Saturday, April 30, 2016

எங்க ஊரில் தீபாவளி இன்னைக்கு செம்மலை அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் வாக்கு சேகரிப்பால்: கவிஞர் தணீகை

எங்க ஊரில் தீபாவளி இன்னைக்கு செம்மலை அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் வாக்கு சேகரிப்பால்: கவிஞர் தணீகை



ஊரெங்கும் அம்மா படம் போட்ட கொடித் தோரணங்கள், ஆங்காங்கே மூங்கில் கழிகளில் கட்சிக் கொடிகள், செம்மலை வாக்கு சேகரிக்க வருகிறார் என்ற ஒலிபரப்பு,வேறு எந்த வேட்பாளரும் கட்சியும் செய்யாத அளவில் பட்டாசு வெடித்து வெற்றி வேட்பாளர் என்று முழக்கம். இப்போதே ஜெயித்து விட்டது போன்ற பிரமையை ஏற்படுத்தி விட்டார்கள்.

எந்தவித சாதனையும் செய்யாமலேயே மறுபடியும் ஆட்சிக் கட்டில் ஏறத் துடிக்கிற அரசின் பிரதிநிதிகளாய் இந்த வேட்பாளர்கள் செம்மலை உட்பட.

இந்த செம்மலைக்கு சீட்டே தராமல் தனக்குப் போட்டியாக வந்துவிடுவார் என எடப்பாடி பழனிச்சாமி ஓரங்கட்டியும், எப்படியோ அது அம்மாவுக்கு எட்டி எடப்பாடிக்கு ஒரு ஏட்டிக்குப் போட்டி வேண்டும் என இந்த செம்மலை.

ஒரு காலத்தில் தாரமங்கலம் தொகுதியில் எம்.ஜி.ஆர் காலத்தில் சீட் கிடைக்காததால் சுயேட்சையாக நின்று பொண்டாட்டி தாலியை எல்லாம் விற்று நிற்கிறேன் என ஜெயித்து அதன் பிறகு எம்.ஜி.ஆர் கட்சியில் சேர்ந்தவர் .

இப்போது இங்கு மேட்டூர் தொகுதியில். நபர் அமைதியானவர்தான் . நல்லவர்தான் தனிப்பட்ட முறையில் சொல்லப்போனால். ஆனால் இவருக்கும் பினாமி இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

செம்மலையா, எஸ்.ஆர். பார்த்திபனா? ஜி.கே மணியா? இவர்கள் மூவருக்கும்தான் போட்டி. ஜி.கே.மணி நிற்பதால் எஸ். ஆர். பார்த்திபன் திறம்பட தொகுதி முழுதும் சுழன்றாடி பணி புரியத் தவறினால் செம்மலை ஜெயித்து விடக் கூடும். எப்படியோ ஜி.கே.மணி வெற்றி கொள்ள வழி இல்லை. ஆனால் இவர் வாக்குகளை பிரிப்பதால் செம்மலைக்கு வாய்ப்பு. ஆனாலும் தற்போதைய எம்.எல்.ஏ பார்த்திபனுக்கு ஒரு அரிய தகுதி உண்டு. அது செம்மலையை விட, ஜி.கே.மணியை விட இளைஞர். இந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் நன்கு பரிச்சயமானவர்.

எனவே தி.மு.க கடுமையாக போராட வேண்டிய சூழ்நிலை மேட்டூர் தொகுதியில் எஸ்.ஆர். பார்த்திபனைத் தக்க வைக்க வேண்டுமானால்.

ஒன்றுமே செய்யாமலே கூட்டட்தைக் கூட்டி, நிறைய செலவு செய்து வேடிக்கைக் காட்டி அ.இ.அ.தி.மு.க தமது முழுத் திறனையும் பயன்படுத்தி செம்மலை பிரமை ஏற்படுத்தி உள்ளது. அதைக் கலைக்க வேண்டிய கடமை வழக்கறிஞர் எஸ்.ஆர். பார்த்திபன் முன் உள்ளது.

எனவேதான் இத்தனை ஆர்ப்பாட்டம் வாக்கு சேகரிப்புக்கே, இடை விடாத பட்டாசு சத்தம். தீபாவளி கெட்டது போங்கள்...வேடிக்கை பார்க்கும் மக்கள், பின் தொடரும் மக்கள் அனைவரும் வாக்களிப்பாரா பொறுத்திருந்து பார்ப்போம்.




ஆயினும் மறுபடியும் சொல்கிறேன்,ஜி.கே.மணி வாக்குகளை சிறிது பிரிப்பதால் அது செம்மலைக்கு சாதகம். ஆனால் எஸ்.ஆர். பார்த்திபன் வெல்ல வேண்டிய தொகுதிதான் அதற்கு கடுமையாக பாடு பட வேண்டும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment