Friday, May 13, 2016

சில நேரங்களில் சில தவறுகள்: கவிஞர் தணிகை.

சில நேரங்களில் சில தவறுகள்: கவிஞர் தணிகை.




தி.மு.க இம்முறை ஆட்சி அமைக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன. என்.டி.டி.வி கூட அப்படித்தான் சொல்லி இருக்கிறது. அதை ஒரு ஊடக நண்பர் மாற்றி கூறியதை நானும் நம்பி நேற்றைய பதிவின் மூலம் கவலை தெரிவித்திருந்தேன் அதற்கு என் மனதார்ந்த மன்னிப்பும், வருத்தமும்.

உளவுத் துறையும் தி.மு.க தான் என்று சொல்லியதாக ஒரு காவல்துறையின் நண்பரின் அலுவலக ரீதியில் இல்லாத கருத்து தெரிவிப்பு உள்ளது. அதை மாற்ற  அ.இ.அ.தி.மு.க எவ்வளவோ தவறான வழிகளை எல்லாம் கையாள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அட்டையால் செய்யப்பட்ட வாக்குப் பதிவு எந்திரம் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் பேருடன், மேலும் பல்வகையிலும் பணப்பட்டுவடா என்றெல்லாம்.ஆனால் அவை எல்லாம் முடிவை எந்தவகையிலும் பாதிக்கப் போவதில்லை.

மேலும் ஒரு இடத்தில் விழுந்த சுமார் 2000 தபால் வாக்குகளில் 1940 வாக்குகள் தி.மு.க சார்பாகவே இருந்ததாகவும் இருக்கக் கூடும் என்றும்(பொதுவாகவே அரசு அலுவலர்கள் தி.மு.கவுக்கே வாக்களிப்பது அனைவரும் அறிந்ததே) மீதமுள்ள 60 வாக்குகள் மட்டுமே மற்ற கட்சிக்கு சென்றிருப்பதாகவும் அறிந்திருப்பதாக தாம் கேள்விப்பட்டதாக ஒரு நண்பர் தெரிவித்துள்ளார்.

ஒரு ஊடகவியலாளராக இருந்து கொண்டு யூகத்தை அல்லது பிறர் சொல்லியதை எல்லாம் நம்பி நாம் எழுதி விடக் கூடாது என்பதற்கான பாடத்தை நாம் கற்றுக் கொண்டோம்

மேலும் இப்போதெல்லாம் முன் போல் நேரம் கிடைக்காததால் இது போன்ற பதிவுகளையே நாம் வெளியிட வேண்டியுள்ளது உங்களிடம் இருக்கும் எமது தொடர்புகள் விட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காகவே.உடற் சிரமத்துக்கிடையேயும் எழுதுவதை தொடர்கிறேன்.

ஆனால் இது போன்ற தகவல்கள் அல்லது சிறு சிறு தவறுகள் எப்படி ஒரு பெரிய மிகப் பெரிய தவறுகளுக்கும் அழிவுக்கும், விபத்துகளுக்கும் அடியிட்டுக் கொடுக்கும் வழி கோலும் என்பதற்கான சான்றுகள் பல காலம் காட்டி இருப்பதை நாம் அனுபவ  அடிப்படையிலும், படிப்பினை வழியாகவும், படித்தது வழியாகவும் அறிந்துள்ளோம். எனவே இந்தப் பதிவு அதற்காகவே.

வரக்கூடிய முடிவு மக்களுக்கானதாக நல்ல முடிவாகவே இருக்கும் என நம்புவோமாக!




மேலும் அன்றைய முடிவுகள் கண்டு எந்தவித போக்குவரத்து இடைஞ்சல்களும், வன்முறைக்கும் இடம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் தமிழகம் எப்போதும் போல அமைதிப்பூங்காவாகவே விளங்க வேண்டும் என்றும் இயற்கையை பிரார்த்திக்கிறோம்.

மறுபடியும் பூக்கும் வரை.
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment