தமிழருவி மணியனைப் பற்றி நானும் சொல்லத்தான் வேண்டும்: கவிஞர் தணிகை
பொது வாழ்வை நாம் சரியாக செய்திருந்தால் அது நம்மை விட்டு விலகுவதேயில்லை தமிழருவி மணியன். நன்றாக அருவியாகப் பேசுவார். இவரின் பேச்சருவியோடுதான் எனது முதல் புத்தகம் மறுபடியும் பூக்கும் என்ற கவிதை நூல் என்னை கவிஞராக அடையாளப்படுத்திய காலத்தில் இவர் மேட்டூர் தமிழ் சங்கத்துக்கு வந்திருந்தார். அப்போது வெளியிடப்பட்டது.அதற்கு நான் முன் முயற்சி எடுக்காமலேயே ,ஏன் சொல்லப் போனால் கேட்காமலேயே தமிழறினர் கோ.பெ.நா மேட்டூர் முதிய தமிழர் அதை மேட்டூர் தமிழ் சங்கத்தில் வெளியிட ஆவன செய்தார். அது வேறு ஆனால் தமிழருவி மணியன் பொது வாழ்வில்...
இவர் பொது வாழ்வில் என்ன சாதித்தார் என்பது பெரிதாக இல்லை. சில கட்சிகளை இணைக்கிறேன் என முயன்றதும், காந்திய மக்கள் இயக்கம் நடத்தியதும் அதில் செயலாளராக லாயர் தங்கவேல் ஈரோடு இருந்ததும் நாமறிந்ததே.
ஆனால் இந்த ஈரோடு லாயர் தங்கவேல் போன்றோர் எமது இயக்கத்தில் பின் வந்து சேர்ந்தவர். அதாவது : நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம் என்ற இயக்கத்தில் நாங்கள் என்றால் நிறுவனர் கொ.வேலாயுதம், அடியேன், சசிபெருமாள், செம்முனி,சின்ன பையன் போன்றோர் இயங்கும்போதெல்லாமில்லை.இதில் சசிபெருமாளும், சின்ன பையனும் இப்போது உயிருடன் இல்லை.
அது தீவிர வாத இயக்கம் போன்று இருக்கிறது என காந்திய வழியில் ஊருக்கு பத்துப் பேர் இயக்கம் என்ற இயக்கத்தை அடைந்த போது வெகுகாலம் கழித்து தங்கவேல் வழக்கறிஞர் வந்து சேர்ந்தார். பின் இவருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டது.
ஆனால் இயக்கம் கட்சி என்றெல்லாம் பேசி விட்டு தமிழருவி மணியனுடன் இணைந்து செயல்பட்டார். பின் தமிழருவி மணியனிடமிருந்தும் பிணக்கு கொண்டு பிரிந்தார்.
தமிழருவி மணியன் சசிபெருமாள் சென்னையில் உண்ணா விரதம் இருந்த போது ஆதரித்து சாலையில் பேசிய ஒளிப்பதிவு நன்றாகவே இருந்தது. நன்றாக பேசுவார். மற்றபடி பொதுவாழ்வில் புத்தகம் எழுதியிருக்கிறார்
காங்கிரஸ் கட்சி, ஜனதா தளம், ஜனதா கட்சி, லோக் சக்தி, தமிழ் மாநிலக் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமை, அதன் பின் காந்திய மக்கள் கட்சி அல்லது காந்திய மக்கள் இயக்கம்.
நாங்கள் கூட : நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம், தமிழக இலட்சியக் குடும்பங்கள் என்றெல்லாம் செய்து பார்த்தோம். சசிபெருமாளை தலைவராக்கிப் பார்த்தோம், சின்ன பையனை சேலம் வடக்குத் தொகுதி மது விலக்கு வேட்பாளராக 2011ல் நிறுத்தி 800+ ஓட்டு வாங்கி கட்டிய பிணைத் தொகையை இழந்தோம்... இந்த இருவருமே இன்று இல்லை.
இப்போதும் கூட நாமும் ஒரு சேகுவேராவாக, லெனினாக, ஹோசிமின்னாக, மாவோவாக எல்லாம் மலர வேண்டும் என்றெல்லாம் எண்ணுகிறோம்.இந்தியாவில் முடியவில்லை. நமக்கு அத்ந அளவு தகுதி இல்லை என்றே எண்ணுகிறோம். அல்லது இந்தியாவில் கட்சிதான் பெரிது.
ஆனால் அதெல்லாம் கூடி வருமா? எனவே...
சாப்பாட்டு குடிநீருடன் பணிக்கு சென்று பயன்பட முயன்று வருகிறேன். எல்லா இயக்க பணியும் நிறுத்தி. ஆனாலும் இன்றும் பொது மக்கள் குறை தீர்க்கும் பிரிவு என்றும், ஹெல்ப் டெஸ்க் என்றும் முகாம் அலுவலர் என்றெல்லாம் பெயருடன் இருந்தாலும் மக்கள் சேவை தொடர்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
சேவையாளருக்கு ஓய்வு இல்லை. கடைசி மூச்சு வரை.
இலட்சங்களில் வருவாய் ஈட்டுவாரைப் பார்த்து மலைப்பு ஏற்படுகிறது.ஆனால் இலட்சியமும் இலட்சமும் இணைவதில்லை என்ற நேர்த்தியான பதில் எப்போதும் இருக்கிறது. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் வேறு வேறு.
கோடிகளில் கார்கள், நாய்க்கு மின் விசிறி, ஏ.சி, நாய்க்கு உடலுக்கு ஏதாவது என்றால் உடனே மருத்துவ உதவி ஆனால்....மனிதர்கள் நாயை விட கேவலமாக வாழ்நிலையில் இருப்பதை மறுப்பதற்கில்லை.
உலகில் இரண்டே இரண்டு சாதி: சுரண்டப் படுவோர், சுரண்டுவோர்,
ஏமாறுவோர், ஏமாற்றுவோர், இருப்போர் இல்லாதோர். என எப்படி பார்த்தாலும் இதில் நான் சுரண்டுப் படுவோர், ஏமாறுவோர், இல்லாதோர் இடத்தில் தான் இருக்கிறேன்.
எனவே எனக்கு அவ்வப்போது மனத் தொய்வு ஏற்பட்டாலும் காலம் தேற்றி விடுகிறது மாமனிதர்கள் வாழ்க்கை மூலமாக. உலகை ஆண்டவர்கள் எல்லாம் செல்வத்தில் உயர்ந்திருந்தார் இல்லை.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
தமிழருவி மணியன் அதில் எங்கிருந்திருக்கிறார் என்பதற்கு நான் ஒரு பைசா கூட இலவசமாகப் பெற்றதில்லை எனச் சொல்லி இருக்கிறார் விவேக் அளித்த பேனாவைக் கூட பெற்றுக் கொள்ளவில்லை என்றெல்லாம் படித்தேன். இருந்தாலும் தமிழருவி மணியன் மேல் எனக்கு பெரிய பற்றெல்லாம் வரவே இல்லை. ஏதோ ஒன்று இடிக்கிறது அந்தக் கர கர குரலுடன்...உண்மை இருக்கும் இடத்தில் விரக்தி வர வாய்ப்பு இல்லை.