பெரும் முதலாளி டொனால்ட் ட்ரம்ப் வீழ்ந்தார்: கவிஞர் தணிகை
ஆஹா என்று எழுந்தது பார் புரட்சி என்றான் ரஷ்யாவில் ஜாரின் வீழ்ச்சியின் போது பாரதி. அப்படி ஒன்றும் பெரிதாக சொல்ல முடியாவிட்டாலும் அமெரிக்க பெருமுதலாளி ட்ரம்ப் ஹிலாரி கிளின்டனை வீழ்த்தி கடந்த முறை அமெரிக்கத் தேர்தல் முறை ஆட்சியாளானாக்கியது அமெரிக்க அரசியல் விதி. அந்த மனிதரை இந்த முறை ஓட ஓட விரட்டி அடித்திருக்கிறது அதே அமெரிக்க தேர்தல் முறை. ஜோ பைடனுக்கு வரலாறு காணாத அளவு வாக்கு விழுந்திருப்பதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.
தோல்வியை ஏற்றுக் கொள்ளவே மாட்டேன் என்ற ட்ரம்ப் எந்த நீதிமன்றத்திற்கு சென்றாலும் அவர் தோற்பது உறுதியாகத் தெரிகிறது. அவர் பதவி விட்டு வெளியேறியே ஆகவேண்டும்...அத்துடன் அவர் மேல் நிறைய வழக்குகள் அதன் பின் செயலாக்க நடவடிக்கையில் இறங்கும் என்ற தகவலும் இருக்கிறது.
அவர் மனைவி மெலினாவே அவரை பதவி இறங்கும் வரை காத்திருந்து விவாகரத்து செய்ய இருப்பதாகவும், பெண்ணை பொது இடத்தில் வைத்து விரும்பத் தகாத முறையில் முத்தமிட்டதாகவும் ஹோட்டலில் அவர் அனுமதியின்றி அவரது உடலை தடவி அழுத்தி இறுக்கியதாக எல்லாம் செய்திகள் மேலும் விபச்சார அழகியுடன் இருந்ததற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிய விவகாரத்தில் வழக்கும் வருவாய்க்கு வருமான வரி கட்ட நேர்ந்ததில் தவறுகள் இப்படி பலப் பல குற்றங்கள் அந்த மனிதரைப் பற்றி அம்பலமாகி உலகை வலம் வர ஆரம்பித்துள்ளன. இவரிடம் எல்லா அயோக்யத்தனங்களும் இருந்தன. ஆனால் அதெல்லாம் அமெரிக்காவில் சகஜமப்பா...இங்கு தான் ஒரு தலைவர் என்பவர் அவசரத்திற்கு ஒரு அசுத்தமான இடத்தில் சிறு நீர் கழித்தால் கூட அது தப்பு...இங்கு உள்ள தலைவர் எல்லாம் கலாமாக, காமராசராக, காந்தியாகவே இருக்க வேண்டும் என இந்தியக் கலாச்சாரத்தில் கருதப் படுகிறது. ஆனால் அதை எல்லாம் இன்றைய தலைவர்கள் அப்படியே தலைகீழாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் மேலை நாட்டுக் கலாச்சாரத்தின் மூலம் என்பது வேறு...
இந்த மனிதனுக்கு இந்தியாவில் ஏதோ ஒரு பதர் கோவில் கட்டி வழிபட்டதாகவும் குஷ்புவுக்கு தமிழகத்தில் கோவில் கட்டியதும் ஏனோ இதை எழுதும்போது என் நினைவிலாடுவதை தவிர்க்க முடியவில்லை. வேல் பிடித்தால் முருகன் எல்லாம் தமிழ்க் கடவுள் வேலனாகி விடலாம் என்ற தோற்றம் வைத்து மத்திய ஆளும் கட்சி தமிழகத்தில் விளையாட்டை ஆடலாம் என்று பார்க்க கோவிட் 19 காரணம் சொல்லி தமிழக அரசு பிடித்து உள்ளே வைப்போம் என்று செயல் பட்டிருக்கிறது. தனது தோழமை கட்சி என்ற போதிலும் இப்போது அந்த ஜெ அம்மா இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என நினைத்துப் பார்க்கிறேன்..
சரி நாம் அரசியல் பேசினால் நமது நண்பர்களுக்கே பிடிக்காது அதனால் அகில உலக அரசியலையே பேசுவோம் அது ஆபத்து அதிகமற்றது. ட்ரம்ப் என்னும் மனிதன் பெரும் முதலாளித்துவ சிந்தனையில் ஊறிய எந்த விதிகளுக்கும் உட்படாத ஆண் பெண் சமத்துவம் பற்றி சிறிதும் கவலைப்படாத ஒரு ஆணவத் திமிர் படைத்த அமெரிக்க குடியரசுத் தலைவராக விளங்கியவர். பெரும் முதலாளி. கோவிட்19 பற்றி ஏதும் கவலைப்படாமல் அவரது வெள்ளை மாளிகையிலேயே பலருக்கும் பரவ காரணமாக இருந்து விட்டார். தலைவர் எவ்வழி அந்த நாடும் அவ்வழி என்று இந்த அமெரிக்க நாடு 4 வருடமாக தடம் புரண்டு போய்க் கொண்டிருந்தது.இந்த மனிதரை இங்கு உள்ள பிரதமர் கட்டித் தழுவி சுற்றுச் சுவர் எழுப்பி நமது மக்கள் நிலை மறைத்து விருந்து வைத்து கொண்டாடியதை எவரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது .கேட்டால் இதெல்லாம் இன்டர்நேசனல் டிப்ளமசி என்பார்கள்...இவரும் உலகை சுற்றி அவரும் உல்லாச வாசி கேட்பானேன்
இதில் சொல்லத் தக்க இரண்டாம் பகுதி என்ன வெனில் : கமலா ஹாரிஸ் என்ற இந்திய வம்சாவளிப் பெண் முதல் பெண் துணைக் குடியரசுத் தலைவராகியதும், முதல் கறுப்பினப் பெண் அப்படி துணை குடியரசுத் தலைவர் ஆனதும் அதுவும் ஆசிய இந்திய வம்சாவளி ஆகி உள்ளதும் நாமெல்லாம் பெருமைப் படத்தக்கது.
அது மட்டுமல்ல இப்போது 46 வது குடியரசுத் தலைவராகி இருக்கும் ஜோ பைடன் (ஜோ பிடன் என்றும் சொல்லலாம்) 78 வயது முதியவர் குடியரசுத் தலைவரன அமெரிக்க வரலாற்றிலேயே அதிக வயதில் இந்த பதவிக்கு வந்திருக்கிறார்.
இவரின் முதல் வார்த்தை பொன் எழுத்துகளால் பொறிக்கப் பட வேண்டியது: நீங்கள் எதிர்க் கட்சிகளில் இருக்கலாம் ஆனால் நீங்கள் என் எதிரிகள் அல்ல...அனைவரும் சேர்ந்து செயல்பட்டு நல்லவைக்கு செயலாக்கம் தருவோம் என்பதாகச் சொல்லி இருக்கிறார். அனுபவம்..
ஆனால் இப்படி ஒரு மாறுதல் வருவதாலே உலகே மாறி விடப் போகிறதா? சட்டாம்பிள்ளை அண்ணண் அமெரிக்கா உலகு நாடுகளுக்கு வழி விடப் போகிறதா? வழிகாட்டப் போகிறதா? என்பதெல்லாம் அவர்கள் ஆள்வதைப் பொறுத்தே...ஆனால் அந்த அநியாயக் காரன் ஆணவக்காரன் என அனைவராலும் கருதப் பட்ட ட்ரம்ப் அளவுக்கு மோசமாக இருக்காது என நம்புவோமாக...
இந்நிலையில் ரசியாவின் புடினுக்கு பர்கின்ஸன் நோய் இருப்பதாகவும் அவருக்கு மாற்றை கூடிய விரைவில் அறிவிப்பார் என்றும் புடின் மனைவி, குழந்தைகள், குடும்பம் அவர் உடல் நிலை கருதி விரைவில் பதவி விட்டு இறங்குங்கள் என வலியுறுத்தி வருவதான செய்திகளும் இன்று...
இத்தோடு நிறுத்திக் கொள்வோம்...ஏனெனில் இந்திய , தமிழக அரசியல் என்று நாம் பேச ஆரம்பித்தால் சேவை செய்யத் தான் உனக்கு அனுமதி அங்கீகாரம் எல்லாம் அதெல்லாம் கேட்கக் கூடாது என்ற எனது நண்பர்களே கேட்க ஆரம்பித்து விடுவார்கள்...
நீண்ட காலம் ஆகிவிட்டது எழுதியே...
நாட்கள் அப்படித்தான் சென்று கொண்டிருக்கின்றன
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
நன்று!
ReplyDeletethanks for your comment on this post
Delete