Friday, January 20, 2017

தமிழக கல்லூரி மாணவர்களின் எழுச்சி:கவிஞர் தணிகை.

தமிழ் கல்லூரி மாணவர்களின் எழுச்சி: கவிஞர் தணிகை
Image result for jallikattu marina beach

தற்காலிக தீர்வுக்கு ஏமாந்து போய் விடக் கூடாது

இதே எழுச்சியை பயன்படுத்தி

1. மதுவிலக்குக்கு ஆதரவாகி தமிழ்க் குடும்பங்களை வாழ வைத்து தமிழ்த் தாய்மார்களின் நெஞ்சில் பாலை வார்க்க வேண்டும்

2. காவிரி நீர்ப் பிரச்சனைக்கு ஆதரவாக பயன்படுத்தி மத்தியைப் பணியவைத்து
நிரந்தரத் தீர்வு காண வைக்க வேண்டும் மேலும் நீர் நிலைகள் மேம்பட பாடுபட வேண்டும்.

3. இந்தியாவின் நதி நீர் இணைப்புக்கு தங்களை விதைத்துக் கொள்ள வேண்டும், அந்த மாபெரும் திட்டத்தை நிறைவேற்றி இந்திய மக்களின் துயர் துடைத்து பல மாமனிதர்களின் கனவை நிறைவேற்றி இந்தியாவை மாபெரும் வல்லரசாக நல்லரசாக மாற்ற பாடுபட வேண்டும்

4. இலஞ்ச இலாவண்ய மற்ற சாதி மத பேத துவேஷமில்லாத ஒரு உலகளாவிய பார்வையுடன் தொலைநோக்குடன் அகண்ட பாரதமாய் மாற்ற வேண்டும்.

5. மொத்தத்தில் தமிழகத்தின் நல்லாட்சிக்கும் ஏன் இந்தியாவின் ஒட்டு மொத்த நல்லாட்சிக்கும் நல்லதொரு விழிப்புணர்வு பெற்ற அரசியல் சக்தியாய் உருவெடுத்து இனியாவது இந்தியாவின் இருளாட்சியை விரட்டி
ஒளி மிக்க ஆதவன்களாக விளங்கி மக்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி அவர்தம் வாழ்வு மேம்படுத்தி, அத்தியாவசியத் தேவைகளான ,உணவு, உடை,உறையுள்,மேலும் அன்றாடத் தேவைகளான கல்வி, மருத்துவம், சுகாதாரம், அறிவியல்,சமூக மேம்பாடு, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் அனைவரையும் முன்னெடுத்துச் செல்லும் ஆக்க பூர்வமான சக்தியாய் இந்தியாவில் இனி இருக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் இனி இந்தியா உங்களால் மாற வேண்டும். உங்கள் கையில் அந்த பணியும் பொறுப்பும் காலம் உங்கள் முன் பணியும். எங்கள் ஆயுளில் என்றுமே இனி நல்லதொரு ஆட்சியை பார்ப்போமா, கோணாத கோல் வரவே வராத என்பார்க்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். அனைவர்க்கும் சம நீதி கிடைக்க உங்கள் முயற்சி உண்மையிலெயே அர்ப்பணிக்கப்பட வேண்டும்.

ஏன் எனில் இந்த எழுச்சி உண்மையிலேயே அரசியல் வியாதிகள் வேண்டுகோளின் படி கோர்ட்டர், கோழி பிரியாணி, 200ரூ பணமுடிப்பு,அல்லது வாக்குக்கு காசு வாங்கும் கூலிக்கார படையின் சேர்தல் அல்ல என்பதால்

6. தனியார் கல்வி ஒழிக்க, அறக்கட்டளை செல்வ குவியல்களுக்கும் எதிராக இப்படி எத்தனையோ பிரச்சனைகள் நாட்டிலிருந்து கெல்லி எறியப்பட...


உண்மையில் சொன்னால்
உங்களால் முடியும்

இதெல்லாம் உண்மையில்
உங்களால் முடியுமா?

முடிந்தால்

நீங்கள்தான் இந்திய நாட்டின் சிற்பிகள்.
Related image

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

இத்துடன் இந்த பதிவின் நோக்கம் முடிந்து விட்டது. இனி வருவது எல்லாம் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய சில கருத்துப் பகிர்வுகள், மேலும் வெளிப் படுத்த வேண்டிய ஆதங்கங்கள்.

பி.கு: சிலருக்கு பீட்டா அல்லாத சிலருக்கும் மிருகவதை செய்வது பிடிக்காமல் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு உங்களுக்கு சொல்லும் அருகதை இருக்கிறது. முடிந்தவரை பிற உயிர்களை சித்ரவதை செய்யாமல் நாம் எந்த செயலையும் மேற்கொள்ள வேண்டுவதும் அவசியம்தான்

ஆனால் சொல்லப் போனால் பிற மதங்களை விட அதிகம் கிறித்தவ மதமும், முகமதியமும் உலகெங்கும் அசைவ உணவின்பால் மிக்க ஆர்வமுடையன. எனவே அருகதை இல்லாதார் அதைப் பற்றி அருகதை இல்லாத பீட்டா போன்ற சங்கங்களை வைத்து நமக்கு சொல்லத் தேவையே இல்லை.

ஒரு வழக்கறிஞர் அழகாக சொல்லி இருக்கிறார்: இந்த ஜல்லிக் கட்டு, ஏறு தழுவுதல் விஷயத்தில்:

நாம் சட்ட வழி நீதி வழி உச்ச நீதிமன்ற வழி நிரந்தர தீர்வும் பெற முடியுமாம்

1. அதை மதம்/சமய வழியில் நடத்துவதாக ஜல்லிக்கட்டை சொன்னால் அதற்கு உச்ச நீதி மன்றமும் ஏதும் தடை செய்ய வழி இல்லை என‌

2. அது நமது அடிப்படைச் சட்டம் என்றால் அடிப்படை உரிமை என்றால் அதில் தலையிட்டு உச்ச நீதிமன்றமும் தடைப் படுத்த வழியில்லை என்றும்

3. எல்லாவற்றிற்கும் மேலாக குடியரசுத் தலைவர் வழியில் அது அனுமதிக்கப்பட்டால் (அதாவது அதுதான் இப்போது அவசர சட்ட முன்வடிவாய் அவரின் அனுமதிக்கும் ஆளுனரின் ஒப்புதலுக்கும் சென்று முடிவதாய் தயாரிக்கப்படுவதாய் இருக்கும் என எண்ணுகிறேன்.)அதையும் உச்ச நீதிமன்றம் தடுக்க வழி இல்லை என..

அந்த பெண் வழக்கறிஞருக்கு நன்றி.

அடுத்து என்ன செய்தாலும் அந்த பீப்பிள் ஃபார் எதிக்ஸ் ட்ரீட்மென்ட் ஆப் அனிமல் பீட்டா என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் என்று சிலர் ஊடகத்தில் பேர் குறிப்பிடாமல் கருவிக் கொண்டிருப்பதாக செய்தி இருக்கிறது

ஆனால் இது பற்றிய வழக்கை விசாரிக்க எடுத்துக்க் கொள்ளாமல் உயர் நீதிமன்றத்திற்கே செல்லுங்கள் என மற்றொரு வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் வழிகாட்டியிருப்பதாகவும் நிகழ்வுகள்....

இவங்களை எல்லாம் எதுக்கு நாம கேட்கணும், நிரந்தரத் தீர்வு என்ற ஒன்றிற்காகத்தானே...

கர்நாடகாவில் நீரை அனுப்ப உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை மதிக்காமல் தடுத்த அந்த மாநில மக்களை எதிர்த்து உச்ச நீதிமன்றம் என்ன செய்தது? அந்த மாநில அரசு எப்படி அணுகியது?

அது கூடவா தமிழ் மாநில அரசுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்?

இவர்களை எல்லாம் கேட்கவே வேண்டாம், வாக்கு வாங்க வருவார்கள் ,நிலை மீறும்போது காவல்துறையையும், காவல்துறைத் தலைவர்களையும் பேச்சு வார்த்தைக்கு அனுப்பி வைப்பார்கள்....வாக்கு வாங்க, கேட்க வரும்போதும் இதே காவல்துறைத் தலைவர்களை, காவல் துறையினரை அனுப்பி வைக்கலாம் அல்லவா?....

Image result for jallikattu marina beach

எனவே
நீங்கள் செய்ய வேண்டியதை செய்து கொண்டே இருக்க வேண்டும்.மாறுதல் நிகழும். சரி எனத் தெரிவதற்கு எல்லாம் இவர்களிடம் உத்தரவு அனுமதி என்று எல்லாம் கேட்டு பணிந்து நின்று கொண்டிருப்பதும் கூட செயல்பாட்டுக்கு அழகல்ல...இது எனது சொந்தக் கருத்து.


இப்படி மட்டும் நமது ஈழத்து தமிழினத்துக்கு ஆதரவாக சில ஆண்டுகளுக்கும் முன் திரண்டிருந்தால் இலங்கை, இந்தியா நம்மை ஏமாற்றவே முடிந்திருக்காது. ஒரு இனப் படுகொலை நடந்து தமிழர்கள் பல லட்சம் பேர் அழியாமல் காப்பாற்றப் பட்டிருப்பரே...இனியாவது தமிழர்க்கு வாழ்வு மலரட்டும் புதிய விதிகள் எழுதப்படட்டும், பாரம்பரியக் காற்றில் புரட்சிப் பூக்கள் மலரட்டும், புதுப்புனல் பெருகட்டும்...


தமிழக கல்லூரி மாணவர்களின் எழுச்சி:

உலகெலாம் உள்ள தமிழினத்தை எல்லாம் உசுப்பி விட்டு விட்டது...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



4 comments:



  1. Pasumai Siva
    ஒன்றரை லட்சம் தொப்புள் கொடி உறவுகள்

    இருபது கல் தொலைவில் ஓரிரு நாட்களில் கொன்றழிக்கப்பட்டார்கள்.
    சதி செய்தவன் எல்லாம் உயிரோடிருக்க, பேட்டரி வாங்கிக் கொடுத்தவன் கால் நூற்றாண்டாக கொடுஞ்சிறையில்.
    ஆணையிட்டும் திறக்கப்படாத காவிரி.
    தட்டிக் கேட்க துப்பில்லாத உச்ச நீதிமன்றம்.
    காவிரி நீருக்காக பெங்களூரில் அடி வாங்கும் தமிழன்.
    சிங்களவனால் தினம் தினம் சாகும் தமிழக மீனவர்கள்.
    பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறை இடிக்கத் துடிக்கும் கேரள இந்தியன் .
    கெயில் குழாய் பதிக்க நிலங்களை பறிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.
    வளம் கொழித்த காவிரி டெல்டா, மீத்தேன் வாயுக்காக பாலைவனமாகும் அபாயம்.
    'வார்தா புயல் இயற்கைப் பேரிடர் இல்லை. அதனால் நிவாரணம் தேவையில்லை' என்ற மத்திய ஆய்வுக் குழு அறிக்கை.
    கருகும் பயிர்கள்.
    தினம் தினம் சாகும் விவசாயிகள்.
    இழவுக்கு வந்த 'இந்தியர்கள்' கருகிய உழவுக்கு இடைக்கால நிவாரணம் கூட தராத வேதனை.
    சட்டப்படி தீர்ப்பை சொல்லாமல், 'சிங்கத்தை அடக்குங்கள்.
    வீடியோ கேமில் விளையாடுங்கள்' என்பதான நீதிமன்ற நையாண்டிகள்.
    நடிகைக்கு நேரம் ஒதுக்கிய பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்களை இருமுறையும் சந்திக்காமல் தவிர்த்த அவமானம்.
    காவிரி நீர் தராத கன்னட ஆட்சியை கலைக்கச் சொல்லாதவர்கள், சல்லிக்கட்டு நடந்தால் தமிழக ஆட்சியை கலைக்கச் சொல்லும் ஆணவம் .
    சட்டத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசை பீட்டா என்ற அமெரிக்க நிறுவனம் 'ஆட்சியிலிருந்து தூக்கு' எனச் சொன்ன திமிர்.
    அம்மா செத்தபோதும் கூட அமைதி காத்த தமிழனுக்கு, 'சட்டப்படி நடக்க' வடக்கிருந்து வந்த பேடி வகுப்பெடுத்த காட்சி.
    நடிகர்கள் கூடுவதை நேரலை செய்யும் ஊடகங்கள், போராட்டத்தை படம் பிடிக்கவில்லை என்ற ஆதங்கம்.
    இந்தியனாகவே நம்மை கருதாத வட இந்திய ஊடகங்கள்.
    சல்லிக்கட்டு தடைக்குப் பின்னால் உள்ள சர்வதேச சதிகள்.
    இப்படி அத்தனை நிகழ்வுகளிலும் தமிழன் அவமானப்படுத்தப் படுகிறான். இழிவாக கருதப்படுகிறான் என்ற இனமான உணர்வே தமிழனை இப்படி நெருப்பாய் தகிக்கச் செய்கிறது.
    ஒரே நாளில் புரட்சியும் எழுச்சியும் வந்து விடுவதில்லை.. இறக்குமதி செய்ய அது கடைச் சரக்கும் அல்ல.
    காந்தி சுதந்திரம் கேட்ட மறுநாளே வெள்ளைக்காரன் அள்ளித் தந்து விடவில்லை.
    நூறாண்டுக்கும் மேலான வீரியப் போராட்டமே அதைச் சாத்தியப்படுத்தியது.
    காலம் காலமாக அடங்கிக் கிடந்த உணர்வுகள் ஏதோ ஒரு புள்ளியில் சங்கமித்து, எரிமலையாய் வெளிக் கிளம்பும்..
    சல்லிக்கட்டு விளையாட மட்டுமல்ல போராட்டம்.
    சல்லிக்கட்டின் தடைக்குப் பின்னால் உள்ள ஆதிக்க சக்திகளின் முயற்சிக்கு அடிபணிய முடியாது என்பதை அறிவிக்கவும்தான் இந்த போராட்டம்..
    மனித வரலாறும், அரசியல் வரலாறும் அறிந்தவர்கள் மாணவர்களின் எழுச்சியைப் புரிந்து கொள்ளுங்கள்..
    புரிந்து கொள்ள இயலாதவர்கள் ஒதுங்கி நில்லுங்கள்.
    செல்ல வேண்டிய தூரம் இன்னும் உள்ளது. சாதிக்கட்டும் இனமான மாணவர் படை..! புரட்சி ஓங்குக.

    ReplyDelete
    Replies
    1. superb. thank for your feedback on this post sir.vanakkam.pl.keep contact.இனியும் ஒரு நொடி கூட பொறுக்க முடியாது எனக் கோடிக்கணக்கான மக்கள் வெகுண்டெழுவதே புரட்சி என்பார் லெனின்.

      Delete
  2. தமிழக கல்லூரி மாணவர்களின் எழுச்சி:கவிஞர் தணிகை. = சரியான எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Tanigai Ezhilan Maniam

    ReplyDelete
  3. thanks for your feedback and sharing in your facebook page sir. vanakkam.

    ReplyDelete