ஆங்கிலப் புத்தாண்டான 2017: கவிஞர் தணிகை
வாழ்த்துகள். வணக்கங்கள்,நன்றிகள். சென்ற வருடத்திற்கும் இன்று முதல் நாளில் அடி எடுத்து வைத்துள்ள 2017ம் ஆண்டுக்கும் அதில் எல்லாம் வேறுபாடு இல்லை. ஆனால் இது கிரிகோரியன் ஆண்டு, கிரேக்க ஆண்டு, ரோமானிய ஆண்டு இப்படி பல வகையிலும் படிப்படியாக காலப் போக்கில் திருத்தங்கள் செய்யப்பட்டு மனித குலத்தின் கணக்கிற்காக விளங்கி இப்போது பெரும்பான்மையான மக்களால் ஆங்கிலப் புத்தாண்டு என அழைக்கப்படுகிறது.
இதில் உள்ள ஜூலை மாதம் ஜீலியஸ் சீசரைக் குறிப்பது,ஆகஸ்ட் அகஸ்டஸ் சீசரைக் குறிப்பது,இப்படி ஒவ்வொரு மாதங்களின் பேருமே ஒரு காரணம் கொண்டிருப்பது. பிப்ரவரி மாதம் 28 29 என லீப்பாக்கியது யாவும் மனிதக் கணக்கீட்டிற்கு, மேலும் இந்த ஆண்டு ஒரு வினாடி தாமதமாக பிறந்தது என்ற கணக்குகளும்...வாரத்தின் நாட்கள் சூரியக் குடும்பத்தின் கோள்களை நினைவில் கொண்டு இருப்பதும் யாவருக்கும் தெரியும் எனவே இனி இதை ஆங்கிலப் புத்தாண்டு எனச் சொல்வதெல்லாம் சரியா?
சரியாக தெரியாதோர் மேலை நாடு என்றாலே அந்தக் காலத்தில் ஆங்கிலேயர் என்றே நினைத்து விட்டார்கள். ஆனால் தமிழ் பாரம்பரியம் வழி வழியாக யவனம், கிரேக்கம், போர்ச்சுகீசியம், ஆங்கிலம், டச்சு, இப்படி பலவித வர்த்தக போக்குவரத்து நிலைகளைக் கொண்டிருந்தது.
ஆனால் ஐரோப்பியத்தில் எண்ணற்ற நாடுகள் ஐரோப்பிய யூனியனாக யூரோவை தற்போது நாணயமாகக் கொண்டு அதில் தான் எத்தனை நாடுகள் ஜெர்மானியம், நார்வே ஸ்வீடன், டச்சு எனப்படும் நெதர்லாந்து, பிரிட்டிஷ் எனப்படும் இங்கிலாந்து,பிரெஞ்சுக்காரர் எனப்படும் பிரான்ஸ் தேசத்தார் இப்படி ஆனால் இந்த இங்கிலாந்து நாட்டார் பெரும்பாலான நாடுகளை தமது அடிமை நாடுகளாய் காலனி ஆதிக்கமாய் கொண்டிருந்ததும் சூரியன் எமைக் கேட்டுத்தான் எழும் விழும் என்றதும் துப்பாக்கி வெடிமருந்து கலாச்சார யுக்திகளைக் கொண்டும் பிரித்தாளும் சூழ்ச்சி குயுக்தி கொண்டும் ஆண்டு வந்தது.
அதன் பின் அமெரிக்கா, ஆஸ்திரேலீயா ஆகிய நாடுகளிலும் கிளை விரித்தது.ஆனால் காலப் போக்கில் அந்த அந்த நாடுகள் தமரது மண்ணின் மணத்துடன் மாறிக் கொண்டனர்.
இந்த ஆங்கில தேசம் மட்டும் ஆரம்பத்தில் இருந்து தாம்தாம் உலகுக்கே சட்டாம்பிள்ளை என எண்ணிக் கொண்டிருந்ததை உலகப் போர்கள் மாற்றின. ரஷியா, சீனா , ஜப்பான், எல்லாம் முன்னணி நாடுகள் என வந்து விட்டன. அமெரிக்க ஐக்கிய நாடுகள் உலகின் சட்டாம்பிள்ளை நாடாகி விட்டது.
சுப்ரமணிய சிவாவை சிறையில் வைத்து தொழு நோயாளியாக்கிய
கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனாரை செக்கிழுக்க வைத்த
பாரதியை புதுச்சேரிக்கு ஓடி ஒளிய வைத்த
திருப்பூர் குமரனை தலையில் அடித்து இரத்த வெள்ளத்தில் வீழ்த்திய
காந்தி நேரு படேல் போன்ற எண்ணற்ற தலைவர்களை வெஞ்சிறையில் வாட்டிய
பகத் போன்றவர்களை தூக்கிலிட்ட
ஜாலியன் வாலா பாக் பஞ்சாப் படுகொலை நடத்திய
இந்தியாவும் பாகிஸ்தானும் என்றுமே ஒன்றாகிடக் கூடாது என கபட வஞ்சக நாடமாடிய கொடுங்கோல் இனம் நிற வெறிபிடித்த இனம் இந்த ஆங்கிலேய இனம்.
இன்னும் கூட அவர்களைத் தவிர வேறு யாரும் செல்லக் கூடாது என பொது இடங்களில் கிளப்கள் நடத்தும் இனம் அவர்களுடையது
பள்ளிகள், கோயில்கள், ரெயில்வேக்கள் போன்ற நூதனம் எல்லாம் அவர்கள் வழி கிடைத்தது எனவே அவர்கள் நன்றிக்குரியவர்கள் என்ற வாதம் உண்டு...ஆனால் அவை ஏற்படுத்தப் பட்டவை எல்லாமே அவர்கள் வசதிக்காக அவர்கள் சுலபமாக இந்த நாட்டை ஆளவேண்டும் இந்த மக்களை வழிப்படுத்த வேண்டும், தமது நாட்டுக்கு கொள்ளை கொண்ட பொற்குவியலை, பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என்ற பிரதான நோக்கத்திற்காக...
உலகெலாம் உலக மாந்தரெல்லாம் மானுட குலத்திற்காக தமது இன்னுயிரை மாண்பு மிகு ஆயுளை அற்பணித்தார்கள் பல்வேறு துறைகளில் அதெல்லாமே ஆங்கில இனம் என தப்புக் கணக்கு போடுவது போல...இதுவும் ஆங்கில புத்தாண்டு என்பது...கலிலியோ ஆங்கில அறிவியலாளர் அல்ல, நோபெல் ஸ்வீடன் நாட்டார்..இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...
எனவே இந்த நாள் ஒரு நாள் விடுமுறை தரும் என்ற முறையில் எனக்கும் மகிழ்வே ஆனால் அதுவும் இந்த முறை வழக்கமான வார விடுமுறை ஞாயிறன்று வந்திருக்கிறது...விடுமுறை அதற்கென தனியாக இல்லாமல்.
கிராமங்களில் வீடுகள் கூட இல்லாமல் சாலையாக இருக்கும் இடத்தில் எல்லாம் ஒலிபெருக்கி அலறுகிறது...மின் செலவு...
ஜெ இல்லாமலும் தமிழகத்தில் ஆங்கிலப் புத்தாண்டு இங்கு நடத்தப் படுவது பற்றி மகிழ்வே...
எங்கள் ஊர்களில் இது இம்முறை அதிக இறைச்சல் இல்லாதது பற்றியும் மகிழ்வே...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
பி.கு: எனக்கு வாழ்த்து சொன்னவர்க்கு திரும்ப வாழ்த்து சொன்ன நாகரிகத்துடன் சில அரிய மனிதர்களுடன் பேசிய நிகழ்வுகளுடன் எனது புத்தாண்டு தொடங்கியுள்ளது... இரவு தி கிரீன் மைல் படம் பார்த்து நெகிழ்ந்தபடி கண்ணீர் விட்டு அழுத படி...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteமலர்தலைப் பார்க்க விருப்பம்
thanks Mathu S. for your greetings .sure You can see blossoms
ReplyDelete