இன்னும் 4 வருஷம் இருக்காம்ல விடுவாங்களா? கவிஞர் தணிகை
அதுதான் அரசியல். அதில் எதுவும் நடக்கும். இன்னும் 4 வருடம் இருக்கும்போது விடுவாங்களா? ருசி கண்ட பூனைகள்.? எல்லாருக்குமே தெரியும் பதவி சுகம், இன்னாள், முன்னால், பின்னால் எந்நாளுமே நிரந்தரமாக முதல்வராக இருப்பதாக சொல்லிய சொல்லிக் கொள்ளும் சொன்ன எல்லாருக்குமே தெரியும் பதவி இறங்கி விட்டால், ஆட்சியில் இல்லாவிட்டால் என்ன என்ன நடக்குமோ என்று?
மறுபடியும் தேர்தல் என்றால் கண்டவர் எல்லாம் தாஜா செய்ய வேண்டும், நிறைய செலவு செய்ய வேண்டும், சம்பாதித்த காசை எல்லாம் கொட்ட வேண்டும், மறுபடியும் எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுமே? அதனால்தான் ... இந்த இணைவு பிணைப்பு மந்திரி பதவிகள் துறைகள் கட்சிப் பதவிகள் எல்லாம் பிரிப்பு.
எல்லாவற்றையும் விட கடைசி கட்டத்தில் தேர்தலுக்கு முன் இருக்கும் மோடி ஆட்சி இப்போது இவர்களுக்கு மந்திரி பதவி தரும் என்பது... அடுத்த வருடம் நடக்க இருக்கும் மத்திய தேர்தலுக்கு நல்ல பாதை தமிழகத்தில் பாரதிய ஜனதா போட ஆரம்பித்துள்ளது பாதிக்குப் பாதி எம்.பி தொகுதி கேட்கும் கூட்டணியில் அ.இ.அ.தி.மு.கவிடம் டிமான்ட் செய்யும். வென்றுவிட்டால் தமிழகத்தில் கால் பதித்துக் கொண்டதாக பீற்றிக் கொள்ளும்
ஆனால் இந்த அணி அடியோடு தகர்ந்து போய் தி.மு.க அணிக்கு மறுபடியும் யோகம் அடிக்கப் போகிறதோ இந்த கமலும் ரஜினியும் வேறு என்ன செய்யப் போகிறார்கள் என்பதையும் பார்க்கலாமே....
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம் நண்பரே
ReplyDeletethanks for your feedback on this post sir. vanakkam
Deleteகேலிக்கூத்து
ReplyDeletethanks Raji for your participation in this site and sharing of your expression on this post. vanakkam.pl.keep contact.
Delete//இன்னும் 4 வருடம் இருக்கும்போது விடுவாங்களா? ருசி கண்ட பூனைகள்.?//
ReplyDeleteஒன்று சேர்ந்ததே அதற்காக தானே.