Monday, August 21, 2017

மயிரிழையில் உயிர் பிழைத்தோம்: கவிஞர் தணிகை

மயிரிழையில் உயிர் பிழைத்தோம்: கவிஞர் தணிகை

Related image

நூலிழையில் அந்த மிக நீளமான ட்ரக்கில் மோதியிருக்கும் எங்களது பேருந்து. அந்த பேருந்து ஓட்டுனருக்கு உரிய நேரத்தில் உயிர் காத்த செயலை செய்தமைக்காக நன்றி பாராட்டினேன். சாலை விதிகளை மதிக்காத அந்த ட்ரக் ஓட்டுனருக்கு தமிழ் தெரியாதிருந்த போதும் அனைவரும் பேருந்தை நிறுத்தி திட்டினர். நான் அவனுக்குத் தமிழேத் தெரியாது, விட்டுத்தள்ளுங்கள் என அறிவுறுத்தினேன்.அந்த ஓட்டுனர் ஒரு வடக்கத்திக்காரன்.

அது தேசிய நெடுஞ்சாலை காலையில் சேலம் செல்ல வேண்டிய மேட்டூர் சங்கமேஸ்வரா 3 ஜி பேருந்து காலையின் முதல் பயணத்தில் எப்போதும் போல கல்லூரி, மருத்துவமனை, பள்ளி செல்வார் பெரும்பாலானருடன் மிகவும் கட்டுப்பாட்டுடன் சென்று கொண்டிருந்தது.

நாங்கள்  அதாவது நான், டி.வி.எஸ் பணிக்கு செல்லும் நண்பர் சுரேஷ், சோனா பொறியியல் கல்லூரிக்குச் செல்லும் அபிசேக் ஓட்டுனரின் இருக்கைக்குப் பின் ஒரு வரிசை தள்ளி, அன்று சனிக்கிழமை எனவே பெண்கள் அந்த இருக்கையில் இல்லாததால் நாங்கள் அமர்ந்து கொண்டோம். 3 பேருமே சேலம் செல்ல வேண்டியவர்கள் .ஆனால் அன்று மட்டும் ஓட்டுனர் சரியாக செயல்படாதிருந்திருந்தால் முன்னால் அமர்ந்திருந்த  பெண்கள் ஏன் எங்கள் வரிசை மட்டுமல்ல மொத்த பேருந்துமே அதில் பயணம் செய்த அனைவருமே பெரும் விபத்தை சந்தித்திருப்போம்.

இப்போது நினைத்தாலும் அது பெரிய நிகழ்வாகவே படுகிறது. ஓட்டுனர் அவரது பணியைத் தானே செய்தார் , அது ஒரு சிறு நிகழ்வாகவே இருந்தது என்று ஒரு பக்கம் நினைத்தாலும்மயிரிழையில் அது சிறிது பிசகாகி இருந்தாலும் பெரும் விபத்தாய் முடிந்து எத்தனை பேர் இருந்திருப்போமோ? எத்தனை பேர் இறந்திருப்பாரோ, நல்ல வேளை ஒரு விபத்தை அந்த ஓட்டுனர் நிகழ விடாமல் அருமையாக சமாளித்து விட்டார். பேருந்தும் நல்ல நிலையில் இருந்ததால் சென்று அந்த ட்ரக்கில் மோதாமல் தப்பித்தது.

அது 6 மணிக்கு மேட்டூரிலிருந்து புறப்பட்டு சுமார். 7.30 மணிக்கு சேலம் பேருந்து நிலையம் அடையும் ட்ரிப். முதலில் ஒரு சின்ன யானை சடாரென  முன்னால் நின்றது அப்போதே எமது பேருந்து மறுபக்கம் மற்ற வாகனங்கள் எமது பேருந்தை முந்தி சென்ற போதும் அனுசரித்து சுதாரித்து மீண்டது.

அப்போதே இதென்னடா இன்று இப்படி என நினைத்தேன். ஆனால் சேலம் மிக அருகே நெருங்கிப் போகும்போது பேருந்து வெண்ணெங்கொடி முனியப்பன்ன் கோவிலருகே சென்று கொண்டிருக்க திடீரென ஒரு தொழிலகத்துக்கு பெரும் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் மூடாக்கு இல்லாத ஒரு திறந்த வெளி ட்ரக் மிக நீளமானது அது சுமார் 3 அல்லது 4 ட்ரக் நீளமிருக்கும் அளவுள்ளது, எந்தவித முன் எச்சரிக்கையுமின்றி முக்கிய சாலையில் வாகனம் வருகிறதா இல்லையா எனத் துளியும் பார்க்காத ஓட்டுனர் தமது விருப்பத்துக்கு அந்த மிக நீளமான ட்ரக்கை வேறொரு உள் சிறு பாதையிலிருந்து இந்த மெய்ன் சாலைக்குள் விட்டு வளைத்து செல்ல ஆரம்பித்தார்.

எங்கள் வாகனம் நல்ல கட்டுப்பாட்டில் வந்ததால் ஓட்டுனர் சமாளித்து அந்த நீளமான ட்ரக்கின் மேல் மோதி சேதமாகமால் உயிர் சேதமாகாமல் காத்து விட்டார். நிறுத்தி விட்டார் அசாதாரணமான திறமையின்மூலம்.
Related image



இந்திக்கார மலை மாடுகள் சாலை விதிகள் பற்றி எந்தவிதக் கவலையும் இல்லாமலே சாலைகளில் வாகனங்களை இயக்குகின்றன. அவனுக்கு என்ன ஏதோ நடந்து விட்டது என்று ஓடி விடுவான் அல்லது சரணடைந்து விடுவான் இந்த பேருந்தும் அதில் உள்ளோரும் அவர்தம் குடும்பங்களும் அப்பப்பா நிலைத்தாலும் பெருத்த சோகத்தை நினைக்கவும் முடியவில்லை.

அப்படித்தான் அன்று மாலை தொடர் வண்டியில் ரெயில்வேயில் பணி புரியும் 6 இளைஞர்கள் அனைவருமே .பி அல்லது வட நாட்டைச் சார்ந்தார் இந்தி பேசிக் கொண்டு எவர் இருக்கிறார் எவர் மேல் கை கால் படுகிறது என்ற உணர்வுமே இன்றி பயணம் செய்வதும், ...எவர் இருக்கிறார் அது பொது இடம் என்ற நினைவே இன்றி  இருப்பதும்...தமிழகத்தில் மேற்கு வங்கம் .பி , பீஹார்  என்ற தொலை தூர மாநிலங்களில் இருந்து எல்லாம் நமது கடைகள், தொழிலகங்கள், போக்குவரத்து எல்லா இடங்களிலுமே அவர்களே குறைவான ஊதியம் என்ற பேரில் ஆக்ரமித்திருக்க இந்தியா ஒரே ஒருமைப்பாடுள்ள நாடுதான் என காட்சிகள் தென்பட ஆனால் இங்கிருப்போர்க்கே நீர் இல்லாமல் தவிக்க...மண்ணின் மைந்தர்கள் கொள்கை இனி வரலாமோ என்ற பார்வைகள்...

Image result for north south differences of India

அவர்களுக்கு வாடகை வீடமர்த்தினால் தூயமை இல்லாமை, ஆங்காங்கே பான் பராக் எச்சில் உமிழ்ந்தபடி இருக்க இப்படியே நம்மை வடக்கும் தெற்குமாக இந்தியா...

தமிழகம், கேரளம், ஆந்திரம், பாண்டி, கர்நாடகா சற்று  வடக்குச் சார இவற்றுக்கு மாறாக மற்ற மாநிலங்கள்...


Related image

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

4 comments:

  1. ஓட்டுநர் பாராட்டிற்குரியவர்
    தாங்களும் நண்பர்களும் விபத்தில் சிக்காமல் தப்பித்தது அறிந்து மகிழ்கின்றேன் நண்பரே

    ReplyDelete
  2. விபத்தில் சிக்காமல் நீங்க நீங்க பாதுகாக்கபட்டது மிகவும் மகிழ்சி அடைகிறேன்.

    ReplyDelete