Saturday, August 5, 2017

கருப்பு நிறத்தொரு பூனை : கவிஞர் தணிகை

கருப்பு நிறத்தொரு பூனை : கவிஞர் தணிகைகறுப்பு கருப்பு இரண்டுமே சரியான தமிழ் என்கிறது ஒரு அகராதி, எப்படி இரண்டும் ஒன்றாய் இருக்க முடியும் என எனக்குத் தோன்றவில்லை. நிறைய பேர் தமிழ் தெரிந்ததாகச் சொல்கிறார். ஆனால் முற்றிலும் அவர்களுக்கு மொழியை சரியாக கையாள உச்சரிக்கத் தெரியவில்லை.கமல் கூட தனது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அழாதே என்பதற்கு பதிலாக அழுகாதே  அழுகாதீர் என்று சொல்லாடல் செய்திருக்கிறார் அந்த உலக மகா கலைஞன். காய்கறிகள் போன்று உயிரற்ற பொருட்கள் அழுகிப் போவதையே அழுகிப் போவது எனச் சொல்ல வேண்டும். அழுது கண்ணீர் சிந்துவதை அழுவது, அழாதே என்றுதான் உச்சரிக்க வேண்டும்.

பிரயோஜனம் இது முழுத் தமிழ்ச் சொல் அல்ல. ஆனாலும் பயன்பாட்டில் இருக்கிறது அதை எத்தனை பேர் பிரயோஜனம் என்று சொல்கிறார்கள் எனக் கவனித்துப் பாருங்கள். கவிஞர் என சினிமாவுக்கு பாட்டெழுதி இன்று பிக்பாஸில் இருக்கும் சினேகன் கூட பிரோஜனம் எனவே சொல்லி இருந்தார்...மனோரமா, தேவதர்ஷினி, ஸ்ரீமன், போன்ற சினிமா நடிகர்கள் உச்சரித்ததைக் கேட்டுள்ளேன் பிரோஜனம் என்றே...

இப்போ நல்லா இருக்கீங்களா என்ற சொல்லுக்கு: நல்லாக்கிறீங்களா என்ற சொல்லாடல் எல்லா இடங்களிலும் கேட்க முடிகிறது செல்பேசி துரத்த...
சரி இதை எல்லாம் விடுங்க...காலம் மாறிப் போச்சு


எங்க வீட்டில் ஒரு கறுப்புப் பெண் பூனை 4 குட்டிகளை ஈன்றது. குட்டிகள் வளரும் வரை மிக கவனமாக பாலூட்டி கவனம் எடுத்து அவை காணமல் போனால் ஏங்கி ஏங்கி கத்தியபடியே நாள் கணக்கில் இருந்தது.

ஒரு மகன் பூனை நன்றாக வளர்ந்தவுடன் அதை எங்கோ கொண்டு சென்று விட்டு விட்டு இது மட்டும் திரும்பி வந்து வீட்டில் இருந்து கொண்டிருந்தது. அந்த குட்டி மகன் பூனையும் எப்படியோ திரும்பி வந்து கொண்டே இருந்தது. இது பொறுக்காத அந்த தாய்ப் பூனையும் கொண்டு சென்று விட்டு விடவே முயன்றது.

ஆனால் இப்போது அந்த குட்டி மகன்  வெள்ளை சாம்பல் நிறப் பூனை இருக்கும்போது அந்த தாய்க் கருப்பு பூனை வீட்டுள் வந்து சாப்பிடவே முடியாத அளவு இந்த மகன் பூனை அதை துரத்த ஆரம்பித்து விட்டது. அந்த தாய்ப் பூனையும் பயந்து கொண்டு வராமல் ஓட ஆரம்பித்துள்ளது. அவ்வப்போது தலையைக் காட்டி வருகிறது. அதன் கணவன் பூனையை சில வாரங்களாகவே காணவில்லை.

ஆக நான் சொல்ல வந்தது இந்த மகன் பூனைக்கும் தாய் பூனைக்கும் என்ன அப்படி ஒரு பாகம், பங்கு, எல்லைக்கோடு , வரக்கூடாது என்ற நிகழ்வுகள் நடந்திருக்கும் என்பதை எல்லாம் நம்மால் காணமுடிகிறது.

மிருகங்களுக்குள்ளேயே ஒரு வயிற்றுள் பெற்றதுக்குள்ளேயே தாய், மகவு உறவு இப்படி மாறுவதெனில் மனிதம் என்ன என்ன செய்யும் என நிகழ் காலம் சொல்கிறது.... மறுபடியும் அந்தக் கறுப்புத் தாய் பூனை முழுகாமல் இருக்கிறது  ஒரு ஆண்டுக்குள் 3 முறை நாலைந்து குட்டிகளைப் போட்டு விடுகிறது அந்தக் கருப்புப் பூனை.

ஒரு நாய் தோட்டத்துப் பக்கம் கட்டப்பட்டிருகிறது. நீர் வர ஆரம்பித்தால் குரல் கொடுக்கும், நீரை குடத்துக்கும் மேல் வழிந்து சென்றால் குரைக்கும், அந்த குழாய் இணைப்பை தொட்டியில் எடுத்துப் போடுவதற்குள் நிறைய முறை குறைக்கும்,  தண்ணீர் வந்தாலே அது முதல் தண்ணீர் நிற்கும் வரைல் சரியாக நீரை பிடிக்க வில்லை எனில் குரைத்த படியே இருக்கும்.

அப்படி விலங்குகளே அறிவு கொண்டு வாழ்கின்றன...மனிதர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் பிக் பாஸ் எனச் சொல்லும் மனிதர்கள் எல்லாம் காலத்தோடு போய்க் கொண்டே இருக்க...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Child And His Cat

2 comments:

  1. உண்மைதான் நண்பரே
    விலங்குகள் எல்லாம் அறிவோடுதான் வாழுகின்றன

    ReplyDelete