Monday, May 9, 2016

சினிமாவோ கதையோ அல்ல வாழ்வின் வெற்றிமுகம்: கவிஞர் தணிகை

சினிமாவோ கதையோ அல்ல வாழ்வின் வெற்றிமுகம்: கவிஞர் தணிகை

தனி மனிதராக நின்று தனக்கு நீர் கொடுக்காத சமுதாயத்துக்கு தனி உழைப்பை ஈந்து நீருக்காக கிணற்றை வெட்டி அதில் கிடைத்த நீரை அனைவர்க்கும் பகிர்ந்தளித்த பரந்த மனதுக்காரர் பற்றி பகிர்ந்து கொள்ளத் தான் வேண்டும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
 நன்றி
 தினத் தந்தி.


உயர் சாதியினர் எதிர்ப்பு, தனி ஒருவனாக 40 நாட்களில் கிணறு தோண்டி அனைவருக்கும் தண்ணீர் வழங்கியவருக்கு பாராட்டு
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
225
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
திங்கள் , மே 09,2016, 9:34 AM IST
பதிவு செய்த நாள்:
திங்கள் , மே 09,2016, 9:34 AM IST


நாக்பூர், 

பொது கிணற்றில் தண்ணீர் பிடிக்க உயர் சாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், தொழிலாளி ஒருவர் தனி ஒருவனாக நின்று கிணறு தோண்டி அதன் தண்ணீரை அனைத்து தரப்பு மக்களுக்கும் பகிர்ந்தளிக்கிறார்.

தண்ணீர் பிடிக்க மறுப்பு 

வாசிம் மாவட்டம் கோலம்பேஷ்வர் கிராமத்தை சேர்ந்தவர் பாபுராவ் தஜ்னே. கூலித்தொழிலாளி. இவரது மனைவி அப்பகுதியில் உள்ள பொது கிணற்றுக்கு சமீபத்தில் தண்ணீர் பிடிக்க சென்றார். இவர்கள் தலித் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால், தண்ணீர் பிடிக்க உயர் சாதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஏமாற்றத்துடன் பாபுராவ் தஜ்னேயின் மனைவி வீடு திரும்பினார். நடந்ததை கணவரிடம் கூறி வருத்தப்பட்டார். இருந்தாலும், பாபுராவ் தஜ்னே சோர்ந்து விட வில்லை. 

தன்னுடைய நிலத்தில் கிணறு தோண்டி அதன் மூலம் தன்னை சார்ந்த தலித் மக்களின் தாகத்தை தீர்க்க வேண்டும் என தீர்க்கமாக முடிவு செய்தார். அதன்படி, தன்னுடைய நிலத்தில் தனி ஒருவனாக நின்று கிணறு தோண்டும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டார்.

முயற்சிக்கு பலன் 

ஆரம்பத்தில், இவரது செயல்பாட்டை மனைவி உள்பட அனைவரும் விமர்சனம் செய்தனர். நக்கலாக சிரித்தனர். எனினும், தன்னுடைய வியர்வை துளியை மூலதனமாக கொண்டு, செயலில் அவர் உறுதியுடன் இருந்தார். எண்ணி சரியாக 40–வது நாளில் பாபுராவ் தஜ்னேயின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. அவர் தோண்டியிருந்த அந்த கிணற்றில், எக்கச்சக்கமாக தண்ணீர் கிடைத்தது.

இதைப்பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். தற்போது அந்த கிணற்று நீரை வைத்து அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, அப்பகுதியை சேர்ந்த தலித் மக்களும், உயர் சாதியினரும் பயனடைந்து வருகின்றனர். 

ஆரம்பத்தில், அவரை எள்ளி நகையாடியவர்கள் கூட, இப்போது வாழ்த்துகளை சொல்லி உள்ளம் பூரிக்கின்றனர்.

எங்களுக்கு தண்ணீர் தர மறுத்த உரிமையாளர் பெயரை தெரிவிக்க விரும்பவில்லை. இருப்பினும் நாங்கள் ஏழைகள் மற்றும் தலித் என்பதினால் அவமதித்துவிட்டார். மார்ச் மாதம் அழுதுக் கொண்டே கிராமத்திற்கு வந்தோம். யாரிடமும் யாசிப்பதால் தண்ணீர் தேவையானது பூர்த்தியடையாது என்று புரிந்துக் கொண்டேன். நான் மாலிகான் சென்றேன், கிணறு தோண்டுவதற்கான பொருட்களை வாங்கி வந்தேன், தோண்டினேன். என்னுடைய கிணற்றில் தண்ணீர் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று பாபுராவ் தஜ்னே கூறிஉள்ளார்.

அப்பகுதியில் தண்ணீர் எங்கு இருக்கிறது என்று ஆய்வு செய்யாமல் கூட அவர் தோண்டிஉள்ளார். நான் கிணறு தோண்டுவதற்கு முன்னதாக கடவுளை மட்டுமே நம்பினேன், அவர் என்னுடைய வேண்டுதலுக்கு பலனாக தண்ணீர் கொடுத்து உள்ளார் என்றும் குறிப்பிட்டு உள்ளார். 

மாவட்ட நிர்வாகம் பாராட்டு 

இந்த தகவல் வாசிம் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தாசில்தார் கிராந்தி டோம்பி, கோலம்பேஷ்வர் கிராமத்துக்கு சென்று பாபுராவ் தஜ்னேயை சந்தித்தார். மேலும், அவரது இந்த செயலை மனதார பாராட்டியதுடன், ‘‘நீங்கள் உறுதியின் உருவமாகவும், வலிமையான மன வலிமை கொண்டவராகவும் இருக்கிறீர்கள்’’ என்று புகழாரம் சூட்டினார்.

பொது கிணற்றில் தண்ணீர் பிடிக்க உயர் சாதியினர் மறுப்பு தெரிவித்ததால், தொழிலாளி ஒருவர் தன்னம்பிக்கையுடன், தனி ஆளாக நின்று கிணறு வெட்டி அதன் தண்ணீரை ஒட்டுமொத்த கிராம மக்களுக்கும் பகிர்ந்தளிப்பது அனைவரது புருவத்தையும் உயர்த்தி இருக்கிறது.

கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
225
பிரதி
Share

No comments:

Post a Comment