எமது வலைப்பூவைப் படித்து வருவார்க்கு தெரிந்திருக்கும், நாம் ஏற்கெனவே சொன்ன இந்த மண் கோட்டையை வைத்துக் கொண்டா இத்தனை மனக் கோட்டை கட்டினார் மோடி? என்ற ஒரு பதிவை நினைவுக்கு கொண்டு வந்து இதைத் தொடரலாம்...
நாம் அந்த நிலவரித்திட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றிருந்ததன் தொடர்ச்சியாக, அங்கிருந்த ஒரு எழுத்தர் அல்லது உதவியாளர் பெண்மணி சொன்னபடி எனது துணைவியாரின் பேரில் நீதிமன்ற வில்லை ஒட்டிய விண்ணப்பத்தை அளித்து உரிய ஆவணங்கள் மற்றும் நகல்களுடன் சென்று சந்திக்கச் சொன்னேன். கடந்த 12.01. 17,ல்
அவர்களும் சென்று சந்தித்திருக்கிறார்கள் (டோக்கன் கொடுத்தார்களாம்)அவர்கள் அடையாள எண் 22. அவர்கள் கொடுத்ததை எல்லாம் பார்த்து விட்டு, அவரையே வரச் சொல்லுங்கள் 19.01.17ல் வந்தால் சந்திக்கலாம் என்று வட்டாட்சியர் சொல்லி விட்டு இந்த ஆவண நகல்களையும் திரும்பக் கொண்டு செல்லுங்கள் அவர்தான் கை ஒப்பம் இட வேண்டும் எனச் சொல்லி இவரை நிராகரித்து < மனுதாரர் நேரில் ஆஜராகவில்லை> எனத் திருப்பி அனுப்பி விட்டார்.
மறுபடியும் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு சென்று சந்தித்தாக வேண்டும் அன்றைய தினமாவது பணி முடியுமா முடியாதா, அந்த வட்டாட்சியர் வருவாரா வரமாட்டாரா என்பதெல்லாம் காலத்தின் கையில்
இந்தக் கடிதமே போதும் , நீங்கள் வரவேண்டியதில்லை, உங்கள் துணைவியாரை அனுப்பினாலே போதும் என்ற அந்த இளகிய மனம் கொண்ட எழுத்தர் வட்டாட்சியர் முன் வாயே திறக்கவில்லையாம், எனது துணைவியாருக்கும் அந்த அளவு துணிச்சல் கிடையாது நடந்ததைச் சொல்ல அப்படியே திரும்பி விட்டார், அவர்கள் செய்யும் தவறுகளுக்கு எனக்கு பாட்டு விழுந்தபடி இருக்கிறது. அது மட்டுமல்ல அந்த அழைப்புக் கடிதத்திலேயே உங்கள் அதிகாரம் பெற்ற நபர் வரலாம் எனச் சொல்லப் பட்டது பயனின்றியே இருக்கிறது.
இப்படி திருப்பி அனுப்பினால்தான் அவர் வருவார் எனச் சொல்லியே நேரில் ஆஜராகவில்லை எனச் சொல்லி உள்ளனர். ஆனால் இதற்காக இதுவரை நாம் 3 முறை அந்த அலுவலகத்துக்கு சென்றுள்ளோம். இதைப் பதிவு செய்து வைக்கிறேன். நீங்கள் சாட்சியாக..பார்ப்போம் எதிர் வரும் காலத்தில் என்ன நடக்கிறது என...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
அரசு அலுவலகங்களுக்குக் கால் தேயத் தேய நடப்பவர்களுக்குத்தானே அதன் வலியும் வேதனையும் தெரியும்
ReplyDeletethanks for your understanding sir. vanakkam.
ReplyDelete