Monday, August 14, 2017

ஹுசேன் போல்ட் தட களச் சிங்கம் வீழ்ந்தது: கவிஞர் தணிகை

‍ஹுசேன் போல்ட் தட களச் சிங்கம் வீழ்ந்தது: கவிஞர் தணிகை


Image result for time beats usain bolt


மாபெரும் தட கள வீரர் கடைசி உலக தடகளப் போட்டிகளிலும் சாதனை செய்வார் என உலகே எதிர்பார்க்கப்பட்ட ‍ஹுசேன் போல்ட் 100 மீட்டரில் 3 வது வெண்கலப் பதக்கமும், 400 மீ தொடர் ஓட்டத்தின் கடைசி ஓட்டத்தில் கீழே விழுந்து ஜைமைக்காவுக்கு கிடைக்க வேண்டிய முதல் பரிசை பிரிட்டனுக்கு கை நழுவச் செய்ததும் விளையாட்டு உலகில் அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தாலும், காலமும், வயோதிகமும், தளர்ச்சியும் எப்படிப் பட்ட எஃகு உடம்புக்காரராக இருந்தாலும் இயற்கை என்னும் சுழற்காற்றின் பணிந்து போகவே வேண்டியதிருக்கிறது என்பதற்கு கட்டியங் கூறுகிறது.

 காட்டையும் நாட்டையும் மாநிலத்தையும் உலுக்கிக் கொண்டிருந்த ஒரு சொல்லாட்சி காடண்ட வீரப்பன் கடைசியில் குறி தவறி சுடுமளவிற்கு கண் பார்வை மங்க ஆரம்பிக்க அதற்கு அறுவை சிகிச்சை செய்வதாக எண்ணி மோரில் மயக்க மருந்து கொடுத்து நய வஞ்சகமாக காட்டிலிருந்து நாட்டுக்கு இழுத்து வந்த கதையும் அப்படித்தான் முடிந்தது. சதி பாதி என்றாலும் வயோதிக விதிதான் அடிப்படைக் காரணம்.

ஈராக்கின் சதாம் உசேன் பங்கரில் சென்று கடைசியில் ஒளிந்திருந்ததும், அமெரிக்க படைகளிடம் மாட்டி தூக்கு தண்டனை பெற்றதும் அப்படித்தான்
‍ஹிட்லர் வீழ்ந்த கதை கூட அப்படித்தான்.

Image result for time beats usain bolt

கார்ல் லூயிஸ் தடகளத்தை ஆண்ட பிறகு களத்திற்கு வந்த ‍ஹுசேன் போல்ட் ஜைமக்காவின் வீரர் அமெரிக்க, பிரிட்டன் வீரர்களை பின்னுக்குத் தள்ளி வெற்றிக் கொடி நாட்டி வந்தவர் உதிர்ந்து போன நட்சத்திரமானார் தடகளத்தில் இவர் ஓய்வு பெறுவேன் என்று சொன்ன அதே போட்டிகளில் புகழை ஈட்டாமலும் வீழ்ந்து போனார்.

பொதுவாகவே மாபெரும் நட்சத்திரங்களாகவே வளர்ந்தவர்கள் வீழ்ச்சிக்கு மது மாது சதி சூழ்ச்சி போன்ற காரணிகள் பெரும் பங்கு வகித்தாலும் உடலை வைத்து சாதிக்கின்ற உன்னதங்களுக்கு எல்லாமே ஒரு எல்லை இருக்கிறது . அதற்கும் மேல் அந்த தளர்வை சரிக்கட்ட முடியாமல் விலகவே வேண்டியதிருக்கிறது.

புரூஸ்லீ, ஜாக்கி சான், ஆர்னால்ட், சில்வர்ஸ்டன் ஸ்டாலோன், எல்லாருமே அப்படித்தான்

மைக்கேல் ஜாக்சன் போன்ற மாமேதைகள் கூட தனக்கு வயோதிகம் வந்து விடக் கூடாதே என்றுதான் ஸ்ட்ராய்டு ஊசிகள் போன்றவற்றை ஊக்கப்படுத்த போட்டுக் கொண்டு வாழ்விழந்த கதை இங்கு நிகழ்ந்ததே.

மேச்சேரி பகுதியைச் சார்ந்த மம்மட்டியான் என்ற வீர் தீர மாறு வேட வைராக்யக் காரனும் கடைசியில் ஒரு பெண் வசியத்தில் சிக்கி மாட்டிக் கொண்டு உயிரிழந்ததாக கதை சொல்லப்படுகிறது.

எல்லாவற்றையும் விட இயற்கைக்கு மாற்று மருந்து ஏதும் இல்லை. எல்லாரையும் எல்லாவற்றையும் எடுத்து தின்று கொண்டு, எடுத்து விழுங்கி விட்டு ஏப்பம் கூட விடாமல் அது பாட்டுக்கு சென்று கொண்டே இருக்கிறது. இருக்கும்

Image result for time beats usain bolt

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

1 comment: