நிஜமா இதெல்லாம் சாத்தியமா அ.இ.அ.தி.மு.க? கவிஞர் தணிகை
இன்றைய டாப் டாக் அ.இ.அ.தி.மு.கவின் பெருந்துறையில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை. நண்பர் சொன்னார் இதை ஏற்கெனவே ஊகித்து. இனியும் மக்கள் இதற்கெல்லாம் சாய்வார்களா? என்பதுதான் இனி வரும் நாட்களின் விடையாக இருக்கும்.
மகளிருக்கு ஸ்கூட்டர் வாங்க 50% தள்ளுபடி, மடிக்கணினி இன்டெர் நெட்டுடன் இலவசம், மொபைல் இலவசம், மின் கட்டணம் 100 யூனிட் வரை இலவசம் இப்படியாக எல்லாம் இலவசமாகவே தெரிகிறது அந்தக் கட்சியின் தோல்வி பயம் தேர்தல் பீதி இப்படி வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.
ஏனெனில் மதுவிலக்கையும் படிப்படியாக அமல்படுத்துவதாகவும், டாஸ்மாக் கடைநேரத்தை குறைப்பது முதலாக அடியோடு நிறுத்துவதாகவும் மதுஅடிமைகளுக்கு மறு வாழ்வு மையங்கள், மருத்துவ உதவிகள் செய்வதாகவும் இருப்பதால் மதுவின் இப்போதைய வருவாயும் இல்லை (சசி பெருமாள் ஆவியே ப்ளீஸ் நோட் இட்).
அதன் பின் எப்படி இவ்வளவு இலவசங்கள் தரமுடியும்? மக்களை டெம்ப்ட் தீயக் கவர்ச்சி செய்கிறது. மக்கள் என்ன செய்வார்களோ? என்பதும், என்ன செய்தார் என்பதும் 19 மே மாதம் வெளிச்சமாகிவிடும்
ஜெ ஜெயித்தாக வேண்டும் என்ற கட்டாயம் இப்படி பிதற்ற வைத்திருக்கிறது என்பது தெரிகிறது. ஏற்கெனவே பல லட்சம் கோடி பற்றாக்குறை நிதி நெருக்கடி கடன் சுமை எல்லாம் ஏற்படுத்தி இருக்கிற ஒரு அரசு அதுவும் ஏற்கெனவே கடந்த 5 ஆண்டில் ஏதும் செய்யாமல் ஏமாற்றிய அரசு இதை எல்லாம் செய்கிறேன் என எப்படி எல்லாம் ஏமாற்ற முனைகிறது என்று பாருங்கள்.
இவர்கள் கடந்த முறை கொடுத்த மிக்ஸி, கிரைன்டர், மின்விசிறி யாவும் எப்படிவிரயமான குப்பையாக காயலான் கடையில் எனத் தெரிந்த பிறகும் மக்கள் இதற்கெல்லாம் கிடைக்கும் என மயங்கி வாக்களிப்பார்கள் என எப்படி இவர்கள் நம்புகிறார் எனத் தெரியவில்லை. யார் இதை எல்லாம் செய்தார்கள் செய்வார்கள் என்ற மேக் இன் புரோடக்ட் நேம் இல்லாமல் அனைத்தும் விநியோகிக்கப் பட்டுள்ளன என என்.டி.டி.வி புட்டு புட்டு வைத்ததை மறந்திருக்க மாட்டீர்கள். ஆனால் இவை எல்லாம் மீறி
இதற்கும் மயங்கி மக்கள் வாக்களித்து விட்டார்கள் எனில் தமிழகத்தின் நிலையை எண்ணிப் பார்க்க முடியாது.
ஒரு பக்கம் உச்ச நீதிமன்ற வழக்கு பம்முகிறது, பயமுறுத்துகிறது, மறுபக்கம் பதவி ஆசை ஜெயித்தே ஆக வேண்டும் என நெருக்குகிறது அதன் எதிரொலியாக எதிரொளியாக இருக்கிறது இந்த தேர்தல் அறிக்கை. மேலும் எதிராளிகளுக்கு மிரட்சியும் ஊட்டுகிறது.
எப்படியும் இப்படி எல்லாம் சொல்லி வந்து விட்டால் பதவி ஏறிவிட்டால் அதன் பின் செய்தால் என்ன? செய்யாவிட்டால்தான் என்ன? பதவிதான் பவராயிற்றே மிக்க சக்தி ஆயிற்றே...
ஏமாற்றி வந்து விடலாம் என மனப்பால் குடிக்கும் தேர்தல் அறிக்கை. தமிழக மக்கள் கடந்த முறை போல இந்த முறை ஏமாறப் போகிறார்களா? அல்லது தூக்கி வீசி எறியப்போகிறார்களா அறிக்கையை இந்த எதுவும் செய்யாத போலி ஆட்சியை என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

திமுக வின் காமெடி தேர்தல் அறிக்கை பற்றியும் கருத்து சொல்லலாமே
ReplyDeletethanks for your feedback on this post Ethicalist E. vanakkam. Please keep contact. I have no sufficient time to go through all. still D.M.K. manifesto is with me ,But I have not studied it thoroughly.
Delete