Monday, January 9, 2017

இதையும் எழுதுவேன்: கவிஞர் தணிகை

இதையும் எழுதுவேன்: கவிஞர் தணிகை

Image result for alert to hear


காதில் கேட்டது நடைப்பயிற்சியில்: அவளுக்கு ஒரு நாளைக்கு அடி உண்டு,மேல இருக்கற நாலு பேருதான் தூக்கி வைச்சிருக்கான்,வேற சப்போர்ட் இல்ல...ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் சசி கலா பற்றி

ஒட்டுப் பள்ளம் சென்று திரும்பு முன் அவிழ்ந்திருந்த காலணியின் நாடாவைக் கட்ட ஒரு பாலத்தின்ன் மேல் கால் வைத்தேன், அதற்கு முன்பே நமது ஒரு குடிமகன் ஒரு ட்ராக்டரை நிறுத்த முயன்று தள்ளாடிக் கொண்டிருந்தார், அவர் என் பின் வந்து நின்றார், காலணி நாடாவைக் கட்டிக் கொண்டே கவனித்தேன், நம்ப முடியாது, குடி மகன்கள் எதையும் செய்வார்கள் என்பது தெரிந்ததால் சற்று எச்சரிக்கையாகவே இருந்தேன்,

அவர் உடனே ஒரு உதவி வேண்டும் என்று கேட்டார், பரவாயில்லை முடிந்தால் செய்வோம் உதவிதானே கேட்கிறார் என நினைத்தேன், ஒரு பத்து ரூபா கொடுங்கள், வீட்டில தங்கச்சி கொத்துமல்லி தழை வாங்கச் சொல்லிச்சி என்றார், ஒரு பைசாக் கூடக் கிடையாது என்றபடி இடத்தை விட்டு நகர ஆரம்பித்திருந்தேன்.உண்மையிலேயே ஒரு பைசாக் கூட எனது கால்பையில் இல்லை என்பதை அவரால் நம்பியிருக்க முடியாது. ஆனால் அதுதான் உண்மை.

அவசியம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும், மகன் படிப்பு செலவை ஏற்க வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன் . 9மாதம் முடிந்து 10 ஆம் மாதம் ஆரம்பம், ஏற்கெனவே இருக்கும் குடல் புண், உயர் இரத்த அழுத்தம், யூரியா எனப்படும் உப்பு வியாதி, மூலம், குடல் வால் தழற்சி, நிறமி அணுக் குறைபாடு அத்துடன் இப்போது சர்க்கரையின் அளவு 300 என்றாகிவிட்டது எனவே நான் அவசியம் நடைப் பயிற்சி செய்தே ஆக வேண்டும்

அப்படி போகும்போதுதான் முன் சொன்ன இரண்டு பேச்சு வார்த்தை ஒன்று கேட்டது , ஒன்று செய்தது..

Related image

மகன் விடுதிக்கு சென்று படித்து வருவதால், உணவில் கவனமில்லாதது, எதைப் போட்டாலும் மறுப்பு சொல்லாமல் சாப்பிட்டது, விருந்துக்கு சென்றது,ஐஸ்க்ரீம், பனிக் குழைவா அதன் தமிழ் பேர், கிடைத்த போதெல்லாம் கேக், சாக்லெட்,பேக்கரி ஐட்டம் இப்படி எல்லாமே சிறுபிள்ளை போல சாப்பிட்டது, நம்மை ஒன்றும் செய்ய முடியாது என இறுமாப்பு காரணம் நல்ல உடற்பயிற்சி செய்பவர் என்ற தெம்பு.

ஆனால் பணி விட்டு திரும்பவே இரவு சுமார் 7 மணி ஆகி விடுவதால், சேலம் ரெயில் நிலையத்திலேயே கிடைக்கும் நேரத்தில் நடைமேடையிலேயே நடைப்பயிற்சி செய்து வருவது ...அது போதவில்லை என்று தெரிந்தது...

உண்ணும் உணவில் அதிகம் இனி அரிசிச் சோறு ஏற்கக் கூடாது, இந்த ஆங்கிலப் புத்தாண்டு முதல் இனிப்பு, சாக்லெட், பேக்கரி ஐட்டம் , விருந்துணவு எதையும் உண்பதில்லை எனத் தீர்மானித்தேன். அதன் படி நடந்து செல்வேன்,

உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, தியானம், இவை இவற்றுடன் உள்ளுக்கு சாப்பிட வேண்டிய சித்த மருந்து ஆகியவற்றை கொஞ்சம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவு பல நாட்களாக அமல் படுத்தப்படுகிறது.

முதலில் கைகள் இரண்டும் தோள்பட்டையிலிருந்து பல நாளாக‌ வலியுடன்....பின் முதுகில் படியும் தோள்பை இன்றைய இளைஞர் தூக்குவது போலத் தூக்கிச் செல்வது காரணமாக இருக்கும் என்றார் குடும்ப நண்பர் வேலாயுதம் சென்னை, என்ன ஒரு ஐந்திலிருந்து பத்து கிலோ கனம் இருக்கும் எனப் பேசிக் கொண்டோம்

அடுத்து ஒரு சித்த மருத்துவர் சர்க்கரையாக இருக்கும் என்றதற்கு அதெல்லாம் சரியாகவே இருக்கிறது என சமாளித்தோம் பேச்சளவில்

குளிர் காலம் குடிக்கும் நீர் அதிகமாக குடிப்பதால் சிறு நீர் அதிகமாக வெளியாகிறது என அதையும் மறுத்து விட்டோம்,


Related image

முன் பின் செத்திருந்தால் தான் சுடுகாடு தெரியும் என்பது போல சர்க்கரை வியாதி பற்றி நாம் கேள்விப் பட்டிருப்பதுண்டு ஆனால் அனுபவித்ததில்லை எனவே தெரியாது...

ஆனால் நமது பெற்றோர்களுக்கு இருந்தாலே கூட போதும் நமக்கும் வரலாம் என செவிலியர்கள் கூற்று.

எனது துணைவியிடம் நீ கொடுத்த மதிய சாப்பாடு அதிகம் இருந்தது பற்றி அப்போதே சொன்னேன் அதை எமது கல்லூரி குளத்து மீன்களுக்கு இட்டேன் என்றெல்லாம் சொன்னதற்கு பதில், நீங்கள் சனிக்கிழமையிலும் ஞாயிற்றுக் கிழமையிலும் கூட நீங்கள் நடைப்பயிற்சி செய்யாமல் இணையத்தில் அமர்ந்திருந்தது காரணம் என்று வந்தது...

ஆக நோயைக் கண்டறிவதே ஒரு வாய்ப்பு, அதன் பின் அதை சுலபமாக வெட்டிச் சாய்த்து விடலாம் என்பது எனது கருத்து.


பெற்றோர்களுக்கிருந்த இந்த நோய் வளையத்துள் எல்லாம் நாம் போகவே கூடாது ,சர்க்கரை வியாதி மட்டும் வரவே கூடாது அது பெரும்பிசாசு என்று சொல்லி வந்தேன் அந்த பிசாசு என்னையும் பிடித்து விட்டது. இது போன்ற வலையத்தில் சிக்காமல் மீளவே முடியாதோ....மகனே நீயாவது எட்டிப் போ கிட்ட வராமல் இந்த வட்டத்துள் எல்லாம் சிக்காமல்


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. உடல் நலன் முக்கியம்நண்பரே
    கவனமாய் இருங்கள்

    ReplyDelete