Tuesday, January 24, 2017

இயக்கமுறைமைகளும் தலைமையும் இல்லாத உலக சாதனை: கவிஞர் தணிகை

இயக்கமுறைமைகளும் தலைமையும் இல்லாத உலக சாதனை: கவிஞர் தணிகைImage result for 67th republic day




மாபெரும் உலக சாதனையில் கடைசியில் ஒரு களங்கம், மாபெரும் வெண் சுவற்றில் ஒரு கரும்புள்ளி இட்டாற்போல,ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு கலந்தாற்போல‌

அரசு ஆணையிட காவலர்கள் அடிக்காதிருந்திருக்கலாம், அடக்காதிருந்திருக்கலாம்,கடலில் மூழ்கி இறக்கவும் தயார் உங்களிடம் சிக்கி அடி வாங்கி சாகத் தயாராக இல்லை எனச் சொல்லுமளவு, செயல்படுமளவு நிலை செல்லாதிருந்திருக்கலாம்...

சரியான தலைமையும், இயக்கமும் வழி நடத்தாததன் ஒரு காரணம்...ஆனால் அப்படி வழி நடத்தி இருந்திருந்தால் இந்த அளவு ஜனத் திரள் கூடி இருக்குமா என்பதும் சொல்ல முடியாததே..

எப்படியோ கடைசியில் எல்லா விதமான சாயமும் பூசப்பட்டு இந்த உலகே வியந்து பார்த்த இளைஞர் திருவிழா இனிதே முடியாமல் தீப்பொறிகளுடன் உறவாடிய நெருப்பு அணைந்து போனது தற்போதைக்கு அது நீறு பூத்த நெருப்பாக இருந்த போதும்...

இதனிடையே ஜல்லிக்கட்டின் மூலம் 3 பேர் இறந்து விட்ட தகவலும், சுமார் 30 பேருக்கும் மேல் காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் செய்தி.
Related image


ஹிப் ஹாப் தமிழன் என்னும் ஆதி அதிக பட்சமாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது. லாரன்ஸ், சமுத்திரக் கனி போன்றோர் நன்கு ஒத்துழைத்துள்ளனர். ஏன் தங்கர்பச்சன், சகாயம் ஐ.ஏ.எஸ் போன்ற பிரபலங்கள் கூட பிரவேசித்துள்ளனர் ஜனத்திரள் இருக்கும் இடத்திற்கு.

அது ஏனோ இந்த நாட்டில் மட்டும் எந்த வித மக்கள் சக்தியும் எடுபடாமல் போய் விடுகிறது. அதற்குள் புகுந்து ஆயிரம் வகையான உட்பூசல்களை திட்டமிட்டு புகுத்தி விடுகிறார்கள் கட்சி, சாதி, மதம் என்றெல்லாம்...எல்லாமே வழக்கப்படி

குடி அரசு தினம் கொண்டாட, அதுவும் இம்முறை கடற்கரை சாலையில் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் கொடியேற்ற ஏதுவாக மாணவர் போராட்டம் கலைக்கப்பட்டு ஒத்திகை,அணிவகுப்புக்கான இடம் தயாராக்கப்பட்டிருக்கிறது

வழக்கம் போல கட்சிகள் ஒன்றை ஒன்று குறை கூறிக் கொண்டே இருக்கின்றன.

ஒரு பெரும் வரலாறு கடந்து போய் விட்டது பெரும் சாதனையாக இருந்த போதும் பெரும் விளைவை ஏற்படுத்தாமல்

Related image

பீட்டா பல நூறு கோடி பணத்தை கைமாற்றி இருப்பதாக பேச்சு அடிபட்டது.
வழக்கம் போல நீதிமன்றமும், அரசுமே எல்லாவற்றையும் தீர்மானிக்க மக்கள் சக்தி அதுவும் மாணவ சக்தி ஒரு திரும்பிச் செல்லும் அலையைப் போல அடங்காவிட்டாலும் மறைந்து நிற்கிறது...

தேர்தலும், வணிகமும் கட்சியும் அதிகாரமும் மறுபடியும் வென்று விட்டதாக காட்சியளிக்கின்றன.

மறுபடியும் ஒரு குடியரசு தினவிழா, குடி அரசு தினவிழா. அரசு விடுமுறை, 67 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவாக...இப்படித்தான் போயிற்று சசிபெருமாள் வாழ்வும்....

Related image


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. மாணவர்களின் மகத்தானப் போராட்டம் வென்றிருக்கிறது
    கலவரங்களுக்கு காவல்துறையினரே முழுப்பொறுப்பு ஏற்கவேண்டும்
    உலகே நம் மாணவர் போராட்டம் கண்டு வியப்பில் ஆழ்ந்திருக்க,
    நம் காவலர்களின் செயல் கண்டு வேதனைப் படுகிறது

    ReplyDelete