Sunday, November 15, 2020

குடியா முழுகி விடும்? கவிஞர் தணிகை

 குடியா முழுகி விடும்? கவிஞர் தணிகை



அந்த இளைஞர்க்கு 30 வயதுள். இரண்டு சிறு குழந்தைக்கு தந்தை . நான் நடைப் பயிற்சிக்கு போகும் சில நாட்களில் பார்த்து முகமன் கூறினார். திடீரென அண்ணா நீங்கள் எனக்கு வழிகாட்ட வேண்டும் நான் இங்கேயே தொழில் செய்யவா? சேலம் செல்லவா என்றார். எங்கு தொழில் சிறப்பாக இருக்குமோ செல்லலாம். உங்களுக்கும் உங்கள் மாமாவுக்கும் அது இருவருக்குமே நன்மை தர வாய்ப்புள்ளது என்றேன்.


அவரை சிறிய வயதில் இருந்து நான் பார்த்திருக்கிறேன். அவரது மாமா வீட்டில். இப்போது மதுவுக்கு அடிமையாகி முகம் எல்லாம் ஊதிப் போய்க் கருத்துக் கிடந்தது. எனது காலில் விழுந்தார். நான் அவருடன் நடக்க கூசினேன். ஆனாலும் அவர் எனைத் தொடர்ந்து எனைக் காலில் விழுந்து வணங்குகிறேன் உங்கள் ஆசி வேண்டும் என்றார்.


ஆசி கொடுப்பது என்பது பணம் வேண்டும் என்ற சூசக வாசகம் அது... நான் அவரிடம் சிக்காமல் கிளம்ப ஆரம்பித்து விட்டேன். அவர்களுடைய குடி முழுக ஆரம்பித்து விட்டது என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?


சாலையின் ஓரம் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அந்த இரு மனித‌ரும் அது பொதுச் சாலை என்றும் பாராமல் ப்ளாஸ்டிக் டம்ளரில் மதுவை ஊற்றி ஆளுக்கு ஆள் பகிர்ந்து கொண்டிருந்தனர் அதில் நீர் பாக்கெட்டிலிருந்து நிரப்ப ஆரம்பித்தனர்...இது ஆய்த பூஜை மது விற்பனையை அடுத்து தீபாவளி  மது விற்பனைக் காலக் கட்டக் காட்சிகள்.


அடுத்து அந்த ஆட்டுக் கால் சூப் சில்லி சிக்கன் தள்ளு வண்டிக் கடை வழக்கம் போல அங்கு வாடிக்கையாளர்கள் மொய்த்துக் கிடந்தனர். அங்கு எவர் எந்தக் கடை போட்டி போட்டாலும் அந்தக் கடை வழக்கம் போல வாடிக்கையாளர் குறையாமல் இருந்து வந்தது ஒரு நாள் அதன் வெற்றிக்கு என்ன காரணம் எனக் கேட்டுப் பதிவிடலாம் என்ற எண்ணம் எண்ணத்தோடு மட்டுமே இருப்பது எனக்கு நல்லது.


அடுத்து அங்கே மாலை வேளையில் பல இளைஞர்கள் கைப்பந்து ஆடிக் கொண்டிருந்ததை கவனித்திருக்கிறேன்.

அது இப்போது இல்லையே ஏன் ? அந்த இளைஞர்களுள் ஒருவரைப் பார்த்தேன் ஏன் இப்போது விளையாடுவதில்லை எனக் கேட்டேன்...அங்கே விளையாடக் கூடாது என்று காவல் துறையினர் சொல்லி விட்டனர் என்றார். அது யார் நிலம் என்று கேட்டேன்? எங்கள் நண்பர் ஒருவர் அங்கே விளையாடும் இளைஞர் ஒருவரின் தந்தை வாங்கிப் போட்டிருக்கும் நிலம் தாம் என்றார் 


அப்புறம் ஏன்? என்ன காரணம்? என தெரிந்த மட்டைப் பந்து ஆடும் இளைஞர் ஒருவரிடம் கேட்டேன்...

மட்டைப் பந்து ஆடும் இடத்தில் வேறு எந்த விளையாட்டும் தழைத்தோங்கி செழிக்க விடாது என்று நண்பர் உடற்பயிற்சி ஆசிரியர் சொல்லியது நினைவிலாட ...இல்லை சார் அப்படி எல்லாம் இல்லை...இங்கே உள்ள உள்ளூர் இளைஞர்கள் அவர்களிடம் இணைந்து சேர்ந்து விளையாட ஆரம்பித்து கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி சண்டை சச்சரவில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். 


இவர்களை அந்த படித்த இளைஞர்கள்  விளையாட்டில் சேர்த்தாதிருந்திருந்தால் நீடித்த நாளுக்கு நெடு நாளுக்கு அவர்கள் விளையாடிக் கொண்டிருந்திருக்கலாம் ஆனால் இவர்கள் அப்படி குறுக்கீடு செய்து சண்டை செய்ததன் காரணமாக காவலர்கள் வரை பிரச்சனை சென்று அவர்கள் வந்து விளையாடும் கைப்பந்து வலையை எடுத்துச் சென்று விட்டனர் காரணமாக கோவிட் காலத்தில் நிறைய இளைஞர்கள் சேர்ந்து இப்படி விளையாடக் கூடாது என்பதாக சொல்லி விட்டனர் என்றனர்...


புகார் வரக் கூடாது பிரச்சனை ஏற்படக் கூடாது என்ற காரணம் காட்டி காவல் துறை நடவடிக்கை எடுத்தது சரியா? இல்லை எந்தக் காரணமோ அதைக் களைந்து இளைஞர்களை ஊக்குவித்து விளையாடச் சொல்வது சரியா என்பதெல்லாம் நமக்குப் புரியவில்லை...


காரணம் மது பானக் கடையால் கோடிக்கணக்கான வருவாய் பெறும் தொழில்  அமைப்பு சார்ந்த சமுதாயக் கட்டமைவுக்கு நமது அரசு பெரும் காரணமாக இருக்கிறது...அதனால் எந்தக் குடி கெட்டால்தான் என்ன? இந்தக் குடி கொடி நாட்டினால் சரிதான்....இலக்கு தீபாவளிக்கு நிறைவேறி இருக்கும் என்பதில் எவரும் ஐயப்பட அவசியமில்லை... சாதனை நிகழ்ந்திருக்கும் சில நாள் செய்தியை கவனித்தால் அந்தப் புள்ளி விவரம் கிடைக்கும்.





மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


4 comments: