மாதவன் எனை மாற்றினார்/மாதவம் எனை மாற்றியது: கவிஞர் தணிகை
தமிழில் நிறைய மருத்துவ முறைகள் என நல் வாழ்வுக்கு வழி காட்ட உண்டு. உடலை தூய்மைப்படுத்த, உணவு உட் கொள்ள,என எல்லாப் பக்கங்களுக்கும் தமிழ் வழியில் கொட்டிக் கிடக்கும் வழிகாட்டும் வழி நிறை முறைகள் ஏராளம். இன்று இப்போது நாம் சொல்ல முயல்வது உணவு உண்ணும் முறை பற்றி மட்டுமே.
பற்களை சில வகையில் மனித உடல் கொண்டிருப்பது கடித்து உண்ண, அரைத்து உண்ண, கொறித்து உண்ண இப்படி சில வகையான வேலைகளை அவை செவ்வனே செய்ய .அதன் பின் உமிழ் நீர் கலந்து உணவை நீராகாரமான பின்னே அப்படியே விழுங்க வேண்டும். கட்டியாக உணவே உள்ளே போகக் கூடாது. இதையே நொறுங்க பிசைந்து தின்றால் நூறு வயது வாழலாம் என்ற பழமொழியும் வாய்க்கு உணவு செல்வதற்கு முன்பே அதை நொறுங்க பிசைந்து அனுப்ப வேண்டும் என்கிறது.
குழந்தையாய் இருக்கும் போது தாய் தனது குழந்தைக்கு எப்படி ஊட்டுகிறார் என்பதை கவனித்தால் அது எளிதில் விளங்கும். உணவை நன்கு பிசைந்து மைய வைத்து உருட்டி உருண்டையாக கொடுப்பார்.
நாம் பசியாக இருக்கும் போது இப்படி எல்லாம் ஆற அமர உண்பது சாத்தியமா என்றால் பழக்கத்தால் எல்லாம் சாத்தியமே, சொல்வதை அப்படியே கடைப் பிடிப்பது என்பது கடினம் தான் ஆனால் ஒரு திண்ணமான தீர்மானத்துக்கு வந்து அதை பல நாட்கள் கடைப் பிடிக்க ஆரம்பித்து அது ஆண்டுக் கணக்காக மாறி விட்டதென்றால் எதுவும் கை கூடும்.
கெட்ட பழக்கங்களை கைக் கொள்ளும் மனிதரால் ஏன் நல்ல பழக்கங்களைக் கைக் கொள்ள முடியாது. தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது என்பது கூட ஆரம்பத்தில் இரவில் உணவை முடித்து உடன் செய்வது சிறிது காலத்துக்கு விட்டு விட்டு அல்லது தொடர்ந்து செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் அது அப்படி பழக்கமாகிவிட்டால் என்னே ஒரு சுகம். அதனால் கிடைக்கும் பலனோ உடல் நலத்துக்கு மிக அதிகம்.
சரி மாதவன் சொல்வதை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் சொல்ல வேண்டுமென்று தோன்றியது:அவர் ஒரு பன்மொழி நடிகர் மட்டுமல்ல, நல்ல பயிற்சியாளர் பாதுகாப்பு படைக்கு என்றும், ஒரு நல்ல மனிதர் என்றும் அவரது காணொலிகளைக் காணும்போது தெரிய வந்தது.
முதலில் ஹார்வேட் பல்கலைக் கழகத்தில் பேசி இருந்ததைக் கேட்டேன் .சிறிது காலத்துக்கும் முன் உணவைக் குடியுங்கள், நீரை மெல்லுங்கள் என்ற ஒரு காணொலி கண் கொள்ளாக் காட்சியாகி விருந்தானது எனக்கு. அதை நானறிந்த அனைவர்க்கும் பயனடைய அனுப்பி பகிர்ந்தேன்.எனக்கு அது க்ளோஸ் யுவர் ஐஸ் ஷீ த வேர்ல்ட்: கண்களை மூடிக் கொண்டு உலகைப் பார், ஓபன் யுவர் ஐஸ் ஃபர்கெட் த வேர்ல்ட்...கண்களைத் திற உலகை மற என்ற தியான வாசகத்தை நினைவு படுத்தியது.
ஹீலர் பாஸ்கர் கூட நன்றாக அரைத்து உணவை மென்று உண்ணுங்கள் எனப் பேசி இருந்ததைப் பார்த்திருக்கிறேன். வடையில் உண்ணும் போது பருப்பு, வெண்டைக் காய் போன்றவற்றில் உள்ள விதைக் கொட்டைகள் போன்றவை மலத்தில் சென்றால் நீங்கள் சரியாக உணவை மென்று உண்ணவில்லை என்பதை தெரிவிப்பது என கூச்சமில்லாமல் சொல்வார். இதை எல்லாம் பேச நாம் கூச்சப் படத் தேவயில்லை. பேசாமல் இருப்பதற்குத் தான் உண்மையிலேயே கூச்சப் பட வேண்டும்.
மாதவன் இந்தக் காணொலியிலும் அப்பண்டிக்ஸ்( குடல் வால் நோய) இரு மனைவி மனோஜ் டாக்டர் பற்றி பேசி இரண்டாம் முறை திருப்பி பார்ப்பவரை தனது பேச்சை கவனிக்க வேண்டும் என நகைச்சுவை என்ற பேரில் பேசி இருக்கிறார். ஆனால் அவர் சொல்லி இருந்த மற்ற எல்லா கருத்துகளும் முத்துகள் மனித குலத்துக்கு தேவையான மணிகள் வைரங்கள்.
மிகுந்த தசை வலிமையுடைய உயிரினம் எருது அது உண்பதோ பச்சைப் புல் என்னும் இவர் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க யானைக்கு உள்ள உயிரியில் மூலக்கூறு டி.என்.ஏ ஒற்றுமை 98க்கும் மேல் என்பதும் ஆனால் சிம்பன்ஸி குரங்குக்கும் மனிதர்க்கும் உள்ள டி.என்.ஏ உடல் மூலக் கூறு ஒற்றுமை 99.2 என்கிறார். எனவே உண்பது உறங்குவது கலவி எல்லாமே இரண்டு வகையான உயிரிக்கும் பொதுவாகவே இருக்கிறது என்று குறிப்பிடும் மாதவன்...
ஆஸ்திரியா மிகுந்த பொருட் செலவு செய்து சென்று அங்கு கொடுக்கும் பயிற்சி பெறச் சென்றதாகவும் ஆனால் அங்கே பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்கள் தாம் அதை இந்தியாவில் இருந்தே கற்று எடுத்து வந்து உலகிற்கு பயிற்சி அளிப்பதாகவும் சொல்லி உள்ளதைக் குறிப்பிட்டு
நீங்கள் என்ன சிற்றுண்டு சாப்பிடுவீர் என்பதற்கு இட்லி தோசை ஆம்லெட் என்றாராம், சரி என அடுத்த நாள் காலை இவரைப் போல் பயிற்சிக்கு சென்றவரை எல்லாம் ஒரு சேர அமரச் செய்து 4 ரொட்டித் துண்டுகள் மற்றும் ஒரு கிண்ணம் சூப் அளித்தனர் என்றும் இதுவே உங்களுக்கு 3 நாளுக்கு போதுமானது என்றும், நீங்கள் இந்த ரொட்டியை நன்கு கடித்து மென்று நீராகும் அளவுக்கு வாயில் வைத்திருந்து அதன் பின் உள் அனுப்ப வேண்டும் என்றனராம்.
அப்படி உண்ணும் போது அதன் சுவை அதிகமாகிறது என்றும் மற்றும் பெரும் அளவில் நம்மால் உணவை உண்ண முடிவதில்லை என்றும் சுமார் 15 நிமிடம் உணவை மென்று உண்டால் போதும் என மூளை நமக்கு உணர்த்தி விடும் என்றும் சுவையாகக் கூறினார். அதே போல நாம் குடிக்கும் நீரை சிறிது சிறிதாக வாயில் வைத்து சில நிமிடம் மென்று வாயில் வைத்திருந்து விழுங்கும்போது அதில் உள்ள தனிமங்கள், கனிமங்கள் எல்லாம் நமக்கு சக்தியாக மாறும் என்றும் இதுவே நமது இளமையை தக்க வைக்கும் என்றும் வயிறுதான் நமது இரண்டாம் மூளை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நமது உடற்பயிற்சியின் போது இரத்த ஓட்டம் நடைபெறுவதற்கும் இருதயம், நுரையீரல் ஆகியவற்றை விட நமது வயிறுதான் பெரும் பங்கு வகிக்கிறது என்றும் அடி வயிறுதான் நமது இரத்த சக்தியை தோற்றுவிக்கும் இடம் என்றும் குறிப்பிடுகிறார்.
இதில் சொல்லப் பட்டுள்ள கருப்பொருள் புதிதல்ல என்ற போதிலும் சொல்லிய விதமும், அதைக் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியத்துவமும் இந்தக் காணொலியை நாம் அறிந்த அனைவரும் பார்த்து பலன் பெற வேண்டும் என்ற எண்ணத்தை நமக்குள் விளைத்து விடுகிறது. விதைத்து விடுகிறது.
நன்றி மாதவன்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment