Saturday, August 26, 2017

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் கவிஞர் தணிகையின் சிற்றுரை.

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் கவிஞர் தணிகையின் சிற்றுரை.

Image result for vivekananda in chicago speech


வீட்டிலும் , சொந்த ஊரிலும் தவிர இறைவாக்கினர் வேறெங்கும் மதிப்புப் பெறுவர் என்றொரு வரி பைபிளில் இருக்கிறது.  ஆனால் எனது இந்த உரை வீச்சு நிகழ்வை ஏற்படுத்தி தந்ததன் மூலம் அது போன்றக் குறை நீங்கி விட்டது. இதன் முழு முதல் காரணம் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.ஜா.பேபிஜான் அவர்களையே சாரும்.

Image result for vinayaka mission's sankarachariyar dental college


சர்வ சமய ஆராய்ச்சிக் கழகத்தில் விவேகானந்தர் ஒரு ஓரமாய் அமர்ந்தபடி கடைசியாக பேச அழைக்கப்பட்ட போது சிகாகோவில் ஓரு சில நிமிடங்கள் மட்டுமே பேசினார் ஆனால் அது வரலாற்றுப் பதிவாகிவிட்டது. அதன் பின் அவர் எப்போது பேசுவார் என அங்கிருந்த அறிஞர் கூட்டமே எதிர்பார்த்தது என்கிறது காலம்.

அது நடந்தது: 1893 செப்டம்பர் 11. நான் இந்தக் கல்லூரியில் பேசியது ஆகஸ்ட் 24  2017. நான் அந்த அளவு பெரிய மனிதரில்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். என்றாலும் ஒரு முகாம் அலுவலராக பணி செய்யும் கல்லூரியில் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், உதவி முதல்வர்கள், கல்லூரியின் முதல்வர், நிறுவனர் குடும்பம் சார்ந்தவர், முதுகலை இளங்கலை பல் மருத்துவ நிபுணர்கள் முன்னிலையில் சுதந்திரம் பெற்ற 70 ஆம் ஆண்டு மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்க 50 ஆம் ஆண்டு நிறைவுச் சொற்பொழிவு சிறிது நேரம் ஆற்றிய நிறைவு கிடைத்தது.

நான் ஏற்கெனவே பல கல்லூரிகளில் பல்வேறுபட்ட மேடைகளில் நாடெங்கும் உரை வீச்சு செய்தவன் என்பது எனை அறிந்த அனைவரும் அறிந்ததே. ஏன் இந்த நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாய் மேதகு பி.என்.பகவதி இருந்த போது ஹைத்ராபாத்தில் 1988 89 ல் அப்போதைய ஆந்திரப் பிரதேச சட்டமன்ற வளாகத்தின் ஜூபிலில் ஹாலில் அவர் உரையாற்றிய மேடையில் நானும்    நிமிடங்கள் பல‌ ஆங்கிலத்தில் உரையாற்றும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன் அதுவும் திடீரென கிடைத்த வாய்ப்புதான். இதுவும் திடீரென கிடைத்த வாய்ப்புதான்.

 நான் இப்போதெல்லாம் அல்ல அல்ல கடந்த பல்லாண்டுகளாகவே பெரிதும் எதையுமே எதிர்பார்க்காத மனநிலைக்கு வந்து விட்டேன். ஏன் எனில் நமது இந்தியத் தாய்த் திரு நாட்டில் எதுவும் நடக்கும் என்பதாலும் எதுவும் எப்போது வேண்டுமானாலும் நடக்காதும் போய்விடும் என்பதாலும்.

 எனது சிறு வயதில் ஒரு சாணக்ய சபதம் என்ற நாடகத்தில் எனக்கு தனநந்தன் வேடம் சிறுவன் நந்தர்களின் வம்சத்துக் கடைசிக் குலக் கொழுந்து. மாபெரும் நாடகம். சிவாஜி கணேசன் நாடகத்திற்கு தலைமையேற்று நடத்துவதாக ஏற்பாடு. கடைசியாக சிவாஜி கணேசன் வரவில்லை நாடகமும் அப்போது அரங்கேறவில்லை. அப்போதிருந்தே எனக்கு இது போன்ற மேடை நிகழ்வெல்லாம் கடைசி நிமிட மாறுதலுக்குட்பட்டவை என்பது எனக்கு நன்றாகத் தெரியும் அப்போது எனது வயது சுமார் 12 இருக்கலாம். இப்போது 55 வயதுடன் நான்.

உரை சிறு நேரமே என்றாலும் முக்கியக் கருப்பொருளுடன் கனமாகவே இருந்தது எனக் கருதுகிறேன். திருப்பூர் குமரன், லால்பகதூர் ,காமராஜர், பகத் சிங், சுபாஷ் சந்திரபோஷ், மகாத்மா ,கோகலே, டால்ஸ்டாய், ரஸ்கின், தாகூர், இப்படிப்பட்ட மாமனிதர் அனைவருமே இருந்தார்கள் குறிப்பிடப்பட்டார்கள். டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் சுதந்திரம், விடுதலை, சாதனை பற்றிய சொல்லாடலுடன் உரையைத் துவக்கினேன். மகாத்மாவின் 3 குரங்கு பொம்மை, மதுவே எல்லா பாவங்களுக்கும் அடிப்படை உதாரணங்களுடன் முடித்தேன் இடையே சத்யாக்ரகம், சகிப்புத் தன்மை விதைகள் ஆங்காங்கே தூவப்பட்டன.

யாவரும் எதிர்பார்க்கும் முன்பே முடித்து விட்டேன் . அப்போது எனக்கு ஜீவானந்தம் நினைவில் வந்தார், ஒரு சில நிமிடங்கள் பேசுவதாக வாய்ப்பளிக்கப்பட்டு சில மணி நேரம் அவரது உரையை கேட்டு மயங்கி நிற்கும் சபை..,

ட்விட்டர், ட்விட்டர் லாங், முக நூல் கூகுள் ப்ளஸ் வலைப்பூ பொது சந்திப்பு சுவர் எழுத்துகள் போன்ற எல்லா நவீன மின் ஊடகங்களிலும் பல்வேறு பட்ட கால அளவுகளுடன் பதிவு அளவுகளுடன் எழுதப் பழக்கப்பட்ட எனக்கு ட்விட்டரில் எழுதுவதும்  கை வருகிறது, வலைப்பூவிலும் என்னால் எழுத முடிகிறது, சுவர் எழுத்திலும் எழுத முடிகிறது. அது போல இந்தக் குறும்பேச்சு வழியாகவும் அவர்களைத் தொட முடிந்தது பற்றி எனக்கு மகிழ்வே. இப்படிப்பட்ட அனுபவங்களை பயிற்சிகளை தந்ததற்கு நாம் நவீன அறிவியல் ஊடகங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

ஏன் எனில் தேசிய சேவை முகாம்களிலும் மற்ற கல்லூரிகளிலும் என்னை சிறப்பு பேச்சாளராக அழைக்கும் இடங்களிலும் குறைந்தது ஒரு மணி அல்லது அதற்கும் மேல் எவ்வளவு மணி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என வேறு எந்தப் பேச்சாளரையும் என்னுடன் சேர்க்காமல் எனக்கு களம் அமைத்து தந்து விடுவார்கள் நானும் பேசிக் கொண்டே செல்வேன் சில மணிகளாவது. ஆனால் இது நிமிடத் துளிகளை கணக்குப் பார்க்கும் அரிய அவை.
Image result for vinayaka mission's sankarachariyar dental college



அது அங்கு காட்டாறு போன்ற பொங்கிப் பிரவாகித்து ஓடும் பேச்சு. இது கட்டுப்பாடட‌ங்கிய பேச்சு.

நேரக் கட்டுப்பாடு அவசியம் தான். அனைவருமே நேரத்தை கண்ணாக பொன்னாக பார்க்கும் அவை= சபை அது.

முன்னதாக பேராசிரியர் டாக்டர் ரமேஷ் அவர்கள் மருத்துவ வல்லுனர்களை கூகுள் ஸ்காலர், ஸ்கோப் அப், ஆர்சிட் போன்ற தளங்களை எப்படி பயன்படுத்துவது என்ற ஒரு அரிய தெளிவான உரை கொடுத்தார், அவரது துணைவியார் மாயாவும் பேசினார்.

பல் அறுவை சிகிச்சைத் துறையின் தலைவர் டாக்டர் ரீனா ஜான் அவர்கள் வரவேற்புரை ஆற்றி சுதந்திரம் பற்றி விடுதலை பற்றி தாகூர் மை பிரேயர் பற்றிய வரிகளைக் குறிப்பிட்டார்.

கல்லூரி முதல்வர் டாக்டர் பேபி ஜான் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து தமது வழக்கம் போன்ற நடையுடன் சிறு நகைச்சுவைகளை  தூவி/ பேசி ஒரு மகிழ்வான சூழலை ஏற்படுத்தினார். மேலும் எனது உரைக்கு கிடைத்த குறைவான கால அளவு அதைவிடக் குறைவான தயாரிப்பு நேரம் பற்றி எல்லாம் சொல்லி நெகிழ வைத்தார்.

அது ஒரு பல் மருத்துவ‌ இதழியல் சார்ந்த  ஜர்னல் கிளப் மீட்டிங். அதில் என் போன்ற ஜர்னலிஸ்ட்டுக்கும் இடம் கிடைத்தது பற்றி மகிழ்வே.

நன்றிகளும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Related image





1 comment: