Saturday, January 7, 2017

மோடியின் திட்டம் நடைமுறையில் தோல்வி: கவிஞர் தணிகை

மோடியின் திட்டம் நடைமுறையில் தோல்வி: கவிஞர் தணிகை

Image result for no cheque book no atm no money no service in banks in india


தப்பில்லாமல் அச்சடிக்க வேண்டும் அல்லவா பணத் தாள்களை, காசோலைகளை, வரைவோலைகளை அச்சுக் கலை என்பது அரிய கலையாயிற்றே....அதற்கு கால அவகாசம் சற்று அதிகம் பிடிக்கும்தான் அதெல்லாம் மோடிக்குத் தெரிய வாய்ப்பில்லை...உடனடியாக எல்லாமே கேட்டால் அந்த தேவைக்கான ரொக்கம், காசோலை புத்தகம், எல்லாம் மோடி மஸ்தான் வித்தையிலா விளைந்து விடும்...? வெட்கம்...பழைய 100 ரூ பணத்தாள் எவ்வளவோ பரவாயில்லை இப்போது அச்சடித்துள்ள புதிய 500, 2000 தாள்களுக்கு பதிலாக...

Image result for no cheque book no atm no money no service in banks in india

வங்கிக்கு சென்றிருந்தேன். அவர்களுடைய டிவிஷனிலிருந்து மேலாண்மை பிரிவிலிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது 2ஆம் தேதியே.உங்களுக்கு காசோலை புத்தகம் கிடைக்க தயார் நிலையில் உள்ளது வங்கிக் கிளையை அணுகச் சொல்லி, ஆனால் இன்று 7 ஆம் தேதி சென்று கேட்டால் இன்று விட்டு விடுங்கள் வேறு எப்போதாவது வாருங்கள், ஒரு மாதமாவது ஆகும், அப்படித்தான் செய்தி அனுப்புகிறார்கள், கூரியர் வரவில்லை, தேடிப் பார்க்க வேண்டும், இன்று விட்டு விடுங்கள் ப்ளீஸ் என்கிறார்கள் மருத்துவ சேவைப் பணியில் உள்ள எனக்கோ முதல் சனிக்கிழமை மட்டுமே விடுமுறை மற்ற நாட்கள் எல்லாம் வேலை நாட்கள் வங்கிக்கு செல்ல முடியாது. ஏன் எனில் உங்களுக்கேத் தெரியும் 2 ஆம் 4 ஆம் சனிக்கிழமை அவர்களுக்கு விடுமுறை,நமக்கு வேலை நாள்தான்,ஏ.டி.எம்கள் இன்னும் சாதாரண நிலையை எட்டவில்லை.எல்லாம் 24 மணி நேரமும் பூட்டியே கிடைக்கிறது ஒரு காலத்தில் 24 நேரச் சேவை என்று வைத்த விளம்பர போர்டு வாய் கிழிய இளித்தபடி கிடக்க...
Related image


மேலும் அடுத்த வாரம் பொங்கல் விடுமுறை வந்து விடும் அவர்களுக்கும் விடுமுறை நமக்கு சனி, ஞாயிறு, திங்கள் 3 நாளும் விடுமுறை, அரசு விடுமுறையான குடி அரசு தினம் போன்றவை அவர்கள் நமக்கு குடிமகன்களுக்கு யாவர்க்கும் விடுமுறை இப்படி இருக்க... கட்ட வேண்டிய கடனை, கட்டணத்தை பெற்றோர் கட்டித் தானே ஆக வேண்டும், கணக்கு மாறுதல் செய்து கொள்ளலாம், நெட் பேங்கிங் செய்து கொள்ளலாம் என்றெல்லாம் சொல்வது காதில் விழுகிறது. ஆனால் அவை யாவுமே அந்தளவு இன்னும் எல்லா இடங்களிலும் சென்று சேரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இது போல பல வாடிக்கையாளர்கள் நெருடல்களை சுமந்திருந்தார்கள்,அந்த அலுவலரும் நல்ல மென்முகம் உடைய பணியாளர்தான், ஆனால் அவரால் சமாளிக்க முடியவில்லை சற்று தடித்த வார்த்தைகளை பயன்படுத்துமளவு அவருக்கும் முடியாமை....எல்லாமே மோடி மஸ்தான் விளைவு.

எப்படியோ நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது பணத்தை எடுக்க காத்திருக்காமல் இருந்தால் சரி என்ற மனநிலை பணம் கிடைத்தார்க்கு, காசோலை இருந்தால் கல்லூரிக்கு கட்ட வேண்டிய நிலுவைத் தொகை கேட்பு வருவதற்குள் தயார் நிலையில் இருக்கலாமே என்ற தற்காப்பு உணர்வு நமக்கு...
Related image


ஆனால் அன்பர்களே நான் இன்னும் கண்கூடாக கண்டு வருகிறேன், ஓமலூர், வேம்படிதாளம், நல்லாம்பள்ளி போன்ற சில புறநகர் பகுதிகளில் அல்லது செமி அர்பன் ஏரியாக்களில் அல்லது கிராமங்களில் ஒரே ஒரு வங்கி இருக்கும் இடங்களில் எல்லாம் நீண்ட வரிசை காத்திருப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது... வருத்தப்பட வேண்டியதாயும் அனுதாபப் படவேண்டியதாயும்.

ஒரு நண்பர் எழுதுகிறார்,சென்ற இடமெல்லாம் ரொக்கம் இல்லையெனில் நாறி நட்டாற்றில் அனாதையாக விடப் படுவோம் என்று, ஸ்வைப் வைத்து ஸ்கிராச் செய்தால் இவர் கணக்கில் குறைந்து விடுகிறதாம், அவர்கள் கணக்கில் ஏறாமல் அவர்கள் பணம் ரொக்கம் கேட்கிறார்களாம், நல்ல வேளை தயாராய் எடுத்துச் சென்று இருந்ததால் தப்பித்தேன் என்கிறார், வங்கி மேலாளரைக் கேட்டால் அந்தப் பணம் உங்கள் கணக்கிற்கு வரும் அனால் இப்போது வராது சில பல நாட்கள் ஆகும் என்கிறாராம்.

நிலை இப்படி எல்லாம் இருக்க எனக்கு காரசாரமாக எழுத மனமில்லை. மத்திய, மாநில ஆட்சி, நிலவரம், சசி மோடி  சேகர் ரெட்டி போன்ற ஆட்கள், வங்கித் திருடர்கள் மேலாளர்களாய் இருந்தவர்கள்,இடைத்தரகர்கள்,ஓ.பி இவர்கள் பற்றி எல்லாம் சொல்ல எண்ணைல்லை அது பற்றி அதன் பக்கமே திரும்ப ஆர்வமில்லை. எனக்கு கிடைக்கும் நேரம் குறைவாகத் தெரிகிறது...உடல் பிணி சார்ந்து குடும்ப உறவுகள் பிரச்சனைகள் சார்ந்து,,, நிறைய நேரம், செலவாகிக் கொண்டு இருக்கிறது. எனவே இந்தக் காலக் கட்டத்தில் இவ்வளவுதான் முடிகிறது எனவே மிகக் குறைவான வருகையாளர்தான் எனது வலைப்பூவுக்கு வருவதை இந்த நாளடைவில் பார்க்க முடிகிறது...அது எனக்கும் வருத்தமே...தோனிக்கும் வயது ஏறிவிட்டது. நல்ல முடிவெடுத்து விட்டார். மாமனிதராகி விட்டார். அட எவ்வளவு ஆண்டுகள் தான் மனித உடல் நம்மோடு ஒத்துழைக்க முடியும்?

Image result for no cheque book no atm no money no service in banks in indiaRelated imageRelated image

மாலை 7 மணிக்கும் மேல் உடல் சோர்ந்து ரயில் பயணம் முடித்து பணி முடித்து வந்து ஏதோ என்னால் எழுத முடிந்தால் உண்டு , உறங்கிய நேரம் தவிர செய்து வருகிறேன்.

ஒத்துழைப்பை நல்குவார்க்கு நன்றியும் வணக்கமும்.

இவண்


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
அன்புடன்.



4 comments:

  1. Replies
    1. thanks for your comment on this post sir. vanakkam. please keep contact.

      Delete
  2. மக்களின் வேதனை தொடர்கிறது
    ஆட்சியாளர்களோ தங்களின் சாதனை என்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. yes they are telling it is success.But it is practically faced failures. thanks for your comment on this post sir.vanakkam. please keep contact

      Delete