Friday, May 20, 2016

பண நாயகம் வென்றது ஜனநாயகம் தலை குனிந்து நின்றது: கவிஞர் தணிகை

பண நாயகம் வென்றது ஜனநாயகம் தலை குனிந்து நின்றது: கவிஞர் தணிகைஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கியவர்களுக்கு நல்ல சாவே வராது. இது நாடா? இதற்கு ஒரு கேடாய்...மதுக்கடையை எடுத்து விடுவார்கள் என்ற பயத்தில் அதற்கு எதிராக‌ மது அடிமைகள் போட்ட போதை ஓட்டு இந்த தேர்தலை அதிகம் பாதித்திருக்கிறது.

500 முதல் 5000 வரை ஓட்டு வித்தியாசத்தில் தான் ஆளும் கட்சி நிறைய இடங்களில் வென்றிருக்கிறது. ஒரு இடத்தில் 40 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க தோற்றிருக்கிறது. தொல் திருமாவளவன் 87 வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருக்கிறார்.

தேர்தலுக்கும் முன் சென்ற விஜய்காந்தின் சிங்கப்பூர் பயணமும், வைகோவும் இந்த தேர்தல் முடிவில் முக்கிய பங்கெடுத்து தமிழக அரசியலை நாசம் செய்து தமிழகத்துக்கு தலை குனிவை ஏற்படுத்தி பணநாயகம் வெல்ல வழிகாட்டியிருக்கிறார்கள்.அந்த இகழ் எப்போதும் இனி தரித்திர தமிழகத்தின் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கும்.

கேடு கெட்ட அழகிரி அ.இ.அ.தி.மு.கவுக்கு வாக்களியுங்கள் எனச் சொல்லி விட்டு தி.மு.க தென்பகுதிகளில் நான் இருந்திருந்தால் வென்றிருக்கும் இந்த தோல்விக்கு யார் காரணம் என பிதற்றியிருப்பது அவரது சுயநலத்தை பளிச் என படம் போட்டுக் காட்டி இருக்கிறது. அவர் இல்லாமலே கட்சி நல்ல நிலைமைக்கு வந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது.

ராஜேஸ் லக்கானி விலைக்கு வாங்கப்பட்டு விட்டார் என்ற பேச்சும், தேர்தல் முடிவு வரும் முன்பே தலைமைச் செயலரை அழைத்து முதல்வர் மறு பதவி ஏற்புக்கு ஏற்பாடு செய்யச் சொன்னது எப்படி எனத் தெரியவில்லை. இந்த செய்தியை எமது நண்பர் ஒருவர் இது பற்றி சவுக்கு சங்கர் தெரிவித்ததாக குறிப்பிட்டார். மேலும் பாரதீய வங்கியின் 570 கோடி பிடிபட்டதாகச் சொல்லும் வாகனங்கள் உண்மையான பதிவு எண்ணுடன் பயணம் செய்யவில்லை என்பதும் உரிய ஒரிஜினல் ஆவணங்கள் இல்லை என்பதும், பா. சிதம்பரம்  நாட்டின் நிதி மந்திரி பொறுப்பை பல்லாண்டு வகித்தவரே இப்படி எல்லாம் மிகுந்த எண்ணீக்கையிலான தொகை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றப்படுவது வழக்கத்தில் இல்லை என கருத்துரைத்திருப்பது கவனிக்கத் தக்கது.

மோடி மந்திரமும் இடையே தமிழகத் தேர்தலில் இடையே ஊடாடி இருக்கிறது எனச் சொல்லப் படுகிறது.

ஆரம்பத்தில் இருந்தே இந்தக் கட்சிகளின் பிரிவினை மந்திரம் தந்திரமாக பணத்தின் வல்லமையால் மாற்றப்பட்டிருக்கிறது. வைகோ விஜய்காந்த் போன்றோர் வலையில் கம்ப்யூனிஸ்ட் கட்சிகளும், வி.சி. க போன்ற கட்சிகளும் கருவறுக்கப்பட்டுள்ளன.

மேலும் பா.ம.க வாக்கு சதவீதத்தில் 5 சதத்துக்கும்மேல் வந்து விட்டது. பா.ஜ.கவை விட டெபாசிட் போய் தோல்வி அடைந்த விஜய்காந்த் கட்சி கடந்த முறை எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்தது இம்முறை வினை விதைத்தவன் வினைஅறுப்பான் என அறுபட்டிருக்கிறது/ இந்த கேப்டனைத்தான் கலைஞர் கருணாநிதி கெஞ்சிக் கூத்தாடி அழைத்திருந்தார் கூட்டணிக்கு.

காங்கிரஸ் கட்சி இல்லாமலே  தி.மு.கவும் அ.இ.அ.தி.மு.கவுக்கு எதிரான மாற்று அணியாக நின்றிருந்தால் இன்னும் தொகுதிகள் பெற்றிருக்கும் என பேச்சுகள் இருக்கின்றன.

தேர்தல் ஆணையம் எல்லாம் நன்றாக செய்வது போல நடித்துவிட்டு பணப் பட்டுவடாவில் கண்டும் காணாமல் , தெரிந்தும் தெரியாமல் நடந்து  கொண்டிருக்கிறது ஒரு பாடம்.

இனி தேர்தல் நடத்துவது என்றால் ஆளும் கட்சி காலம் காலாவதி ஆன உடன் மத்திய ஆளுகை ஆளுஞர் ஆட்சி வைத்துக் கொண்டு அந்தக்  காலக்கட்டத்தில் எந்த கட்சிக்கும் சாதக பாதகம் இல்லாமல் தேர்தல் நடத்துவதென்றால் நடத்த வேண்டும் இல்லையேல் தேர்தல் முறைகள் விகிதாசாரம், ஜனநாயகம், திரும்ப அழைக்கும் உரிமை போன்றவை வரவேண்டும். நோட்டாவுக்கு 1.8 சதவீதம் அல்லது 5 இலட்சத்துக்கும் மேல் வாக்களிக்கப்பட்டுள்ளது பற்றி பரிசீலிக்க வேண்டும். வாக்களிக்காதவர்கள், வென்றவருக்கு எதிராக விழுந்த வாக்குகள் ஆகியவை பற்றி கவனிக்குட்படுத்தப் பட வேண்டும்.

வாக்கு எந்திரங்களே ஆளும் கட்சிக்கு ஆதரவாக மாற்றப்பட்டு எண்ணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்ற செய்திகளும் இல்லாமல் இல்லை. அட்டையில் அ.இ.அ.தி.முகவுக்கு சின்னத்துடன் வாக்கு எந்திரங்கள் வடிவமைக்கப்பட்டது பிடிபட்டுள்ளன.

அனேகமாக உச்ச நீதிமன்றமும் இப்படியே ஏமாற்றும் என நம்புவோமாக.

ஒரு நண்பர் காத்திருக்கிறார்.
மறுபடியும் சந்திப்போம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment