அன்பே அப்துல் கலாம்:
என்ற உங்கள் அர்ப்பணிப்பைத் தாங்கிய அரிய நூலை விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி இணை டீன்(அசோசியேட் டீன்) பேரா.மரு.சுரேஷ்குமார் அவர்கள் எனக்கு 10.11.2020ல் பரிசளித்தார். அதைப் படித்து முடித்ததுமே உங்களைத் தொடர்பு கொள்ள விரும்பினேன். அது இன்று முடிந்திருக்கிறது.
உங்கள் இருவருக்குமே எனது நன்றியறிதல் உரித்தாகட்டும்.
எனக்கும் கலாம் கடிதம் எழுதி இருக்கிறார். பொருள்: இலஞ்ச ஒழிப்பு.
அவருடன் நானும் தொடர்பில் இருந்திருக்கிறேன் என்பது எனது வாழ்வின் ஒரு மைல் கல்.எனக்குப் பிடித்த மாமனிதங்கள்: மகாத்மா,அன்னை தெரஸா,கலாம். மூவருடனும் ஏதோ ஒரு வகையில் நான் பின்னிப் பிணைந்துள்ளேன்.
அடியேனும் 11 சிறு நூல்களை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு வழங்கி இருக்கிறேன். எனது பெயர் கவிஞர் தணிகை. எழுத்தாளர், சுதந்திரப் பத்திரிகையாளர் மற்றும் சமூக மேம்பாட்டுச் செயல்பாட்டாளர் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
எனது சிறு அறிமுக குறிப்பை உங்களுக்கு வழங்கி இருக்கிறேன்.
நான் உங்களைத் தொடர்பு கொள்ளக் காரணமாக இருந்த சுரேஷ்குமார் அய்யா அவர்களுக்கும், உங்களுக்கும் எனது வணக்கங்களும், நன்றிகளும், பாராட்டுகளும் என்றும் உரித்தாகட்டும்.
விதையின் சதை கிழித்து வெடுக்கென்று வெளி வரும் செடி போல...அதிமிடுக்காய்,அடுக்கடுக்காய்...
நீ மொண்டு குடித்த விஞ்ஞானத் தேன்..
தேசியக் கொடி கம்பத்தின் உயரத்தை விண்வெளிக்கு விரிவு படுத்தினாய்...
உன் ஏவுகணைச் சேவல்....
உன் புன்னகை வாசம் விண்ணைத் தாண்டி பயணம் செய்யும்
நெருப்பு முனையில் உற்பத்தியான நீரின் சுனை...
ஒரு ராணித் தேனீயைப் பின் பற்றி...நாடே குவிய வேண்டும்...
நதிகளை கைகோர்க்க வைத்து நடந்து வர நாடு முழுக்க வீதி செய்வோம்
நீயோ குள்ளம் உன்னிலிருந்து பொங்கி வந்த நம்பிக்கையோ வெள்ளம்
வான் பற்றி அறிவது தேனுறிந்து குடிப்பது மாதிரி சுகமாய் இருந்தது...
விஞ்ஞான தியானம்
நிதிப் பற்றாக்குறை,மதிப்பற்றாக் குறை வராமல்...
வானைப் அளக்கப் பிறந்தவனல்ல நீ
பிரபஞ்சத்தையே அளக்கப் பிறந்தவன்
இருநூற்றைம்பது ரூபாய் சம்பளம்
உள்முகமாய்த் தேடு ஒளிமுகம் தெரியும்.
பேதலிக்கும் மனதிற்கு பூ, தெளித்தது மாதிரி...
ஏளனப் பேச்சுகளை காலணித் தூசுகளாய் விட்டு விட்டோம்...ஆசம் AWESome...கிரேட்...
கால் வேண்டுமானால் இடம் மாறலாம் இதயம் இஸ்ரோவில்தான்
முயற்சி தீபம் எரிகிற வரைக்கும் தோல்வி பொருட்டல்ல இருட்டல்ல...
அறிவியல் ஆய்வுக் கூடங்கள் அரவணைப்பு
கல்வி நிலையங்கள் கரப்பிணைப்பு...
இந்திய விஞ்ஞானிகளின் முழு முனைப்பு மூன்றும் சேர்ந்தால் முடியாது என்பதே கிடையாது...
பொறியியல் விற்பன்னர்கள் பொருள் வாய்ப்பு எனும் பொறியிலே சிக்கி ....
சொந்த சமையலில் வெந்த உணவு
தோல்வி எனும் கருவறையிலிருந்தே வெற்றி வளர்கிறது...
வானுக்கு மேலேயும் முடியாதது ஒன்றுமில்லை...
எல்லாவற்றையும் மீறி கண்ணுக்கு ஒற்றிக் கொள்ளுமளவு படங்கள்...
அவர் வாழ்வை ஆவணப் படுத்தி விட்டீர் உங்களால் முடிந்த அளவு...
இப்படி எல்லாமே அரும் பெரும் வார்த்தை வளத்துடன் மறக்க முடியா சுகத்துடன்...நான் அனுபவித்தேன் தேன் அமிர்தம்...
நமது நட்பு கலாம் என்ற மையப்புள்ளியுடன் தொடரும் சுழலும் நீளும் என்று நம்புகிறேன்
இவண்
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
நன்று!
ReplyDeletethanks. vanakkam.
ReplyDelete