Tuesday, August 1, 2017

கூட்டத்தில் ஒருவன்: கவிஞர் தணிகை கூட்டத்தில் ஒருத்தன்

கூட்டத்தில் ஒருவன்: கவிஞர் தணிகை  கூட்டத்தில் ஒருத்தன்

Related image


நல்ல படம். பார்க்க வேண்டிய படம். நல்ல செய்தி. சாதாரணமானவர்களாலும் சாதிக்க முடியும் என்ற ஒரு மெசேஜைக் கொண்டிருக்கும் படம். இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் தனித் தனி. அதே போல எல்லாருக்குமே தனக்கென தனித்திறமைகள் இருக்கும் என்கிறது அறிவியலும்.

சிறிய பட்ஜெட்டில் ஒரு நல்ல முயற்சியை செய்திருக்கிறார் ஞானவேல் இவர் மார்கண்டேய நடிகர் சிவகுமாரின் உறவினர் அல்ல. அவர் பட விநியோகஸ்தார். அவர் கே.ஈ ஞானவேல். இவர் டி.ஜெ.ஞானவேல் இவர் திரைக்கதை எழுத்து இயக்கம் என இந்தப் படத்துக்கு நன்கு உழைத்து படைத்திருக்கிறார்.

இந்தப் படத்திற்காக தயாரிக்கப்பட்ட டோன்ட் ஒர்ரி, பீ ஹேப்பி பாடல் நல்ல நம்பிக்கையூட்டுவதுடன் எளிமையாக எல்லாரையும் கவரும் எல்லாரையும் முணுமுணுக்கச் செய்யும் என நினைக்கிறேன்.

அசோக் செல்வன், பிரியா ஆனந்த் ஆகியோர் தகுதியான பாத்திரத்தில் நன்றாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

கதையை சொல்லும் நோக்கமில்லை. நீங்கள் பார்க்க வேண்டியிருப்பதால்.ஆனால் சராசரி என்ற ஒரு குறிப்பிட்ட சதவீதம் எப்போதும் எவர் நினைவிலும் நில்லாதது. ஆனால் மிகவும் முக்கியமான காலக் கட்டத்தில் இந்த சராசரிகளின் முடிவுகள் தான் நாட்டின் ஆட்சி முறைகளையே தீர்மானித்து விடுகின்றன தேர்தல் போல.


Image result for koottathil oruthan


ஆனால் இந்தப் படத்தில் உண்மை சுடர்விடுகிறது. கடைசியில் செயற்கையாக அன்னதானம் என்ற ஒரு முடிவு சொல்லப்பட்டிருந்தாலும் அது  குறை சொல்ல முடியாதவாறு கதையின் இயல்போடு இயைந்திருப்பதால் நன்றாகவே பொருந்தி விடுகிறது.

முயற்சியில் ஈடுபடும்போது எந்த மனிதரும் சாதரணமானவர் இல்லை, கூட்டத்தில் ஒருவராக இல்லை மாறாக கூட்டத்துக்கு வழிகாட்ட பெரும் சக்தியைப் பெற்று விடுகிறார் என்பதும் அவர் சத்திய நெறிகளை கையாளும்போது அவர் நினைக்காத அவர் கற்பனைக்கும் எட்டாத முடிவுகள் ஏற்படும் என்ற முடிவை ஜனனியும் அர்விந்தும் இணைந்து ஏறபடுத்தி விடுகிறார்கள்.

யாரையும் அவ்வளவு சாதரணமாக ஒதுக்கி விடக் கூடாது அவருள் உறையும் திறமையை வெளிக் கொண்டு வர மற்றவர் தூண்டுகோல் உதவியாய் அமையும் அந்த நேரடியானத் தூண்டுகோலாய் சமுத்திரக்கனி ஏற்றிருக்கும் சத்தியமூர்த்தி பாத்திரமும்,  மறைமுகமாக பிரியா ஆனந்தின் ஜனனி பாத்திரமும் அர்விந்த் என்னும் இளைஞர பக்குவப் படுத்தி விடுகிறது.

கடைசியில் சுருக்கமாக சினிமாத்தனமான முடிவாய் இருந்தபோதிலும் அது நமக்கு திருப்தி அளிக்கிறது ஒரு நேர்மறை எண்ணத்தை பார்ப்போர் மனதுள் ஏற்படுத்தி விடுகிறது. ஜனனி அர்விந்த் இணைவதை சொல்கிறேன்.
Image result for koottathil oruthanசமுத்திரக் கனி இந்தியக்  கிரிக்கெட்டில் தோனி கிடைத்தது போல தமிழ் சினிமாவில் நமக்கு கிடைத்திருக்கிறார். அளவாக சரியாக கன கச்சிதமாக தமக்கு கிடைத்த பாத்திரத்தை உணர்ந்து செய்து விடுகிறார். சமுத்திரக்கனி சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டராக மட்டுமல்ல சிறந்த நடிகராக இந்திய சினிமாவால் தேர்ந்தெடுக்கப்படும் நாள் கூட தொலைவில் இல்லை என்று கருதுகிறேன்.


கூட்டத்தில் ஒருத்தன் இந்த சினிமாக் கூட்டத்தில் தனியாகத் தெரிகிறான்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. அருமையான விமர்சனம்
    அவசியம் பார்ப்பேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  2. thanks for your feedback on this post sir. vanakkam

    ReplyDelete