ராதா கிருஷ்ணன் பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக: கவிஞர் தணிகை
தங்கராஜ் என்னும் கால் ஊனமான வாடகைக் கார் ஓட்டுனராக பார்த்திபன் வந்து நமக்கு ஒரு படத்தை தந்திருக்கிறார். தம்பி ராமய்யா உடன் பணி புரியும் வாடகைக்கார் ஓட்டுனர். கெவின் பாக்யராஜ் மகன் சாந்தனு ஒரு என் ஆர் ஐ? (No he is a foreigner) இளைனர் தமிழகத்துக்கு பல காரணங்களுக்காக இந்தியா தமிழ்நாடு வந்துள்ளவர். தங்கராஜ் மனைவியாக மோகினி பார்வதி நாயர் படம் முழுக்கத் தெரிகிறார் பளிச்சென அவரை வைத்துத் தான் கதை பின்னப்பட்டிருக்கிறது.கெவினுக்கும் மோகினிக்கும் உள்ள ஈர்ப்பு கதையை நகர்த்துகிறது
கம்பி மேல் , அல்லது கயிற்றின் மேல் நடப்பது போன்ற பேலன்சிங் ஆன கதை.கொஞ்சம் சிறுவர் சிறுமியர் எல்லாருடனும் சேர்ந்து பார்க்க முடியாத கதை திரைக்கதை. குரு பாக்யராஜுக்கும் இவருக்கும் கதை திரைக்கதை அமைப்பது என்பது கை வந்த கலை.
கொஞ்சம் 7 ஆவது நாட்கள் (பாக்யராஜ்), கொஞ்சம் கன்னிப் பருவத்திலே(பால குரு) போல கொண்டு வந்து, அதன் பின் திரைக்கதை மூலம் படத்தை எடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.
விரல் விட்டு எண்ணக் கூடிய பாத்திரங்கள், வாடகைக் கார், ஒரு பங்களா, கொஞ்சம் அவுட்டோர் அவ்வளவுதான் அதிலேயே படம் முடிக்கப் பட்டு விட்டது.15 பொங்கலன்று வெளி வந்த இந்தப் படத்தை உடனேப் பார்த்து விட்டு எனக்கும் முன்பே ஒரு சிலர் எழுதி விட்டனர். எனினும் எனது பங்கை நான் ஆற்றியே ஆக வேண்டும்.
தினமும் சேலம் ரெயில்வே நிலையத்தில் பார்த்திபனின் குரல் துரத்தியபடியே இருந்தது கோடிட்ட இடங்களை நிரப்புவது பற்றி 15 விநாடிகளுக்குள் சொல்ல வேண்டும், இப்போதே 14 விநாடி முடிந்து விட்டது மிச்சமிருக்கும் ஒரு விநாடியில் சொல்ல வேண்டுமானால் படத்தைப் பாருங்கள் என்றும், இங்கு ரெயில்வே நிலையத்தில் கோடிட்ட இடங்களை ரயில் வந்து நிரப்புவது போல நீங்களும் தியேட்டரை வந்து நிரப்புங்கள், ஒரு டிக்கட் வாங்கினால் ஒரு ரயிலே ஃபிரி (இலவசம்) என்பது போல இருக்கும் என்றெல்லாம் தன் குரலில் பேசியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் விஜய் மூன்றெழுத்து, வெற்றி மூன்றெழுத்து என பைரவா மூன்று எழுத்துக்கும் பிறகு தம் படத்தை வெளியிடப் போவதாக சொல்லி பேசினார்.
செலவு குறைவான படம்தான். தம் குருநாதரின் பையனை நாயகனாக வைத்தே கதாநாயகன் செலவைக் குறைத்துள்ளார். ,குறைவான பிரபலமான நடிகரை வைத்தே படம் ரோல் ஓவராகி உள்ளது.வசனம் நன்றாக உள்ளது என்றே சொல்ல வேண்டும் இரட்டை அர்த்தம் இருந்த போதிலும். ஆனால் எல்லாவற்றிற்கும் பாலுணர்வு அடிப்படையாக இருப்பதால் படம் ஏ சான்றிதழ் பெற வேண்டிய படமாகிறது.
என்ன தமிழில் சொல்லப்பட்டிருப்பதால் கொஞ்சம் நாசூக்காக கையாளப்பட்டு சொல்லப்பட்டிருக்கிறது . இதுவே இந்தி, மலையாளம், ஆங்கிலம் அல்லது பிற மொழி அல்லது பிற நாட்டு அல்லது பிற தேசத்து பிரதேசத்துப் படமாக இருந்திருந்தால் இன்னும் வெளிப்படையாக காட்சிகள் நகர்ந்திருக்கும்.
ஆனால் கரு என்னவோ , பணக்காரர்கள், விமானத்தில் பறப்பவர்கள் அவர்களுக்கு தகுதியான அளவில் கள்ளத்தனம் செய்யும்போது வாடகைக் கார் ஓட்டுனர்கள் தாம் முன்னேற கொஞ்சமாவது பணம் சம்பாதித்து செட்டிலாக கொஞ்சமாவது கள்ளத்தனம் செய்யக் கூடாதா அது தவறா என்ற கெள்விகள்.. பார்ப்பவரை நேர் மறையான எண்ணம் விட்டு எதிமறையாக இன்றைய உலகில் வாழ வேண்டுமானால் சம்பாதிக்க வேண்டுமானால் இது போல எல்லாம் செய்யலாம் என்று சொல்லி விட்டு, ஆனால் பொண்டாட்டி விரதம்,பத்தினி விரதன் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். கோடிட்ட இடத்தை நம்மையே நிரப்பிக் கொள்ளச் சொல்லி.
அதாவது இவர்கள் நடிப்பை நம்பி இவர்களை கணவன் மனைவியாக நினைக்கும் கெவின் என்னும் இளைஞர் அடுத்தவர் மனைவி ஆனாலும் பார்வதி நாயர் ஏற்றிருக்கும் பாத்திரமான மோகினியை மோகிக்கிறார். ஏன் தம்முடன் வந்தால் மனைவியாகவும் ஏற்க தீர்மானிக்கிறார். இதை தவறு என நீங்கள் கோடிட்ட இடத்தை நிரப்பச் சொல்லி இருக்கிறார் ஒரு பக்கம்,
ஆனால் அந்த இளைஞர் தம் நாடு திரும்பியதும் தமது செயலுக்கு பாவ மன்னிப்பு கேட்கிறார்.ஆனால் இங்கே பாலியல் தொழில் செய்து வரும் மோகினியும் வாடகைக் கார் ஓட்டுனராக இருந்து வரும் தங்கராஜும் தமது திட்டத்தின் பலனாக கிடைத்த பணத்தை பரிசை கிடைத்த வாழ்வை ஏற்று மகிழத் தயாராய் இருக்கிறார்கள். அதிலும் பாலியல் தொழில் புரியும் மோகினியே பரவாயில்லை பணத்துக்காக செய்த போதும் தமது தொழில் தர்மம் விட்டு வெளிவராமல் நடித்த புனிதத்தில் ஒரு ஒட்டுதல் இருக்கிறது என தமது செயல்கள் தமக்கு ஒரு வாழ்தலின் பொருள் கற்பித்தமைக்காக பொருளை பணத்தைக் கூட விட்டுத் தருகிறார்
ஆனால் இந்த ஓட்டுனர் தங்கராஜ் பாத்திரம் தமது மனைவிக்கு துரோகம் செய்யமாட்டேன் என்றும், அதே சமயம் எந்த மனிதரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறேன் என்னும் பச்சோந்தி பாத்திரம்...
நிறைய கோணங்களில் இந்த கோடிட்ட இடங்களை நிரப்பலாம் எல்லா விடையுமே சரியாக இருக்கும். இது மட்டுமே சரியான விடை என்றெல்லாம் சொல்லி விட முடியாது....ஒரு பார்த்திபன் படம், உள்ளே வெளியே போல...
எந்த அளவு வெற்றியுறும் என்று சொல்வதற்கில்லை.
ஒரு படம் பார்த்த உணர்வு இருக்கிறது ஆனாலும் பாராட்டும்படியாக இல்லை. ஏதோ ஒரு நெருடல். எதையும் தெளிவாக சொல்லாமல் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்தபடி...தெளிவு படுத்தாத படம். உண்மையில் அது ஒரு தெளிவுக்கு வராத விவாதத்துக்குரிய கருப்பொருள் கூட...அது பற்றி பேசியுள்ளது...முடிவுகள் மாறிக் கொண்டே இருப்பது காலத்திற்கேற்ப, நாடு, மொழி, பிரதேசத்திற்கேற்ப சட்டம், நீதி ஒழுக்கம் மாறுபடுவது போல...
நூற்றுக்கு 40 கொடுக்கலாம்
மறுபடியும் பூக்கும் வரை:
கவிஞர் தணிகை

அருமையான விமர்சனம்
ReplyDeleteநன்றி நண்பரே
thanks sir vanakkam.
DeleteMK CINEMA இது நமது சேனல் இதை SUBSCRIBE மற்றும் ஷேர் செய்யுங்கள் நண்பர்களே.
ReplyDeleteமேலும் பலதரப்பட்ட சுய தொழில் இலவச பயிற்சி வகுப்புகளை இங்கு அறிமுகம் செய்ய இருக்கிறோம்.
நீங்கள் நமது சேனலை இது போன்று லைக் ஷேர் செய்தால் மேலும் மேலும் நாங்கள் விடீயோக்கள் போடுவதற்கு எங்களை ஊக்கப்படுத்தி. மேலும் எங்களை சிறப்பாக விடீயோக்கள் பதிவிடுவதற்கு உதவும் நண்பர்களே ..
நிறை மற்றும் குறைகள் இருப்பின் கமெண்ட் இல் தெரியப்படுத்துங்கள்.உங்களது கமெண்ட்கள் வரவேற்கப்படுகிறது .
வாழ்க தமிழ் வளர்க தமிழ் .
வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்
நமது MK சினிமா பக்கத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யுங்கள்.
https://www.facebook.com/Mkcinema-298392973889075/app/212104595551052/
thanks Praveenkumar Kumar. vanakkam. When time permits I will do as per your wish.pl.keep contact
Delete