Tuesday, May 24, 2016

என்று தீரும் கல்விக் கொள்ளை சான்றிதழ் தொல்லை: கவிஞர் தணிகை.

என்று தீரும் கல்விக் கொள்ளை சான்றிதழ் தொல்லை: கவிஞர் தணிகை.




சுமார் 35 வருடங்களுக்கு முன் நானும் இப்படித்தான் அலைந்தேன் பள்ளிப் பருவம் முடித்து கல்லூரிப் பருவம் செல்ல வேண்டுமென. இப்போது எனது மகனும் அலைகிறான். கல்வியின் நிலை மேலும் மாறினாலும், இந்த சான்றிதழ் பெற வேண்டிய தொல்லை அப்படியே இருக்கிறது.

காமராசர் கல்வியை விற்பது என்பது தாய்ப் பாலை விற்பதற்குச் சமம் என்றார். உடனே அந்த படிக்காத மேதையை படித்திருந்தால் தானே அவருக்கு அதன் அருமை தெரியும் என விமர்சித்தார்கள்.

நல்லவேளை சாதி சான்றிதழ் பள்ளீயிலேயே வழங்கி விட்டார்கள். அதே போலவே முதல் பட்டதாரி மற்றும் உதவிகள் பெறுவதற்கான சான்றிதழ்களையும் கல்வியாளர்கள், அரசு நிர்வாக வருவாய் அலுவலர்கள் அந்த அந்த பள்ளியில் அல்லது கல்லூரியில் கிடைக்கச் செய்யலாம்.

அல்லது சில வாரங்களுக்கு கால அட்டவணை இட்டு ஒரு பொது இடம் குறிப்பிட்டு அல்லது கல்யாண மண்டபம் போன்ற இடங்களில் நேரம் குறித்து இதற்கான முகாம் நடத்தலாம். இதெல்லாம் ஏன் இந்த அரசுக்கும் அரசு அலுவலர்களுக்கும் தோன்றுவதில்லை? இப்படி இருந்தால் தான் இவர்களின் அருமை பெருமை எல்லாம் தெரியவேண்டும் என நினைக்கிறார்களா? என்பது தெரியவில்லை.

இ. சர்வீஸ், இ.கவர்னன்ஸ் என்கிறார்கள் ஆனால் அவை எல்லாமே மனித மாமூலாகவே இருக்கிறது. எதெதெற்கு எல்லாம் போராடுவது என்று தெரியவில்லை.

கல்லூரியில் சேர்வதற்கான அதன் கலந்தாலோசனை, விண்ணப்பம்  சென்று சேர வேண்டிய கடைசித் தேதிக்கும் இந்த அரசு அலுவலர்கள் செய்து வரும் காலத் தாமதத்திற்கும் தொடர்பே இல்லாமலிருக்கிறது.

அட வேலையிலேயே இல்லை என்கிறேன் எப்படி வருவாய் இருக்கும் அதற்கு இந்தக் கட்டத்திற்குள் அடைத்து பதில் அளியுங்கள் என்பதெல்லாம் எப்படி பொருந்தும்...காரியம் ஆக வேண்டும் என்றால் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டியே தீர வேண்டும். அவர்கள் கேள்வி கேட்பவர்களாகவும் நாம் அடிபணிபவர்களாகவும் இதென்னய்யா நாடு இதற்கு ஒரு கேடு....



எல்லா வகையிலுமே இடைத்தரகர்களும், தனியார் சார்பாகவே நிலை வகிக்கிற அரசு மக்களரசாக மாறவே போவதில்லை. நாம் அதை பார்க்கவே போவதில்லை.



இவை யாவும் தேவையில்லை என்றால் பணம் தேவை அது கோடிக்கணக்கில் தேவை. அதுவும் இதுவும் எதுவும் இல்லார்க்கு இங்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லை.

is it called Right to Education?
Is it called Right to get Employment?
India and Tamil Nadu at Cross roads...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment