Sunday, May 8, 2016

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும் செயலின்மையும்: கவிஞர் தணிகை

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும் செயலின்மையும்: கவிஞர் தணிகைவரும் ஆனா வராது, நடக்கும் ஆனா நடக்காது, கிடைக்கும் ஆனா கிடைக்காது செயல் படும் ஆனா செயல்படாது இது போன்ற வடிவேலுவின் வாசகங்கள் நமது இந்திய , தமிழகத் தேர்தல் ஆணைய நடவடிக்கைகளுக்கும் பொருந்தும் .ஆனா பொருந்தாது...

எங்கு நோக்கினும் பேனர், பிளாஸ்டிக் பிளக்ஸ்களாக காட்சி அளிக்கும் முன் தேர்தலின் போதெல்லாம். ஆனால் இப்போது இன்றைய தேர்தல் களத்தில் ஒரு பிளக்ஸ் பேனர் கூட இல்லை. பாராட்டுகளும் நன்றியும் நமது இந்திய தமிழக தேர்தல் ஆணையத்துக்கு. கட்சிகளின் வாலை ஒட்ட வெட்டியுள்ளதால் .இந்த செயல்பாடு வரவேற்கத்தக்கதே.

வாக்களிக்கும் இடமான பள்ளி பூத் வாக்குச் சாவடிகளில் இருந்து 200 மீட்டர் கணக்கில் எந்த அரசியல் கட்சியினரும் குழுமக் கூடாது என்ற தடை விதித்தது, கட்சிக்கொடிகள் கம்பங்கள், கொடிகள், தலைவர்களின் படங்கள் சிலையாக, ஓவியமாகக் கூட இருக்கக் கூடாது என்றது,பூத் வாக்கு ஸ்லிப்களை நீங்கள் அளிக்க வேண்டாம் ஆணையமே அளிக்கும் என மாற்றியது என ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து ஜனநாயக நெறிமுறைக்கு ஒரு ஆளுமை காட்டி வருவதற்கெல்லாம் ஒரு பெரிய சல்யூட்.

ஒரு சுவர் விளம்பரம் கூட இல்லை. இதனால் உள்ளூர் ஆர்ட்டிஸ்ட்களுக்கு வருவாய் இல்லை குடிக்க காசு இல்லை என்றாலும் எவருக்கும் எவருக்குள்ளும் சண்டை சச்சரவு இல்லை. எல்லா வீட்டு, கடை, தெருமுனை, சாலைச் சுவர்களும் வழக்கப்படியே அமைதியாக இருக்கின்றன. வாழ்த்துகள் தமிழக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு.பொதுமக்களின் சராசரி அன்றாட வாழ்க்கை பாதிக்கவில்லை. அவரவர் அவரவர் பணிக்கு சென்று கொண்டே இருக்கின்றனர். தேர்தல் ஆணையம் தனது பணியை கண்ணும் கருத்துமாக கண்ணியமாக செய்துகொண்டிருக்கிறது.

எனவே அதன் பணியாளர்கள் தலைமை ஆணையர் நஜீம் ஜைதி முதல் ராஜேஸ் லக்கானி, சைலேந்திர பாபு போன்ற காவல்துறை கூடுதல் தலைவர் முதல் அடிமட்ட பணியாளர் வரை அனைவர்க்கும் எமது வணக்கம்.

ஆனால் திறந்த வாகனத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் மக்களை மடை திறந்து கூட்டத் திடல் நோக்கி திரட்டிவருவார், கட்சிகள் மேல் ஏன் நடவடிக்கை இல்லை ? சரத் குமார் காரில் 9 இலட்சம், அ.இ.அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் சில கோடிகள், மின்வெட்டி விடியற்காலை வார்டு பிரமுகர்கள் காற்றுக்காக வெளி அமர்கையில் அவர்களுக்கு பணத்தாள்கள் அளிப்பு, ஆரத்தி எடுப்பு அன்பளிப்பு, இப்படி பண பரிமாறுதல்கள் குடும்பத்துக்கு 5000 என்றும் நபருக்கு 500, 1000,2000 என்றெல்லாம் விநியோகிக்கப்படுவதாக பகிரங்க செய்திகள் இதை எல்லாம் ஏன் எப்படி எதற்காக நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் பார்த்தபடி இருக்கிறது.?அதிலும் முக்கியமாக ஆளும் கட்சி அ.இ.அ.தி.மு.கவின் கட்டுப்பாடற்ற இது போன்ற நடவடிக்கைகளை ஏன் கண்டும் காணாமல் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறது? தேர்தல் ஆணையம்..

இந்த முக்கியமான நிகழ்வில் தேர்தலை பாதிக்கும் நிகழ்வில், திசை திருப்பும் நிகழ்வில் ஏன் வாளவிருக்கிறது? எப்படி தேர்தல் அறிக்கையில் எல்லாம் இலவசம் என்பதை வேடிக்கை பார்த்தபடி நீதிமன்றங்களும், தேர்தல் ஆணையமும் வாளாவிருக்கிறது ஜனநாயக நெறிமுறைகளைக் காக்க வெறும் வாக்களித்தால் மட்டும் வாக்களிக்க சொன்னால் மட்டும் போதுமா? கணக்கு வழக்கு சமர்ப்பித்தால் மட்டும் போதுமா? இவர்களுக்கு போலிக்கணக்கு சமர்ப்பிக்க முடியாதா?வேட்பாளர்களை திரும்ப அழைக்கும் உரிமை, வாக்களிப்பின் படி விகிதாசார முறைகள் வர முக்கிய ஜனநாயக கடமை யாற்ற வேண்டமா? ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற குற்றவாளிகளை அனுமதி மறுத்து தேர்தலில் நிற்க தடை விதித்து வீட்டுக்கு அல்லது ஜெயிலுக்கு அனுப்ப வேண்டாமா? இதெல்லாம் பொறுப்புள்ள ஆணையம் செய்யக்கூடாதா?

டி.என். சேஷன் என்னும் நபர்தான் முதன் முதலில் தேர்தல் ஆணையம் என்ற அரசு எந்திரம் கூட எவ்வளவு சக்தி மிக்கது இந்திய ஜனநாயகத்தில் என செயல் நடவடிக்கை ஆரம்பித்தது...1990களில் இருந்து இதன் சக்தி வெளிப்பட்டது

நவீன் சாவ்லா,டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, என்.கோபால சாமி,வி.எஸ்.சம்பத்,இன்னும் பலர் இதன் தரத்தை உயர்த்தினர். அதில் தமிழகத்தை சார்ந்த சிலரும் பெரும்பங்கு வகித்தனர். எம்.எஸ் கில்,எச்.ஒய்.குரேசி, பிர்மா,வி.எஸ்.ரமாதேவி, சாமிநாதன், கல்யாண் சுந்தரம் போன்றவர் பட்டியல் விரிகிறது.
நாம் இந்த பதிவுடன் சொல்ல விரும்புவது, குடியரசுத் தலைவர், பிரதமர், பாராளுமன்றம், உச்ச நீதிமன்றம், நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் யாவரும் ஜனநாயக மரபாகிய இந்த தேர்தல் மக்கள் விழாவை இன்னும் பொருள் பொதிந்த மக்களுக்கு நாட்டுக்கு உகந்த சக்தியாக இதை நோட்டா, 49ஓ  போன்றவற்றுடன் அடுத்த கட்டத்துக்கு பயன்படா வாக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாற்றி பல படிகள் முன் உயர்த்திச் செல்ல வேண்டும் என்பதே. சார்புடையதாய் இருக்கக் கூடாது என்பதே.

ஏன் பஞ்சாயத்து , சட்டசபை, பாராளுமன்ற தேர்தல் அனைத்தையும் ஒரே காலத்தில் நடத்தி முடிப்பது இது கூட தேர்தல் ஆணையத்தால் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய முன் வந்து நிற்கும் எதிர்காலப் பணியாகும். ஆனால் பணியாகாது..மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment