அச்சமின்றி: கவிஞர் தணிகை
30 டிசம்பரில் சென்ற ஆண்டில் வெளியான அச்சமின்றி ஒரு நல்ல படம்தான். பார்க்கலாம். கல்வி சார்ந்த முடங்கல்களை அலசுகிறது. சரண்யா அம்மா வேடம் விட்டு வில்லியாகி நீதிமன்றத்தில் சவால் விடுகிறார் சவுண்ட் பார்ட்டியாக...விஜய் வசந்த் என்னும் வசந்த் அன் கோ வசந்தகுமாரின் வாரிசு சினிமாவில் பிரபலமடைய புகழடைய இம்முயற்சி பயன் பட்டிருக்கிறது.
சமுத்திரக் கனி என்றாலே கல்வி ஏய்ப்பு, போராட்டம் என்ற முத்திரை குத்தப் பட்டு விட்டாலும் காரண காரியத்தோடு பொருள் பொதிந்த படம் என்பதால் பார்க்க முடிகிறது.
ஆரம்பத்தில் மந்திரியாக நடிக்கும் இராதா இரவியை நாம் அனைவரையும் போல சந்தேகிக்கிறோம். வில்லனாக. ஆனால் வில்லி சரண்யா கொஞ்ச நேரம் ஆனாலும் நல்ல நடிகையால் எந்த பாத்திரத்தை வேண்டுமானாலும் செய்ய முடியும் என ரா ரா சந்திரமுகி ஜோதிகா போல பச்சைக்கிளி முத்துச்சரம் போல கடைசியில் வில்லியாகி தமது சினிமா கேரீரை முடித்துக் கொண்டது போல சரண்யா முடித்துக் கொள்கிறாரா, முகம் எல்லாம் முதுமை காட்டுகிறது அல்லது ஜோதிகா போல 36 வயதினிலே, மகளிர் மட்டும் என்பது போல திரும்பி விடுவாரா என்பதை பொறுத்துப் பார்க்கலாம்
கதைக்கு வருவோம்: சமுத்திரக் கனி மணமுடிக்கும் ஊமைப் பெண்ணை கொன்று விடுகிறார்கள், அந்த ஊமைப் பெண்ணின் தம்பி மாநிலத்தில் முதல் மாணவராக வந்தவரும் அடித்துக் கொல்லப் படுகிறார். தேர்வன்று கேள்வித்தாளை வெளியிடுவதிலிருந்து தடுத்து நிறுத்தும் தலைவாசல் விஜய் மாவட்ட ஆட்சித் தலைவர் கொல்லப் படுகிறார். நன்றாகப் படிக்கும் பிக் பாக்கெட் அடிக்கும் விஜய் வசந்தின் காதலியின் தெரிந்த பெண் முதல் மதிப்பெண் பெற வேண்டியவர் மருந்து குடித்து மருத்துவ மனையில் கிடக்க, காதலி மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க, அவரையும் கொல்ல முயல...கொலைகாரக் கும்பலின் முக்கியக் குற்றவாளியின் பர்ஸை விஜய் வசந்த் அடித்துவிட அவரையும் கொல்லத் திட்டமிடுகிறது கூட்டம், நண்பராக இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சமுத்திரக் கனியை இடைஞ்சல் என என்கவுண்டர் செய்யத் துடிக்கிறார். இதில் இருந்து பிக்பாக்கெட் விஜய் வசந்த், சமுத்திரக் கனி, விஜய் வசந்த்தின் காதலி, சமுத்திரக்கனியின் டிரைவர் ஆகியோர் எப்படி தப்பித்து நீதியை நிலை நாட்டுகிறார்கள் என்பது கதை.
கடைசியில் சிறிது நேரம் ஆனாலும் வழக்கறிஞர் ரோகினி நன்றாக டயலாக் டெலிவரி செய்கிறார். இராதா இரவி வழக்கம் போல தமது பங்கை சிறப்பாக செய்து நமது சந்தேகம் போக்கி ஒரு நல்ல மந்திரியாக இருக்கிறார்.
ஆனாலும் எல்லாம் மக்களிடம் தாம் மடமை இருக்கிறது அதுதான் சரியான அரசுப் பள்ளிகள் அமையாமைக்கும், தனியார் பள்ளிகள் எழுச்சிக்கும் காரணம் எனத் தெளிவாக விளக்கி இருக்கும் படம்.
ராஜபாண்டி பாண்டி ராஜை நினைவு படுத்துகிறார். வாழ்த்துகள். சிறிய அளவு பட்ஜெட் படமானாலும் கடைசி வரை ஆர்வத்துடன் பார்க்க வைக்கிறது. பிக்பாக்கெட் ரோல் செய்யும் விஜய் வசந்த் பணக்கார வீட்டுப் பையன் கதாநாயகனாக முயற்சித்திருக்கிறார் வாழ்த்துகள். ஆனாலும் என்னவோ ஒன்று குறைகிறது அது என்னவென்று அவர் பார்த்தறிந்து அடுத்த படத்திலிருந்து சரி செய்து கொண்டால் முத்திரை பதிக்கலாம். நூற்றுக்கு 40 கொடுக்கலாம்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment