி தப்பித்துக் கொண்டே இருந்தவர் கடைசி ஒரு வாரத்தில் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் மட்டுமே படித்து இப்போது இந்த ஒரு பாடத்தையும் நிறைவு செய்து பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று விட்டார்.நல்ல அறிவாளிதான் சரியாக படித்திருந்தால் 80 முதல் 100 மதிப்பெண் மிகவும் சுலபமாக் எடுத்திருக்கக் கூடியவர்தான்.

இவருக்கு இவர்கள் நிலம் அனல்மின் நிலையத்துக்கு எடுத்துக் கொண்டதற்காக ஈடாக அரசு இவருக்கு அனல் மின் நிலையத்தில் பணி கொடுக்கவும் பணி ஆணை வழங்கி இருக்கிறது என்பதும் இவரைப்பற்றிய செய்திகள்.

என் மகிழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  வாழ்வில் இப்படிப் பட்ட தேன் துளிகள் எனக்கு அவ்வப்போது உண்டு. அவர் இங்கு அமர்ந்து கொண்டு வண்டி ரெடியாக இருக்கிறது பந்தல் பிரிக்கப் போக வேண்டும் என்று அவசரப் படுத்திக் கொண்டிருப்பதால் இத்துடன் நிறைவு செய்கிறேன்.

தேர்வு எழுதி வெளி வந்த உடனே சொன்னார், சார் நான் பாஸ் மட்டுமில்லை 50 முதல் 60 மதிப்பெண் உறுதி என்றார். ஆனால் இரண்டு  மதிப்பெண் கூடவே வந்து 62 மதிப்பெண் பெற்று இதை என்னை எழுதத் தூண்டி விட்டார். அதே போல இன்று தேர்வு முடிவு வெளி வந்த வுடன் எனக்கு தொலை பேசியில் சொல்லி மகிழ்ந்தார்.

மிகவும் கஷ்டப்பட்டு, கூலி வேலைக்கு எல்லாம் போய், மனம் போன போக்கில் எல்லாம் வாழ்ந்து, இரசாயனத் தொழிற்சாலையில் எல்லாம் பணி புரிந்து அதை எல்லாம் விட்டு சொந்தமாக ஆட்டோ வாங்கியே தீருவேன் அதை ஓட்டி முன்னுக்கு வருவேன் என இன்று முதலாளியாக இருக்கும் இவர் செல்வாக்கை விட கல்வியில் தேர்ச்சி அடைந்தது எனக்கு பெரிதும் மகிழ்வடைப்பதாய் உள்ளது.

அவரை விட அவர் நன்றி பாராட்டுதலில் உளம் மிக மகிழ்வதால் இந்த பதிவு.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. thanks for your feedback on this post sir. vanakkam. please keep contact

      Delete