அறிவியல் விந்தைக்குள் ஒளி(ர்)ந்திடும் மனித ஆற்றல்: கவிஞர் தணிகை
103 செயற்கைக் கோளுடன் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி 37 பிப்ரவரியில் விண்ணில் பாயும்,மனித உடலில் இது வரை தெரியாமல் இருந்த குடல் உறுப்பு அடி வயிற்றில் கண்டறிந்தது,விண்வெளி ஆய்வுக் கூடத்தை வியாபார நோக்கில் பயன்படுத்தல்,359 மில்லியன் ஒளி ஆண்டுக்கும் தொலைவில் கேலக்ஸி என்னும் நட்சத்திரத் தொகுதி,வானின் வடக்குப் பக்கத்தில் அதிகாலையில் ஒரு வால் நட்சத்திரத்தை தென் கிழக்கில் பார்க்கலாம், செவ்வாயில் 2030க்குள் குடியேற வீடு கட்ட ஆரம்பம், இப்படி அடுக்கடுக்கான அறிவியல் விந்தை செய்திகள் கணக்கிலடங்காமல் கொட்டிக் கொண்டிருக்கின்றன கடந்த இந்த 2 நாட்களில்.
எண்ணற்ற அறிவை பயன்படுத்தும் ஆற்றல் பெற்ற மனிதம் மேலும் மேலும் அறிவியல் அறிவுடன் வளர்ந்தபடியே இருக்கிறது.
இதை கடந்த இரண்டு நாளாகவே படிக்க படிக்க வியப்பெய்தினோம். இன்னும் மனித உடலைப் பற்றியே அதிகம் அதுவும் முழுதாக தெரியவில்லை என்னும் ஒரு அறிதலை இந்த குடல் உறுப்பு அடிவயிற்றில் கண்டறிந்தது நமக்கு கொடுக்க...
359 மில்லியன் ஒளி ஆண்டுக்கும் அப்பால் உள்ள நட்சத்திரத் தொகுதியை கண்டிடும் மனித ஆற்றல், மேலும் செவ்வாயில் வீடு கட்டும் பணி ஆரம்பம்,
நமது தற்போது இருக்கும் விண்வெளி ஆய்வுக் கூடம் அதன் பயனை இழந்த பின் சீனாவின் விண்வெளி நிலையம் பயன்படும் என்றும் அதை விட வியாபார நோக்கத்தில் கூட தனியார் விண்வெளிக்கூடம் செயல்பட ஆரம்பிக்கும் என்றும் இப்படி ஏராளமான அறிவியல் நடப்புகள்.
இதை எல்லாம் பார்க்கும்போது இதை எல்லாம் படிக்கும்போது மனித ஆற்றலை கண்டு வியப்பதா, அல்லது மனிதம் எவ்வளவு மீச்சிறிது என எண்ணி அடங்குவதா என்ற கேள்விகள் ஒன்றுக்குள் ஒன்றாக...கலந்தே காணப்படுகிறது.
அன்றாட வாழ்வில் அறிவியல் பயன்பாட்டை விட மனித குலத்தை படிப்படியாக பல மடங்கு ஏற்றி வைக்கும் இது போல கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்ட மாமனிதங்களுக்கு நன்றி சொல்வோம் என்றும்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

போற்றுதலுக்கு உரிய மாமனிதர்கள்
ReplyDeleteபோற்றுவோம்